என்ன ஜனநாயகம் இது..?

01-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நமது அரசியல்வியாதிகளுக்கு அரசுப் பணம் என்பது தங்களது சொந்த வீட்டுப் பணம் என்பதாகத்தான் நினைப்பு.. அரசு என்பதே தங்களுக்காகத்தான் என்கிற கருத்தில் அத்தனை பேரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறீர்கள்.

அதற்கு இன்னுமொரு உதாரணம்.. தற்போது மூன்று தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து அங்கே தேர்தலுக்கு வழி வகுத்திருப்பதுதான்.

திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வீர. இளவரசன் அகால மரணமடைந்தார். அதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம். இது தவிர்க்க முடியாதது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. ஒத்துக் கொள்ளலாம்.

"தனக்கு கட்சியில் மரியாதை இல்லை. தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை.. தான் சொன்ன நபர்களுக்கு கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை. அரசுப் பணிகளில் தன் ஆதரவாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தான் கை காட்டியவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவில்லை"- இப்படி பலவித பொதுநல கோரிக்கைகளை வைத்து அவை நிறைவேறாத கோபத்தில், இளையான்குடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கண்ணப்பன்.

மேலே சொன்னவைகளெல்லாம் என்ன மக்களின் கண்ணீரைத் துடைக்கும் பொது நலச் சேவைகளா..? அக்கிரமமான ஜனநாயக விரோதமான நடவடிக்கைகள், செயல்கள்.. ஆனால் இவை அத்தனையையும் பகிரங்கமாக பத்திரிகைகளில் தெரிவித்துவிட்டு தனது தாய்க்கழகத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்யப் போகிறாராம் இந்த நல்லவர்..

அடுத்தவர் இன்னுமொரு கண்ணப்பன். கோவை மாவட்டம் தொண்டாமுத்துர் தொகுதியின் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

இவருக்கும் இவருடைய கட்சித் தலைமைக்கும் இடையில் வாய்க்கால், வரப்பு பிரச்சினை. நேரில் சந்தித்துப் பேசித் தீர்த்திருக்கலாம். முடியவில்லையாம். அதனால் கட்சியைவிட்டு விலகுகிறாராம். கூடவே பெரும் சுமையாக இருக்கிற எம்.எல்.ஏ. பதவியையும் சேர்த்து ராஜினாமா செய்துவிட்டார்.. ஏற்கெனவே மக்கள் சேவை செஞ்சு ரொம்பக் களைச்சுட்டார் போலிருக்கு..

மூன்றாமவர் கம்பம் ராமகிருஷ்ணன். இவருக்கும் கண்ணப்பனுக்கு வந்த அதே நோய்தான்.. அவருடைய கட்சித் தலைமையுடன் ஒத்துப்போகவில்லையாம். உடனே கட்சி தாவுதல்.. பதவியை ராஜினாமா செய்யுதல்..!

அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி என்ன கடையில் வாங்கிய கருவேப்பிலையா. பிடிக்கவில்லையென்றவுடன் தூக்கியெறிந்துவிட்டுப் போக..?

ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்வரையில் செலவு செய்கிறது. இது அத்தனையும் இந்திய மக்களின் பணம்.. நம்முடைய பணம்..

தேர்தலில் நிற்கும்போது அதைப் பிடுங்குவேன்.. இதைக் கிழிப்பேன்.. என்று வாய்கிழியப் பேசிவிட்டு முடியாதபட்சத்தில் எதையும் செய்யாமல் வீட்டில் படுத்துத் தூங்கித்தான் தொலைய வேண்டியதுதானே.. எதற்கு ராஜினாமா செய்து இன்னொரு 5 கோடி ரூபாயை காலி செய்ய வேண்டும்..?

இவர்களுடைய சொந்தக் காசு என்றால் இது போல் போனால் போகுது என்று விட்டுவிடுவார்களா..? என்ன முட்டாள்தனம் இது..? கேட்பாரே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது இந்த முட்டாள்தனமான நமது நாட்டு ஜனநாயகம்..

அடுத்தக் கட்சியில் இப்போதே சேர்ந்தால்தான் அடுத்த தேர்தலில் சீட் பிடிக்க முடியும் என்கிற வெறி.. வேறு ஒண்ணுமேயில்லை.. பதவி வெறிதான்.. இப்படித்தான்யா அத்தனை பேரும் அலையறாங்க அத்தனைக் கட்சியிலேயும்.. ஒருத்தன் பாக்கியில்லை.. என்னத்த வெச்சு இவனுகளை அடிச்சா புத்தி வரும்னு தெரியலை..!

ஆளும்கட்சிக்கு என்னவென்றால் எதிர்க்கட்சியின் டிவி 'அல்லேலூயா' சொல்வதைப் போல் 'மைனாரிட்டி ஆட்சி; மைனாரிட்டி ஆட்சி' என்று அலறுவதை நிறுத்த வேண்டுமாம்.. கூடுதலாக 3 எம்.எல்.ஏ.க்களைக் கூட்டிக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கும் புள்ளிவிபரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்கிற அவர்களுடைய பதவி வெறிக்காகத்தான் நமது பணம் 15 கோடி ரூபாய் வெட்டியாகச் செலவாகப் போகிறது..!

இதையெல்லாம் எப்படி சகித்துக் கொள்வது..?

இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

இன்றைக்கும்..................... ரொம்ப தூரம் போக வேண்டாம்..

நம்ம மாநிலத் தலைநகரமாம் சிங்கார சென்னைக்குப் பக்கத்தில் பொன்னேரி பக்கத்துல இருக்குற ஒரு ஊர்ல இருந்து மெயின் ரோட்டுக்கு வர்றதுக்கு பாதையே கிடையாது.. நடுவுல ஓடுற ஆத்தைக் கடந்துதான் வரணுமாம்.. அந்தக் கிராமத்துல இருந்து பொன்னேரி ஸ்கூலுக்கு படிக்க வர்ற பிள்ளைக புத்தகத்தைத் தூக்கி தலைல வைச்சுக்கிட்டு, இடுப்பு அளவு தண்ணில நடந்து வர்றாங்க.. கரைக்கு வந்தவுடனேயே கையோடு கொண்டு வந்த துண்டால உடம்பைத் துடைச்சிட்டு, அப்படியே யூனிபார்ம் டிரெஸ்ஸை எடுத்து அங்கனதான் மாத்திட்டு ஸ்கூலுக்குப் போறாங்க. இது இன்னிக்கும் நடக்குது.. அன்னிக்கு பேப்பர்ல போட்டோவ பார்க்கும்போது நாட்டை நினைச்சு வெறுப்பா இருந்தது.

இன்னிக்கு ஒருத்தருக்கு மரியாதை இல்லையாம்.. இன்னும் ரெண்டு பேருக்கு தன்னை யாரும் சந்தேகப்படக் கூடாதாம்.. அவ்ளோதான் மக்கள் பணி செய்ய மாட்டாங்களாம்..! என்ன எழவு மக்கள் சேவையோ இது..! இவுங்களையெல்லாம் அரசியல்ல இருந்து தொலைச்சாத்தான் வெளங்கும்..!

எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவை பாரு.. அதைப் பாரு.. இதைப் பாருன்னு வீர வசனம் மட்டும் பேசத் தெரிந்த சண்டியருங்க இவுக.. அமெரிக்கால இருக்குற மாதிரியான ஜனநாயகத்தையாவது நமக்குக் கொடுக்கக் கூடாதா..?

ஒரு பிரதிநிதி பிடிக்கலைன்னா தொகுதி மக்கள்ல 3-ல 2 பங்கு பேர் ஓட்டுப் போட்டா, அவரை வீட்டுக்கும் அனுப்ப முடியுமாம்.. மறுபடியும் தேர்தல் வைங்கன்னு சொல்லவும் முடியுமாம்..

அது ஜனநாயகம்யா.. இது..!?????????????

36 comments:

வால்பையன் said...

//இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.//

அப்துல்கலாம் சொன்னாலும் சொன்னாரு எல்லோரும் பகல்லயே கனவு காண்றாங்க!

அரசு மக்களுக்காக ஒரு புல்லை கூட புடிங்கி போடாது!
இந்த மாதிரி இடைத்தேர்தல் வந்தால் ஓட்டுக்கு ஐய்யாயிரம் கிடைக்கும்!
நம்ம காசு நமக்கேன்னு ஆறுதல் அடைசிங்க்க வேண்டியது தான்!

வண்ணத்துபூச்சியார் said...

நெத்தியடி..

பதிவிற்கு நன்றி.

நித்யகுமாரன் said...

கொஞ்சம்கூட நன்றியில்லாத இந்த பச்சோந்திகளால் நம் நாடு நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இவர்களின் அரிப்புக்கு நம்முடைய பணம் வண்டிவண்டியாய் கொள்ளை போவது கொடுமையிலும் கொடுமை.

என்ன எழவு இது?

நாசமாப் போகக் கடவது.

உண்மைத்தமிழனின் இந்த பதிவுக்கு என் வணக்கங்கள்.

அன்பு நித்யன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...
//இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.//

அப்துல்கலாம் சொன்னாலும் சொன்னாரு எல்லோரும் பகல்லயே கனவு காண்றாங்க!

அரசு மக்களுக்காகஒரு புல்லை கூட புடிங்கி போடாது!
இந்த மாதிரி இடைத்தேர்தல் வந்தால் ஓட்டுக்கு ஐய்யாயிரம் கிடைக்கும்!
நம்ம காசு நமக்கேன்னுஆறுதல் அடைசிங்க்கவேண்டியதுதான்!//

வாலு..

ஐயாயிரம் ரூபாய் கிடைக்காக அஞ்சு கோடி ரூபாயை மறக்கச் சொல்றீரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வண்ணத்துபூச்சியார் said...
நெத்தியடி..

பதிவிற்கு நன்றி.///

நன்றி பூச்சியாரே..!

நையாண்டி நைனா said...

சாமி...
உதயகீதம் படத்திலே மிஸ்டர் கவுண்டரை பார்த்து ஒரு ஆளு கேப்பாரு, தேங்காய்க்கு வெலை தெரியாமே இருக்கியே "இவ்ளோ நாளும் உள்ளே இருந்தியா?" அப்படின்னு.

எனக்கு இப்ப உங்களை பார்த்து கேக்கணும் போலே இருக்கு அண்ணே.

நையாண்டி நைனா said...

அண்ணே...
ஏப்ரல் 1 தினத்தை முன்னிட்டு, ஜனநாயகம், தேர்தல், அமெரிக்க ஜனநாயகம் இங்கே, மக்கள் ஒட்டு போட்டு திரும்ப கூப்பிடுறது,.... ஆகா.... இதைவிட ஒரு சிறந்த முட்டாள்கள் தினப் பதிவு இருக்க முடியுமா?

சிந்தனையிலே நீங்க.... எங்கேயோ போய்ட்டீங்க.....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...
சாமி...
'உதயகீதம்' படத்திலே மிஸ்டர் கவுண்டரை பார்த்து ஒரு ஆளு கேப்பாரு, 'தேங்காய்க்கு வெலை தெரியாமே இருக்கியே "இவ்ளோ நாளும் உள்ளே இருந்தியா?" அப்படின்னு.

எனக்கு இப்ப உங்களை பார்த்து கேக்கணும் போலே இருக்கு அண்ணே.//

அப்படியா..? உள்ளதான் இருந்தேன்னு நினைச்சுக்கோ தம்பி..

என்ன செய்யறது?

நம்மாளுக புதுசு, புதுசால்லாம் கண்டுபிடிக்கிறானுக.. அப்பப்பதான அதைப் பத்தி எழுத முடியும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...
அண்ணே...
ஏப்ரல் 1 தினத்தை முன்னிட்டு, ஜனநாயகம், தேர்தல், அமெரிக்க ஜனநாயகம் இங்கே, மக்கள் ஒட்டு போட்டு திரும்ப கூப்பிடுறது,.... ஆகா.... இதைவிட ஒரு சிறந்த முட்டாள்கள் தினப் பதிவு இருக்க முடியுமா?

சிந்தனையிலே நீங்க.... எங்கேயோ போய்ட்டீங்க.....//

மிக்க நன்றி நைனாஜி..

நான்கூட இப்படி ஒரு கோணத்துல சிந்திக்கவே இல்லியே..

அப்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்லியே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நித்யகுமாரன் said...
கொஞ்சம்கூட நன்றியில்லாத இந்த பச்சோந்திகளால் நம் நாடு நாசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இவர்களின் அரிப்புக்கு நம்முடைய பணம் வண்டி வண்டியாய் கொள்ளை போவது கொடுமையிலும் கொடுமை.

என்ன எழவு இது?

நாசமாப் போகக் கடவது.

உண்மைத்தமிழனின் இந்த பதிவுக்கு என் வணக்கங்கள்.

அன்பு நித்யன்//

தம்பி நித்யா..

பதில் வணக்கமும், நன்றியும்..

பார்த்து.. வீட்டுக்கு ஆட்டோ வந்திரப் போகுது..!

லக்கிலுக் said...

கட்சித்தாவல் தடைச்சட்டம்னா என்னண்ணு தெரியுமா அண்ணே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லக்கிலுக் said...
கட்சித்தாவல் தடைச்சட்டம்னா என்னண்ணு தெரியுமா அண்ணே?//

தெரியும் தம்பி..

அந்தச் சட்டத்தையே எதுக்காகக் கொண்டு வந்தாங்களாம் இந்த அயோக்கியர்கள்..

அவர்களுக்கு கிடைக்கும் மெஜாரிட்டியை அந்த அரசின் காலம் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள தங்களுக்காகவே அமைத்துக் கொண்ட சட்டம்தான் அது..

இப்போது இவர்களது சுயலாபத்துக்காக கட்சி மாறுகிறார்கள் என்பதைச் சொல்லி, இந்தச் சட்டத்தைக் காட்டி நம்முடைய பணம் 15 கோடியை காலி செய்யப் போகிறார்கள்..

இப்போது இவர்களை கட்சியைவிட்டு விலகு என்று சொன்னது யார்? தொகுதி மக்களா..? ஜெயித்துப் போய் சட்டமன்றத்தில் எங்களுக்காக பேசு என்றுதானே சொன்னார்கள்..?

லக்கிலுக் said...

அண்ணே!

நீங்க சொல்லுறாமாதிரி பார்த்தா இனிமேல் எம்.எல்.ஏ, எம்.பி. ஆகுறவங்க அஞ்சு வருஷத்துக்கு கட்சி மாறமாட்டேன்னு அக்ரிமெண்டு எழுதி வெச்சிட்டு தான் தேர்தல்லேயே போட்டி போடணும் போலிருக்கே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லக்கிலுக் said...
அண்ணே! நீங்க சொல்லுறா மாதிரி பார்த்தா இனிமேல் எம்.எல்.ஏ, எம்.பி. ஆகுறவங்க அஞ்சு வருஷத்துக்கு கட்சி மாறமாட்டேன்னு அக்ரிமெண்டு எழுதி வெச்சிட்டுதான் தேர்தல்லேயே போட்டி போடணும் போலிருக்கே?//

கண்டிப்பா..

கட்சில ஒதுக்கிட்டாங்க.. எனக்குப் பிடிக்கல.. ஒதுங்கிட்டேன்னு சொல்லு.. சட்டமன்றத்துல ஒரு மூலைல சீட் கேட்டு வாங்கிட்டு ஓரமாப் போய் உக்காரு.. ஆனா தொகுதியைப் பத்தி பேசு.. அஞ்சு வருஷம்வரைக்கும் நீ உசிரோட இருந்தா அதுவரைக்கும் உன்னை ஜெயிக்க வைச்சவங்களுக்காக வாதாடு.. போராடு.. நல்லது செய்யு.. அதுக்குத்தான உன்னை இவ்ளோ செலவு பண்ணி ஜெயிக்க வைச்சிருக்கோம்..!

இவங்க சொந்தக் காரணத்துக்காகவெல்லாம் ராஜினாமா பண்ணிட்டுப் போனா அதுக்கு மொய்யு நம்ம வீட்டுக் காசா..?

pappu said...

//////வால்பையன் said...
//இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.//

அப்துல்கலாம் சொன்னாலும் சொன்னாரு எல்லோரும் பகல்லயே கனவு காண்றாங்க!

அரசு மக்களுக்காகஒரு புல்லை கூட புடிங்கி போடாது!
இந்த மாதிரி இடைத்தேர்தல் வந்தால் ஓட்டுக்கு ஐய்யாயிரம் கிடைக்கும்!
நம்ம காசு நமக்கேன்னுஆறுதல் அடைசிங்க்கவேண்டியதுதான்!//

வாலு..

ஐயாயிரம் ரூபாய் கிடைக்காக அஞ்சு கோடி ரூபாயை மறக்கச் சொல்றீரே..!//////


கொஞ்சம் கணக்கு பண்ணுங்க, பாஸ். அதான் வராதேங்குறீங்களா? அந்த அஞ்சு கோடில தான் பாஸ் உங்க பங்கு 5000ரூ. இதே எல்லார் பங்கும் திரும்ப கிடைச்சிரும், பயப்படாதீங்க!

Joe said...

இந்த நாட்டிலே ஜனநாயகம் இருக்குன்னா நம்பிட்டு இருக்கீங்க? ஹைய்யோ ஹைய்யோ!

Venkatesh subramanian said...

சுடு ஜாஸ்தி ஆனால் யாருக்கு உரைக்க போகுது

ராஜ நடராஜன் said...

//ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்வரையில் செலவு செய்கிறது. இது அத்தனையும் இந்திய மக்களின் பணம்.. //

இவர்கள் நினைத்தவுடன் கட்சி மாறுவதும் நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் அதனைக் கேட்காமல் இருப்பதும் சட்டத்தின் எந்தப் பிரிவில் இவர்கள் இந்த செயலை செய்கிறார்கள் என்று சட்டவல்லுனர்கள் யாரையாவது கேட்டுச் சொல்ல இயலுமா?

இந்தப் பதிவு முக்கியமானதும் கூடவே சட்ட ஓட்டைகள எதிர்காலத்தில் அடைக்க இயலுமா என்பதற்கும் உதவும்.

jackiesekar said...

அது ஜனநாயகம்யா.. இது..!?????????????

நல்ல கேள்வி,

மணிகண்டன் said...

இன்னும் ரெண்டு வாரத்துல Sve சேகர் ராஜினாமா பண்ணுவாரு. அப்ப இதையே மீள் பதிவா போடலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///pappu said...
//வால்பையன் said...
// இந்த 15 கோடி ரூபாயில் எத்தனை, எத்தனை நல்லத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.//

அப்துல்கலாம் சொன்னாலும் சொன்னாரு எல்லோரும் பகல்லயே கனவு காண்றாங்க!

அரசு மக்களுக்காகஒரு புல்லை கூட புடிங்கி போடாது!

இந்த மாதிரி இடைத்தேர்தல் வந்தால் ஓட்டுக்கு ஐய்யாயிரம் கிடைக்கும்!
நம்ம காசு நமக்கேன்னுஆறுதல் அடைசிங்க்கவேண்டியதுதான்!//

வாலு..

ஐயாயிரம் ரூபாய் கிடைக்காக அஞ்சு கோடி ரூபாயை மறக்கச் சொல்றீரே..!//////


கொஞ்சம் கணக்கு பண்ணுங்க, பாஸ். அதான் வராதேங்குறீங்களா? அந்த அஞ்சு கோடில தான் பாஸ் உங்க பங்கு 5000ரூ. இதே எல்லார் பங்கும் திரும்ப கிடைச்சிரும், பயப்படாதீங்க!//

ம்ஹும்.. உங்களையெல்லாம் திருத்த முடியாதுங்கய்யா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Joe said...
இந்த நாட்டிலே ஜனநாயகம் இருக்குன்னா நம்பிட்டு இருக்கீங்க? ஹைய்யோ ஹைய்யோ!///

என்ன செய்யறது..? நம்பிக்கைலதான வாழ்க்கையே ஓடுது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Venkatesh subramanian said...
சுடு ஜாஸ்தி ஆனால் யாருக்கு உரைக்க போகுது///

உரைக்குதோ.. உரைக்கலியோ.. நம்ம கருத்தை உரக்கச் சொல்லணும் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜ நடராஜன் said...
//ஒரு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்வரையில் செலவு செய்கிறது. இது அத்தனையும் இந்திய மக்களின் பணம்.. //

இவர்கள் நினைத்தவுடன் கட்சி மாறுவதும் நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் அதனைக் கேட்காமல் இருப்பதும் சட்டத்தின் எந்தப் பிரிவில் இவர்கள் இந்த செயலை செய்கிறார்கள் என்று சட்டவல்லுனர்கள் யாரையாவது கேட்டுச் சொல்ல இயலுமா?

இந்தப் பதிவு முக்கியமானதும் கூடவே சட்ட ஓட்டைகள எதிர்காலத்தில் அடைக்க இயலுமா என்பதற்கும் உதவும்.///

சட்டம் என்பதையே அரசியல்வியாதிகள் தங்களுக்குச் சாதகமாகத்தான் திருத்திக் கொள்கிறார்கள்.

கட்சித் தாவல் தடைச் சட்டம் இதற்கு ஒரு உதாரணம்..

கட்சி தாவினால் பதவி போய்விடும் என்பதால் தாவாமல் இருப்பார்களே என்ற திருட்டுத்தனத்தில் உதித்ததுதான் அந்தச் சட்டம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///jackiesekar said...
அது ஜனநாயகம்யா.. இது..!?????????????

நல்ல கேள்வி,///

பதில்தான் எங்கேயிருந்து வரும்னு தெரியலை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மணிகண்டன் said...
இன்னும் ரெண்டு வாரத்துல Sve சேகர் ராஜினாமா பண்ணுவாரு. அப்ப இதையே மீள் பதிவா போடலாம்.//

முருகா.. மறந்துட்டனே.. இவர் வேற இருக்காரா..?

காமெடிக்கு ஒரு ஆள் வேணும்ல.. அதுதான்..

மாண்புமிகு பொதுஜனம் said...

எனது பின்னூட்டத்தை மட்டுறுத்தியுள்ளீர்கள்.ஏன்?
எனது பின்னூட்டம் வலிக்கிறதா?
இப்படிச் சொல்கிறேனே!

தமிழ் மாதங்களில் ஒன்றில்(பெயர் போடவில்லை)நான்கு கால் பிராணிகள்(பெயர் போடவில்லை)இயற்கை உந்துதலால் காமவயப்பட்டு
நம் போன்ற(பெயர் போடவில்லை)கூட்டத்தின் எதிரில் இணைவதற்கு அலைவது போல் அல்லவா இருக்கிறது?

ஒருக்கால் பதிவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டுமோ!

பொறுங்கள்.ஆர்.பி.ராஜநாயஹத்தைக் கேட்டுச் சொல்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//கட்சித் தாவல் தடைச் சட்டம் இதற்கு ஒரு உதாரணம்..//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி!கட்சித் தாவல் தடைச் சட்டம் இருந்தும் இப்படியொரு கூத்தா?அப்ப ஜனநாயகம் உருப்படும்.

மாண்புமிகு பொதுஜனம் said...

பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி.தங்கள் பதிவைப் படித்ததும் இந்த அரசியல்வாதிகள் மீது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக மனதில் தோன்றியதை அப்படியே தட்டினேன்....அச்சினேன்....சீ..இரண்டும் இல்லை.தட்டச்சினேன்.

பதிவிடுவதில் நயத்தகு நாகரீகம் கடைபிடிக்கும் தங்களுக்குப் பொதுஜனங்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

ம்..ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.

குடுகுடுப்பை said...

இடைத்தேர்தலை கண்டிப்பாக ஒழிக்கவேண்டும்.

குடுகுடுப்பை said...

அமெரிக்க அடி வருடின்னு பட்டம் கெடக்கப்போகுது அண்ணனுக்கு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மாண்புமிகு பொதுஜனம் said...

எனது பின்னூட்டத்தை மட்டுறுத்தியுள்ளீர்கள். ஏன்?
எனது பின்னூட்டம் வலிக்கிறதா?
இப்படிச் சொல்கிறேனே!

தமிழ் மாதங்களில் ஒன்றில் (பெயர் போடவில்லை) நான்கு கால் பிராணிகள் (பெயர் போடவில்லை) இயற்கை உந்துதலால் காமவயப்பட்டு
நம் போன்ற (பெயர் போடவில்லை) கூட்டத்தின் எதிரில் இணைவதற்கு அலைவது போல் அல்லவா இருக்கிறது?

ஒருக்கால் பதிவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டுமோ!

பொறுங்கள்.ஆர்.பி.ராஜநாயஹத்தைக் கேட்டுச் சொல்கிறேன்.///

ஒரு சிலர் அனுமதிப்பார்கள். நான் பொதுவாக அது போன்ற வார்த்தைகளையும், அர்த்தம் தரும் வாக்கியங்களையும் அனுமதிப்பதில்லை..

இப்போது தாங்கள் திருத்தியிருப்பது நல்லதே..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜ நடராஜன் said...

//கட்சித் தாவல் தடைச் சட்டம் இதற்கு ஒரு உதாரணம்..//

கிழிஞ்சது கிருஷ்ணகிரி! கட்சித் தாவல் தடைச் சட்டம் இருந்தும் இப்படியொரு கூத்தா? அப்ப ஜனநாயகம் உருப்படும்.///

கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பதே ஒரு கேலிக்கூத்து ராஜநடராஜன் ஸார்..

ஒரு ஆட்சிக் காலத்தில் மெஜாரிட்டி கிடைக்கப் பெற்ற அரசுகள், தங்களது மெஜாரிட்டி அந்த ஆட்சிக் காலம் முழுவதும் தங்களுக்குத் தங்குத் தடையில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படியொரு சட்டத்தையே கொண்டு வந்தார்கள்.

அதன்படி ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் வேறொரு கட்சியில் இணைந்தால் பதவியை கண்டிப்பாக ராஜினாமா செய்துவிட வேண்டும்.

கட்சித் தலைமையே உங்களை வெளியேற்றினால் ராஜினாமா செய்யத் தேவையில்லை.. அப்போது அவர் எக்கட்சியையும் சாராதவர் என்று அறிவித்துவிடுவார்கள்..!

இது எப்படி இருக்கு..?!

வேற கட்சில சேர்ந்து அந்தக் கட்சிக்கு மெஜாரிட்டியை சேர்த்துறக் கூடாது பாருங்க.. அதுக்காகத்தான்.

இதுலேயும் ஒரு இடைவிதி இருக்கு.. அதாவது மொத்த உறுப்பினர்களில் 3-ல் 1 பங்கு உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்தால் அப்போது இந்தச் சட்டம் அவர்கள் மீது பாயாதாம்..

1 பங்குக்குக் குறைந்தால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டுமாம்..!

எல்லாம் கொடுமைங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மாண்புமிகு பொதுஜனம் said...

பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி. தங்கள் பதிவைப் படித்ததும் இந்த அரசியல்வாதிகள் மீது ஏற்பட்ட வெறுப்பின் விளைவாக மனதில் தோன்றியதை அப்படியே தட்டினேன்.... அச்சினேன்.... சீ.. இரண்டும் இல்லை. தட்டச்சினேன்.
பதிவிடுவதில் நயத்தகு நாகரீகம் கடைபிடிக்கும் தங்களுக்குப் பொதுஜனங்களின் சார்பில் வாழ்த்துக்கள். ம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.///

புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//குடுகுடுப்பை said...
இடைத்தேர்தலை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்.//

நிச்சயமாக ஒழிக்க வேண்டும். ஆதரவிற்கு நன்றி குடுகுடுப்பை ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///குடுகுடுப்பை said...
அமெரிக்க அடி வருடின்னு பட்டம் கெடக்கப்போகுது அண்ணனுக்கு.///

எந்தெந்தப் பட்டத்தையோ வாங்கியாச்சு. இதை வாங்குறதுக்கென்ன? வாங்கிட்டா போச்சு..!