இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-17-04-2009

17.04.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆட்டோ டிரைவர்களின் புதுவித விளையாட்டு

உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதாரச் சூழலில் எங்கே காத்தாடுகிறதோ இல்லையோ ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆட்டோக்களின் வரிசை நீண்டு கொண்டே செல்வதைப் பார்க்க முடிகிறது.

மக்கள் காசை இறுக்கிப் பிடித்துக் கொள்ள ஆரம்பிக்க சும்மா உட்கார்ந்திருந்த டிரைவர்களுக்குள் தற்போது ஒரு புதுவித விளையாட்டு மோகம் பிடித்திருக்கிறது.

இரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.

யார் ஆரம்பித்து வைத்தது..? எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..

எப்படின்னாலும் விட மாட்டோம்ல..!

சினிமா தொடர்பான விழாக்களில் கலந்து கொள்ள வரும் இப்போதைய நடிகைகள் எப்படியாவது குறைந்தபட்ச ஆடை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்து, புகைப்படங்களில் சிக்கி மேலும் பரபரப்படைந்து வாய்ப்பு தேடுவது ஒரு பேஷனாகிவிட்டது.

இது போன்ற சமயங்களில் புகைப்படம் எடுக்கும் நிபுணர்களுக்கு மிகவும் கொண்டாட்டம்தான். புகைப்படங்களில் அப்படி, இப்படி என்று நடிகைகள் சிக்கிவிட்டால் அது நடிகைகளின் தவறாகத்தான் தோன்றுமே தவிர, புகைப்படம் எடுத்தவர்கள் மீது குற்றமாகாது என்பதால்தான் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள்.

வட இந்தியாவிலிருந்து கலைச்சேவை செய்ய வந்த நடிகைகள்தான் முதலில் இந்த ஆடைக் குறைப்பு அலங்கோலத்தை ஆரம்பித்துவைக்க இப்போது அதனையே அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்.

குறைந்த ஆடையுடன் பாதுகாப்பாக இப்படி போஸ் கொடுத்தாலும்..
காத்திருந்து சமயம் பார்த்து இப்படி புகைப்படம் எடுப்பதில் கில்லாடிகள் சினிமாவின் புகைப்பட நிபுணர்கள்.
இது போனஸுக்கு..உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை

சமீபத்தில் தமிழக அரசு ஒரு மிகப் பெரும் உதவியை உடல் ஊனமுற்றோருக்கு செய்திருக்கிறது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பேருந்துகளைத் தவிர மற்ற விரைவுப் பேருந்துகள், சாதாரணப் பேருந்துகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை வழங்கியுள்ளது.

தேசிய உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் சமூக நலத் துறையின் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால் அதற்கான சலுகை உத்தரவு உடனேயே கிடைக்கிறது.

ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. நான் இனிமேல்தான் அடையாள அட்டையே பெற வேண்டும். அடையாள அட்டை கிடைத்துவிட்டால் பஸ் பாஸ். கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.

'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?

திரையுலகின் கதாநாயகர்கள் அனைவருக்கும் அவரவர் திரைப்படங்கள் வெளியாவதில் இருக்கின்ற சந்தோஷம் வேறு எதற்கும் இருக்காது. அவர்களுடைய லைப் கிராப்பில் அது ஏற்றிவிடுமா அல்லது இறக்கிவிடுமா என்பது தெரியாமல் அனைவரும் பதட்டத்துடன் இருப்பார்கள்.நம்ம கேப்டன் மட்டும்தான் எந்தக் கவலையும் இல்லாமல் ஹாயாக கூலிங்கிளாஸுடன் வேர்க்க, வியர்க்க பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய நடிப்பில் 'இன்னொரு வானத்தைப் போல' என்ற பிரச்சாரத்துடன் 'மரியாதை' திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு சென்ற மாதமே வந்திருக்க வேண்டிய எங்கள் ஆசான் என்னும் படம் திரையிட வேண்டிய நாளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் வெளிவராமல் போனது. காரணத்தைத் துழாவினால் கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்கிறது.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் என்பவர் கேப்டனின் ஆரம்ப கால நண்பர். திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தபோதே தங்கராஜை கேப்டனுக்கு நன்கு பழக்கமாம். இந்த தங்கராஜ் இதற்கு முன்பு 'மீசை மாதவன்', 'சுந்தரா டிராவல்ஸ்' என்று இரண்டு திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்' தயாரித்ததில் உடலெங்கும் பலத்த அடியாம். நடக்க முடியாமல் கிடப்பதை அறிந்த கேப்டன், பெரிய மனதுடன் அவரே முன் வந்து இவரைத் தயாரிப்பாளராக்கி 'எங்கள் ஆசானை' உருவாக்கித் தந்தார்.

படம் முடிந்து வெளியாகும்வரையிலும் கேப்டன் தன் சம்பளம் பற்றி எதையும் பேசவில்லையாம். கடைசியில் நண்பர் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். தயாரிப்பாளரோ தே.மு.தி.க. தொண்டர்களின் ஆவலையே முதலீடாக்கி விநியோகஸ்தர்களிடம் கூடுமானவரையில் சேதாரமாகாதவகையில் விற்றிருக்கிறார். படத்தின் வெளியீட்டுக்கு முதல் நாள்வரையிலும் நடிப்புக்கான கூலி கைக்கு வந்து சேராத கேப்டன் பின்பு பணம் கேட்க தயாரிப்பாளர் தரப்பில் "படம் விற்கவில்லை.. போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்த கேப்டனின் 'கிச்சன் காபினெட்' அவசரமாகக் கூடி முதல் நாள் நள்ளிரவில் ஒரு முடிவெடுத்தது. அந்த முடிவின்படி, கேப்டனுக்குரிய சம்பளப் பணத்தைத் தராமல் படத்தை வெளியிடக்கூடாது என்று லேபில் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் தரப்பு அதிர்ந்துபோய் அதற்கு பிறகு சம்பளம் பற்றிப் பேசப் போயிருக்கிறது.

அதற்குள் தேர்தல், வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என்று வந்துவிட கூடவே இன்னொரு விஷயமும் கேப்டனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பித் தவறி 'எங்கள் ஆசானை' முன்கூட்டியே வெளியிட்டு படம் படுத்துவிட்டால் பின்பு வரும் 'மரியாதை'க்கு மரியாதை இருக்காது. அதனால் 'மரியாதை' முதலில் ரிலீஸாகட்டும். பின்பு எங்கள் ஆசானின் தலையெழுத்தை பார்ப்போம் என்று ரகசிய ஆலோசனை கூறப்பட்டதால் 'எங்கள் ஆசானை பின்பு பார்ப்போம். அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லிவிட்டாராம் கேப்டன்.

ஷெரில் பெர்ணான்டோவை பார்க்கலாம் என்று தவிப்புடன் இருந்த என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்தான். மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?

பல நேரங்களில் பல மனிதர்கள்

எழுத்தாளர் பாரதிமணி ஐயா உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இப்போது புத்தகமாக வெளிவந்துவிட்டது. 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற தலைப்பில் 110 ரூபாய் விலையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் பலரும் என்னைப் போலவே பாரதி ஐயாவை பற்றி உருகி, உருகி எழுதியிருக்கிறார்கள். படிக்கத் தவறாதீர்கள்.. நேரம் வீணாகாது என்பதற்கு நான் கியாரண்டி.

எது உண்மை..? எது பொய்..?

ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.

ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..

ஆனால் அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ஆரம்பமே சரியில்லையே. மனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்..


16 வயதினிலேயின் பெண்ணாம்..


அடுத்த மயிலு..???????

மருத்துவமனையில் மணிரத்னம்


வேலை என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கக் கூடியவர் இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி..

'குரு' படத்தின்போதுதான் இப்படிப்பட்ட அதீத உழைப்பின் காரணமாக முதல் முறையாக நெஞ்சு வலி அவரைத் தாக்கியது.. மருத்துவமனையில் வாசம் செய்துவிட்டு மீண்டும் தனது பணியினைத் தொடர்ந்தார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நெஞ்சுவலி வர.. மருத்துவமனைக்கு சென்று மீண்டு வந்தார்.


இப்போது 'ராவணன்' திரைப்படத்திற்கும் பேயாய் உழைத்திருக்கிறார் இயக்குநர். அதன் விளைவாக இப்போதும் மீண்டும் மருத்துவமனையில்.


உழைப்பு அவசியம்தான்.. தேவைதான். அதே சமயம் அதற்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்ள வேண்டும். மணி போன்ற இந்தியாவின் இயக்குநர்கள் இன்னும் படைக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக உழைக்கலாமே.. ஏன் இவ்வளவு அவசரம்..? அவர் நல்ல உடல் நலம் பெற்று திரும்ப என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

64 comments:

Bhuvanesh said...

அப்படி இந்த தடவ தான் பந்திக்கு முந்தி வர முடுஞ்சுது!!

Bhuvanesh said...

யாரது, சின்ன மயிலா??

முருகா சின்ன மயிலோட சேவை இந்த தமிழ் நாட்டுக்கு தேவை..

Bhuvanesh said...

//மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?//

அதான் உங்க காலத்து கதாநாயகி அம்பிகா இருகாங்க இல்ல ?

பைத்தியக்காரன் said...

உண்மைத்தமிழன்,

தயாரிப்பாளர் தங்கராஜ், அடி வாங்கியது 'சுந்தரா டிராவல்ஸ்' படத்துக்காக அல்ல; 'மீசை மாதவ'னுக்காக. திலிப் நடித்த அருமையான நகைச்சுவை நிரம்பிய மலையாளப் படம். தங்கராஜே நடித்ததால் படம் பல இடங்களில் ரிலிஸாகவேயில்லை.

அப்புறம், விளையும் பயிரை (ஜூனியர் ஸ்ரீதேவி) அடையாளம் காட்டியதற்கு நன்றி. ம்... உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. 3 தலைமுறை கதாநாயகிகளை கண்ட அபூர்வ இளைஞரல்லவா நீங்கள் :-)

Money ரத்னம்? முருகர் காப்பாற்றுவார்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லோகு said...

குட்டி மயில் அழகா இருக்குங்க..

டக்ளஸ்....... said...

கடைசி போட்டோவில் கரைக்டான இடத்துல Whisper விளம்பரம்..
தற்செயலா இல்ல ஒட்டவச்சதா?

இதுல "Image Courtesy- India Glitz" மிஸ்ஸிங்...

நையாண்டி நைனா said...

ஹான் ஆரம்பிக்கலாமா...????

ஹே...ஹே... டண்டனக்க டன்.. டமுக்கு டப்பா டன்...

ஹே...ஹே... டண்டனக்க டன்.. டமுக்கு டப்பா டன்...

டமுக்கு டப்பான் டியாலோ.... டிமுக்கு டப்பான் டயாலோ..

டமுக்கு டப்பான் டியாலோ.... டிமுக்கு டப்பான் டயாலோ..

நையாண்டி நைனா said...

/*......அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் .....*/

இப்படி செஞ்சா??? பணத்துக்கு வீக்கம் வராமே என்ன வரும்? ஒரு நல்ல மெத்தையிலே சுண்டி விழ வைக்க சொல்லுங்க..

நையாண்டி நைனா said...

படங்கள் எல்லாம் சூப்பரு...

நையாண்டி நைனா said...

/*உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை*/

நீங்க போட்டிருக்கிற படங்களை பார்த்து நெஞ்சு.. நெஞ்சு.. நெஞ்சு.. (நல்ல படிங்க கண்ணுகளா... அதுக்குதான் மூணு வாட்டி போட்டிருக்கேன் ) வெடிச்சு போன ஆளுங்களுக்கும் உண்டா ?

நையாண்டி நைனா said...

/*கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.*/

இதை அவருகிட்டே, அந்த ஆபீசர்கிட்டே சொல்லி மிரட்டுங்க. அவரே கதறிக்கிட்டு முன்னே இருந்து உங்களுக்கு எல்லா வேலையும் முடிச்சி கொடுத்திருவார்.

நாமக்கல் சிபி said...

அப்பாடா! ஃபுல்லா ஒரு தபா ஸ்குரோல் பண்ணிட்டேன்!

(இப்ப இருக்குற வேலைப்பளுவுல அதான் முடியும்)

நையாண்டி நைனா said...

/*'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?*/

இப்ப இதெல்லாம் வரலைன்னு யாரு வருத்தப்படுரா?

எல்லாம் உங்களை மாதிரி இருக்கிற நாலு பேராலை வருகிற வினை...

அத்திரி said...

//உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை//இந்த விசயத்துக்கு நன்றி கை பேசியில் உங்களை தொடர்பு கொள்கிறேன்........

நையாண்டி நைனா said...

/*....போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்....*/

இந்த மாதிரி கொலைவெறி கணக்கை எல்லாம்.. ராஜ பக்சே கணக்குன்னு சொல்லுங்க.

நையாண்டி நைனா said...

/*பல நேரங்களில் பல மனிதர்கள்*/

சில நேரங்களில் சில மனிதர்களையே சமாளிக்க முடியவில்லை....
(இதை நான் உங்களை பார்த்து சொல்லவில்லை... )

நையாண்டி நைனா said...

/*...அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம். ....*/

அப்ப சரிதானே.... இதுலே சிரிப்பு என்ன வேண்டி கிடக்கு.. சிரிப்பு....
புள்ளை அனுபவப்படிப்பு படிக்க போவுது....

நையாண்டி நைனா said...

/*16 வயதினிலேயின் பெண்ணாம்..*/

அதுக்கு இப்ப வயசு பதினாறா?
(இதுக்கு ஒரு மீனிங்கு தான் எடுக்கணும்... ஒரு மீனிங்கு தான் எடுக்கணும்...)

நையாண்டி நைனா said...

/*மருத்துவமனையில் மணிரத்னம்*/

இந்தா... இருட்டுலேயே படம் புடிக்குமே... அந்த அண்ணாச்சியா...???

சீக்கிரம் சுகம் ஆகட்டும்.

நையாண்டி நைனா said...

ஒகே மக்களே.... ஸ்டாப் மீஜிக்....

டமுக்கு டப்பான் டுப்பா....
டுமுக்கு டுப்பான் டப்பா....
டமுக்கு டப்பா...
டமுக்கு....

(அண்ணே என்னோட திறமையெல்லாம் பார்த்திருபீங்க, சினிமாலே பாட்டு எழுதுற சான்சு வாங்கி கொடுங்களேன்.)

வெங்கிராஜா said...

அந்த ஆட்டோக்காரங்க விளையாட்டு மேட்டரு சூப்பருங்க.. பிறகு ஹிஹி படங்கள்...!

♠புதுவை சிவா♠ said...

தமிழ்திரை உலகத்தில் மறக்கமுடியாத இன்னொறு மணி

1.கவுண்டமணி

:-))))))))))))

"தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு வரும் சோனியா காந்தி, இலங்கையில் போரை நிறுத்தி விட்டேன் என்று சொல்லிவிட்டுதான் சென்னையில் காலடி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு எழவு வீட்டிற்கு வந்து ஓட்டுக் கேட்கக் கூடாது.

போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள்.

உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார்" - இயக்குநர் பாரதிராஜா.

தல கடமை காத்திருக்கு தகவல் தர ரெடியா இருங்க.

தீப்பெட்டி said...

ரொம்ப நாளா உங்கள பாக்க முடியலயே....

வாசகன் said...

\\இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி.. \\

அதெல்லாம் இல்லை...
அவாள் டப்பு விஷயத்தில் ரொம்பக் கெட்டி.இன்னொரு முறை ஷூட்டிங்கை கன்வீன் செய்ய வேண்டியிருப்பின் எவ்வளவு மறு செலவு!
இது சம்பந்தமாக வேறு சில தகவல்கள்..
நாயகன் படத்தின் டப்பு விஷயத்தில் உறவைக் காட்டி நாமம் போட நினைத்ததில்தான் மணியின் படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து விட்டாராம் கமல்..

ரஹ்மானுக்கு இசையமைப்பாளராய் மணி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25000 ரூபாய் மட்டுமே...

சோம்பேறி said...

மன்னிக்கவும் உண்மைத் தமிழன். உங்கள் வலைப்பூவில் இப்படிப்பட்ட புகைப் படங்களை எதிர்பார்க்க வில்லை:-(

இராகவன் நைஜிரியா said...

// ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி. //

அந்த அடையாள அட்டை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. உங்களை அலையவிட்டே சாவடிச்சுடுவாங்க...

(என் மகனுக்காக வாங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்)

புருனோ Bruno said...

//(என் மகனுக்காக வாங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்)//

எந்த அலுவலகம் என்று தெரிந்து கொள்ளலாமா

எட்வின் said...

//சோம்பேறி said...
மன்னிக்கவும் உண்மைத் தமிழன். உங்கள் வலைப்பூவில் இப்படிப்பட்ட புகைப் படங்களை எதிர்பார்க்க வில்லை:-(//

நானும் தான்

ஆதவன் said...

photos superunga.. especially that girl in green chair. superb.. :)

சுட்டி குரங்கு said...

அது என்னமோ தெரியலை உலக அழகியை வச்சு படம் எடுக்கறப்போ எல்லாம் மணிரத்னம் சார்க்கு நெஞ்சு வலி வந்டுதுது. ஆண்டவா, என்ன கொடுமை இது !

benzaloy said...

[[[ ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.

ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது . அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..]]]
தகவல் உண்மையானால் இந்தியாவின் அடுத்த சந்ததிக்கும் உய்வில்லை - எல்லாமே பிறாடு -
ஏன் இந்த சின்னத்தனம்?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Bhuvanesh said...

அப்படி இந்த தடவ தான் பந்திக்கு முந்தி வர முடுஞ்சுது!!//

இதுக்கும் அதே பழமொழிதானா..? புத்சா ஏதாவது சொல்லு கண்ணு.!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
யாரது, சின்ன மயிலா?? முருகா சின்ன மயிலோட சேவை இந்த தமிழ் நாட்டுக்கு தேவை..///

எதிர்பாருங்கள்.. வரும்காலம் நிச்சயம் வரும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...

//மீனாவையும், ஜாஸ்மினையும் பார்த்து என்ன செய்ய..?//

அதான் உங்க காலத்து கதாநாயகி அம்பிகா இருகாங்க இல்ல?///

ஹி..ஹி..ஹி.. இருந்து என்ன பண்ண..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///பைத்தியக்காரன் said...

உண்மைத்தமிழன், தயாரிப்பாளர் தங்கராஜ், அடி வாங்கியது 'சுந்தரா டிராவல்ஸ்' படத்துக்காக அல்ல; 'மீசை மாதவ'னுக்காக. திலிப் நடித்த அருமையான நகைச்சுவை நிரம்பிய மலையாளப் படம். தங்கராஜே நடித்ததால் படம் பல இடங்களில் ரிலிஸாகவேயில்லை.//

நன்றி பைத்தியம் ஸார்.. திருத்தி விடுகிறேன். எத்தனை முறை முயன்றும் பிளாக்கர் சொதப்புகிறது.. எல்லாம் முருகன் செயல்..

//அப்புறம், விளையும் பயிரை (ஜூனியர் ஸ்ரீதேவி) அடையாளம் காட்டியதற்கு நன்றி. ம்... உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. 3 தலைமுறை கதாநாயகிகளை கண்ட அபூர்வ இளைஞரல்லவா நீங்கள் :-)//

யெஸ்.. யெஸ்.. ரொம்பத்தான் கூச்சம் உங்களுக்கு.. நீங்க பார்க்காததா சாமி..?

//Money ரத்னம்? முருகர் காப்பாற்றுவார்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்///

இல்லை பைத்தியக்காரன்.. அனைவருமே இப்படித்தான் நினைக்கிறீர்கள்.. பணத்தேவை பொருட்டுத்தான் அவர் படங்களை இயக்குகிறார் என்ற அர்த்தம் வருகிறது.. அப்படியல்ல..

ஏதாவது ஒரு உழைப்பை செய்ய வேண்டும். பெயர் வாங்க வேண்டும் என்ற வரிசையில் மூன்றாவதாகத்தான் அந்த பணம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து..

பின்னூட்டம் போடவே மாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு உக்காந்திருந்த பைத்தியக்காரனை பின்னூட்டம் போட வைத்தனேன்னு கொஞ்சம் பெருமையா இருக்கு..

நன்றி.. நன்றி.. நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லோகு said...

குட்டி மயில் அழகா இருக்குங்க..//

அதனாலதான் போட்டோ போட்டேன் லோகு..

உங்களுக்கும் நல்ல ரசனைதான் போலிருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//டக்ளஸ்....... said...

கடைசி போட்டோவில் கரைக்டான இடத்துல Whisper விளம்பரம்.. தற்செயலா இல்ல ஒட்டவச்சதா?//

ஐயா சாமி.. அதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லீங்கய்யா..

//இதுல "Image Courtesy- India Glitz" மிஸ்ஸிங்...//

ஸாரி.. மன்னிக்கணும்.. மறந்திட்டேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...

ஹான் ஆரம்பிக்கலாமா...????

ஹே...ஹே... டண்டனக்க டன்.. டமுக்கு டப்பா டன்...

ஹே...ஹே... டண்டனக்க டன்.. டமுக்கு டப்பா டன்...

டமுக்கு டப்பான் டியாலோ.... டிமுக்கு டப்பான் டயாலோ..

டமுக்கு டப்பான் டியாலோ.... டிமுக்கு டப்பான் டயாலோ..//

ஹேய் ஜிக்கி.. ஹேய் ஜிக்கா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நையாண்டி நைனா said...

/*......அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் .....*/

இப்படி செஞ்சா??? பணத்துக்கு வீக்கம் வராமே என்ன வரும்? ஒரு நல்ல மெத்தையிலே சுண்டி விழ வைக்க சொல்லுங்க..//

அப்படியே படுத்திருச்சுன்னா அடுத்த ரவுண்ட்டுக்கு என்ன செய்ய..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை*/

நீங்க போட்டிருக்கிற படங்களை பார்த்து நெஞ்சு.. நெஞ்சு.. நெஞ்சு.. (நல்ல படிங்க கண்ணுகளா... அதுக்குதான் மூணு வாட்டி போட்டிருக்கேன் ) வெடிச்சு போன ஆளுங்களுக்கும் உண்டா ?//

அப்படியொண்ணும் நெஞ்சு வெடிக்கப் போற படங்கள் இல்லையே நைனா.. அப்ப நீரு சி்ன்னப் பாப்பாவா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*கிடைக்காவிட்டால் இருக்கவே இருக்கு இன்னொரு பதிவு.*/

இதை அவருகிட்டே, அந்த ஆபீசர்கிட்டே சொல்லி மிரட்டுங்க. அவரே கதறிக்கிட்டு முன்னே இருந்து உங்களுக்கு எல்லா வேலையும் முடிச்சி கொடுத்திருவார்.///

ச்சேச்சே.. கொலை பண்றதை சொல்லிட்டுச் செஞ்சா சுவாரஸ்யம் இருக்காது.. சொல்லாமத்தான் செய்யணும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நாமக்கல் சிபி said...

அப்பாடா! ஃபுல்லா ஒரு தபா ஸ்குரோல் பண்ணிட்டேன்!

(இப்ப இருக்குற வேலைப்பளுவுல அதான் முடியும்)///

உனக்குத்தான் மொக்கை மெயில்ல கூத்தடிக்கவே நேரமில்லையே..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*'எங்கள் ஆசான்' திரைப்படத்தின் தாமதம் ஏன்..?*/

இப்ப இதெல்லாம் வரலைன்னு யாரு வருத்தப்படுரா?

எல்லாம் உங்களை மாதிரி இருக்கிற நாலு பேராலை வருகிற வினை...///

பின்ன.. ஸ்டில்ஸை பார்த்தாலே என்னமோ மாதிரியில்ல.. பார்த்தே ஆகணுமாக்கும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அத்திரி said...

//உடல் ஊனமுற்றவர்களுக்கு சலுகை//இந்த விசயத்துக்கு நன்றி கை பேசியில் உங்களை தொடர்பு கொள்கிறேன்...........///

பேச்சுக்கு நன்றி தம்பி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*....போனியாகவில்லை" என்றெல்லாம் 'காந்தி கணக்கு' காட்டியிருக்கிறார்....*/

இந்த மாதிரி கொலைவெறி கணக்கை எல்லாம்.. ராஜ பக்சே
கணக்குன்னு சொல்லுங்க.///

சரி... சரி.. சொல்லிரலாம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*பல நேரங்களில் பல மனிதர்கள்*/

சில நேரங்களில் சில மனிதர்களையே சமாளிக்க முடியவில்லை.... (இதை நான் உங்களை பார்த்து சொல்லவில்லை...)///

அப்பாடா.. இப்படியாச்சும் நான் உங்களோட இருக்கனே.. இதுவே போதும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*...அவர் தோல்வியடைந்த பாடத்தின் பெயரைப் படித்தவுடன் கொஞ்சம் சிரிப்பு வந்தது. National Economic Planning & Policy-யாம்.....*/

அப்ப சரிதானே.... இதுலே சிரிப்பு என்ன வேண்டி கிடக்கு.. சிரிப்பு.... புள்ளை அனுபவப் படிப்பு படிக்க போவுது....///

பாடத்துல பெயிலாகி அனுபவத்துல பாஸானா நமக்கும் சந்தோஷம்தான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*16 வயதினிலேயின் பெண்ணாம்..*/

அதுக்கு இப்ப வயசு பதினாறா?
(இதுக்கு ஒரு மீனிங்கு தான் எடுக்கணும்... ஒரு மீனிங்கு தான் எடுக்கணும்...)///

எப்படிப் படிச்சாலும் இதுக்கு ஒரு அர்த்தம்தான் நைனாஜி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

/*மருத்துவமனையில் மணிரத்னம்*/

இந்தா... இருட்டுலேயே படம் புடிக்குமே... அந்த அண்ணாச்சியா...???

சீக்கிரம் சுகம் ஆகட்டும்.///

சுகமாகும்.. சுகமாகட்டும்.. முருகனை வேண்டிக்குங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நையாண்டி நைனா said...

ஒகே மக்களே.... ஸ்டாப் மீஜிக்....

டமுக்கு டப்பான் டுப்பா....
டுமுக்கு டுப்பான் டப்பா....
டமுக்கு டப்பா...
டமுக்கு....

(அண்ணே என்னோட திறமையெல்லாம் பார்த்திருபீங்க, சினிமாலே பாட்டு எழுதுற சான்சு வாங்கி கொடுங்களேன்.)///

உங்க திறமையெல்லாம் நல்லாத் தெரியுது.. சமீபத்தில் வந்த 1977 மாதிரி நான் படமெடுத்தா உங்களுக்கு நிச்சயமா வாய்ப்பு தருவேன்..

நன்றி நைனாஜி.. தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும், பண்பிற்கும் எனது தலை சாய்ந்த நன்றிகள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெங்கிராஜா said...

அந்த ஆட்டோக்காரங்க விளையாட்டு மேட்டரு சூப்பருங்க.. பிறகு ஹிஹி படங்கள்...!///

நன்றி வெங்கி ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

புதுவை சிவா..

பார்த்தேன்.. படித்தேன்..

நிச்சயம் நானும் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. அதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வாசகன் said...

\\இயக்குநர் மணிரத்னம். 'தளபதி' ஷூட்டிங்கின்போது விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு ஊழியர்கள் சிலர் மரணமடைந்தபோதும், ஷூட்டிங்கை நிறுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பு செய்தவர். உழைப்பின் மீது அவ்வளவு வெறி.. \\

அதெல்லாம் இல்லை... அவாள் டப்பு விஷயத்தில் ரொம்பக் கெட்டி. இன்னொரு முறை ஷூட்டிங்கை கன்வீன் செய்ய வேண்டியிருப்பின் எவ்வளவு மறு செலவு! இது சம்பந்தமாக வேறு சில தகவல்கள்..
நாயகன் படத்தின் டப்பு விஷயத்தில் உறவைக் காட்டி நாமம் போட நினைத்ததில்தான் மணியின் படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து விட்டாராம் கமல்..

ரஹ்மானுக்கு இசையமைப்பாளராய் மணி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25000 ரூபாய் மட்டுமே...///

உங்களுடைய கருத்து உங்களுக்கு.. என் கருத்து எனக்கு. விட்ருவோம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சோம்பேறி said...
மன்னிக்கவும் உண்மைத் தமிழன். உங்கள் வலைப்பூவில் இப்படிப்பட்ட புகைப்படங்களை எதிர்பார்க்க வில்லை:-(///

சோம்பேறி ஸார்..

நானும் போடலாமா வேண்டாமா என்கிற ஊசலாட்டத்தில்தான் இருந்தேன்.

எந்தவொரு அடையாளத்துக்குள்ளும் யாரும் சிக்கிவிடக் கூடாது. முடியாது.. அது எனக்கும் பொருந்தும்.

தங்களுடைய அறிவுரைக்கும், அன்பிற்கும் எனது நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///இராகவன் நைஜிரியா said...

// ஊனமுற்றோர் அடையாள அட்டை வாங்கி வைத்துக் கொள்ளுவோம் என்று நினைத்து பல வருடங்கள் கழித்து அந்த அலுவலகத்தில் கால் வைத்த எனக்கு இதைப் பார்த்து ஒரு திடீர் அதிர்ச்சி.//

அந்த அடையாள அட்டை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. உங்களை அலையவிட்டே சாவடிச்சுடுவாங்க...

(என் மகனுக்காக வாங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்)///

இல்லை ராகவன் ஸார்.. இப்போது அது மிக எளிது..

இருப்பிடச் சான்றிதழும், இரண்டு புகைப்படங்களும் கையோடு கொண்டு போனால் மருத்துவரின் பரிசோதனைக்குப் பின் உடனேயே அங்கேயே அடையாள அட்டை உங்கள் கையில் கொடுக்கப்படுமாம்..

இப்படித்தான் அந்த அலுவலகத்தில் சொன்னார்கள். நான் வாங்கிய பின்பு விவரமாக எழுதுகிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///புருனோ Bruno said...

//(என் மகனுக்காக வாங்குவதற்குள் நான் பட்ட கஷ்டம் ஆண்டவனுக்குத்தான் தெரியும்)//

எந்த அலுவலகம் என்று தெரிந்து கொள்ளலாமா?///

அதானே.. நானும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///எட்வின் said...

//சோம்பேறி said...
மன்னிக்கவும் உண்மைத் தமிழன். உங்கள் வலைப்பூவில் இப்படிப்பட்ட புகைப் படங்களை எதிர்பார்க்க வில்லை:-(//

நானும்தான்///

))))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஆதவன் said...

photos superunga.. especially that girl in green chair. superb.. :)///

நல்ல ரசனைக்காரர்தான் போங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சுட்டி குரங்கு said...

அது என்னமோ தெரியலை உலக அழகியை வச்சு படம் எடுக்கறப்போ எல்லாம் மணிரத்னம் சார்க்கு நெஞ்சு வலி வந்டுதுது. ஆண்டவா, என்ன கொடுமை இது !///

அதான.. என்ன கொடுமை முருகா இது..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

[[[ ராகுல்காந்தி தனது வேட்புமனுவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில். பாடத்தில் தான் தேர்ச்சியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறாராம்.

ஆனால் உண்மையில் அவர் எம்.பில். படிப்புக்கான இறுதித் தேர்வில் ஒரு பாடத்தில் 58 சதவிகிதம் மட்டுமே எடுத்திருக்கிறாராம். (60 எடுத்தால்தான் பாஸாம்) பத்திரிகை செய்திகளில் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. சர்டிபிகேட்டில் பெயர்கூட ராகுல்வின்சி என்றுதான் இருக்கிறது. அப்புறம் எதுக்கு காந்தி..? சரி விடுங்க..]]]

தகவல் உண்மையானால் இந்தியாவின் அடுத்த சந்ததிக்கும் உய்வில்லை - எல்லாமே பிறாடு -
ஏன் இந்த சின்னத்தனம்?///

இதுதான் இந்தியா..

வால்பையன் said...

அண்ணே பொங்கல் அதிகமா போச்சு!
தூக்கம் தூக்கமா வருது!

என் வாத்தியாருக்கு அப்புறம் என்னை இந்த அளவுக்கு தூங்க வச்சது நீங்க தான்!

Rithu`s Dad said...

//இரண்டு நாலணா நாணயங்கள்தான் விளையாட்டு உபகரணம். நான்கு பேர் செட் சேர்கிறார்கள். அதில் ஒருவர் இரண்டு நாணயங்களையும் மேலே தூக்கி சுண்டி விடுகிறார். இரண்டு நாணயங்களிலும் தலை விழுந்தால் போட்டியில் சேர்ந்திருக்கும் அனைவரும் பத்து ரூபாய் அவருக்குத் தர வேண்டும். மாறி விழுந்துவிட்டால் நாணயங்களைச் சுண்டுவது அடுத்தவருக்குப் போகும். தலை விழுந்தால் அப்படியே தொடர்ந்து அவரை நாணயங்களைச் சுண்டலாம். பூ விழுகின்றவரையிலும் அந்த ஒருவருக்கே சுண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. இப்படியே மாறி, மாறிப் போகிறது விளையாட்டு.

யார் ஆரம்பித்து வைத்தது..? எங்கேயிருந்து துவங்கியது என்று தெரியவில்லை.. அதிர்ஷ்டம் என்ற ஒன்றை மட்டுமே நம்பி ஆட்டம் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது..//

இது எங்க ஊர் (பரமக்குடி) விளையாட்டுங்க... நங்க எப்டினா, ஒரு ரூபா காச வச்சு விளையாடரது.. ஒரு ஆட்டத்துக்கு 5 பைசா!! ஒரு கோடு போட வேண்டியது.. அதுல இருந்து ஒரு 30 அடி தூரத்துல இருந்து இன்னொரு கோடு. ஆட்டதுல இருக்கவங்க எல்லாம் இரண்டாம் கோட்டிலிருந்து ஒரு ரூபாய் காசை முதல் கோட்டை நோக்கி வீசனும். யாரொட காசு கோட்டுக்கு உள்ளார முதல்ல இருக்கோ அவங்க தான் முதல். காசு கோட்டை தொட்டாலோ கோட்டை தாண்டி சென்றாலோ அவங்க ஆட்டதில் இருந்து காலி.

முதலா வந்தவர் எல்லோருடைய ஒரு ரூபா காசையும் மேலே தூக்கி சுண்டி விடுவார்.
தலை விழும் அத்துனை ஒரு ரூபா காசும் அவர்க்கு, பூ விழுந்தது இரண்டாவதாக வந்தவர் சுண்டனும்.. அப்டியே பூ விழும் காசு மட்டும் கடைசி வரை செல்லும்.. ஒரு ரூபா காச திரும்ப வாங்க 5 பைசா கொடுத்து வாங்கிக்க வேண்டியது.. !! (ஆட்டத்தில் இருப்பவர் மட்டும்)

abeer ahmed said...

See who owns stackoverflow.com or any other website:
http://whois.domaintasks.com/stackoverflow.com