இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-06-04-2009

06-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சீமான் விடுதலைக்காக மாணவர்கள் போராட்டம்..!புதுச்சேரியில் சிறைப்பட்டுக் கிடக்கும் திரைப்பட இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரி நெல்லையில் இருந்து சென்னைவரையிலும் கல்லூரி மாணவர்கள் ரயில் பயண பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஏப்ரல் 6, திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் பயணம் செய்யவிருக்கிறார்கள். அந்த ரயிலில் நெல்லையிலிருந்து சென்னைக்குப் பயணம் செய்யும் மாணவர்கள் இடையில் உள்ள 17 ரயில் நிலையங்களில் திரளும் மாணவர்களையும், தமிழ் ஈழ ஆதரவாளர்களையும் வழிநெடுகச் சந்தித்து தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், சீமானை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள்.

தமிழக மாணவர்களிடையே இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த 700 கிலோமீட்டர் தூர பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

திங்கள்கிழமை இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேரும் போராட்ட மாணவர்களை, தமிழ் ஈழ ஆதரவு அமைப்பினரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளும், திரளான துணை, இணை இயக்குநர்களும் வரவேற்க உள்ளனர்.

விஜய் டிவி இப்படிச் செய்யலாமா..?

விஜய் டிவியில் இப்போது ஒளிபரப்பாகிவரும் 'ரோஜாக்கூட்டம்' என்ற தொடர் கொஞ்சம் பிரச்சினையாகியிருக்கிறது.

அத்தொடரின் உண்மையான கதாசிரியரிடம் முறையான அனுமதி பெறாமலும், அவருக்கு பணம் கொடுக்காமலும் அந்தக் கதையை வைத்து தொடரை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்..

உண்மையான கதாசிரியரோ டீ குடிக்கக் கூட காசில்லாத சோகத்துடன் முட்ட வேண்டிய இடங்களிலெல்லாம் மோதிக் கொண்டிருக்கிறார். இன்றுவரையில் எந்த நிவாரணமும் அவருக்குக் கிடைத்தபாடில்லை. அவர் செய்த தவறு, அக்ரிமெண்ட் எதுவும் போடாமலேயே பணியாற்ற ஒத்துக் கொண்டதுதான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த பிராஜெக்ட்டிற்காக உழைத்தது வீணாகிப் போனது அவருக்கு..

இரண்டு நாட்கள் ராத்திரியில் கண் விழித்து எப்படியும் காசு வந்திரும் என்ற நினைப்பில் அதன் திரைக்கதையை தட்டச்சு செய்து கொடுத்துவிட்டு காசு இப்போ வரும்.. அப்போ வரும் என்று காத்திருக்கும் என் நிலையும் கொஞ்சம் கொடுமைதான்..

கதாசிரியருக்கு எப்போ காசு வர்றது..? அவர்கிட்டேயிருந்து நான் எப்ப காசு வாங்குறது..? சரவணனுக்கே கொடுமையா..?

சந்தோஷமான ஒரு விஷயம்..!

என்னைப் போன்ற கோடிக்கணக்கான அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்திருக்கும் போர்னோ படத் தயாரிப்பு நிறுவனமான பிரைவேட் அடல்ட் வீடியோ கம்பெனிக்கு ஸ்வீடன் கோர்ட் 100 மில்லியன் டாலருக்கும் அதிமான தொகையை வரியாகக் கட்டச் சொல்லியிருக்கிறதாம்..

நான்கு பத்திரிகைகள், வீடியோ படத் தயாரிப்பு, நேரடி காட்சி நிகழ்ச்சிகள் என்று இந்தத் துறையில் கொடி கட்டிப் பறக்கும் பிரைவேட் மீடியா குரூப் அடல்ட் எண்ட்டெர்டெயிண்ட் கம்பெனிதான் நியூயார்க் ஸ்டாக் எக்ஸேஞ்ச்சில் பட்டியிலிடப்பட்ட முதல் போர்னோகிராபி கம்பெனியாம்.

1996-1999 இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்நிறுவனம் 1.35 பில்லியன் குரோனர் தொகையை சம்பாதித்திருப்பதாக பத்திரிகை செய்தி.. இந்த அளவுக்கு காசு சம்பாதித்திருக்கிறது என்றால் எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் உலகம் முழுக்க வெறியாக இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்..

காத்திருந்து.. காத்திருந்து.. காலங்கள் போனதடி..!


இந்தப் பாடல் இன்றைக்கு அகில இந்திய லட்சியத் திராவிடர் கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தருக்கே பொருந்தும்..

ஒரே வருடத்தில் 'அம்மா', 'ஐயா' என்று ரவுண்டு கட்டிவிட்டதால் 'எப்போதும் இவரை நம்ப முடியாது' என்று நினைத்து இரண்டு பெரும் தலைகளும் கை கழுவிவிட்டார்கள்.

"தனக்கு மட்டும் மயிலாடுதுறை தொகுதியைக் கொடுத்துவிட்டால் தமிழகம் முழுவதும் உங்களது கூட்டணிக்காக உரக்கப் பேசுவேன்" என்று அறிவாலயத் தலைவர்களிடம் சொல்லிப் பார்த்திருக்கிறார். "மயிலாடுதுறை காங்கிரஸுக்கு" என்றதும், "சென்னையில் ஏதாவது ஒரு தொகுதி கொடுங்கள்.." என்றிருக்கிறார். "யோசிக்கிறோம்.." என்றவர்கள் கடைசியில், "இதயத்தில்தான் இடம் உண்டு" என்று சொல்லிவிட்டார்கள்.

இதனால் தோட்டத்து பக்கம் பார்வையைச் செலுத்தினார். தோட்டத்திலோ 'புரட்சிப் புயலே' புல்தடுக்கி பயில்வானாக விழுந்து கிடப்பதைப் பார்த்து நொந்து போய், 'தன்னை பயன்படுத்திக் கொள்ள இந்தத் தமிழ்நாட்டுக்கு கொடுத்து வைக்கவில்லை' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நிமிடத்தில் பி.ஜே.பி. கூட்டணியிலாவது இணைந்து ஏதாவது ஒரு தொகுதியில் நின்றுவிடலாம் என்ற யோசனையில் இருப்பதாகத் தகவல்.

மரபு தற்செயலாக மீறப்பட்டதா..?


'சூரியன் மறையாத தேசம்' என்ற பெருமையுடன் திகழும் தி கிரேட் பிரிட்டனின் ராணி எலிஸபெத்திடம் பேசுவதற்குக்கூட ஒரு வரைமுறைகளை அரண்மனை வட்டாரம் வகுத்து அதனையே இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடித்தும்ம் வருகிறது.

பொதுவாக இங்கிலாந்துக்கு செல்லும் பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் ராணியைச் சந்திக்கச் செல்லும்போது பக்கிங்காம் அரண்மனையின் தாழ்வாரத்தில் நடந்து செல்வதை மட்டுமே வீடியோவாக காண்பிப்பார்கள். அதற்கு மேல் ராணியுடனான சந்திப்பை காட்டமாட்டார்கள். நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள்.

அதற்குக் காரணம் அரண்மனைக்குள் வந்து ராணியை சந்திக்க விரும்புவர்கள் வரும்போது, ராணி 1 படிக்கட்டு உயரத்தில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாராம். அவர்கள் வந்தவுடன் எழுந்து நின்று கையை நீட்டுவாராம். கையைப் பிடிக்கும் எந்தத் தலைவர்களும் கொஞ்சம் தங்களது தலையையும் குனிந்துதான் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டுமாம்..

இந்த மாதிரியெல்லாம் மரியாதை கொடுத்துவிட்டு ஊர் திரும்பினால் அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்கு ஏதாவது மரியாதை இருக்குமா..? அதனால்தான் அந்தப் பகுதியில் புகைப்படத்திற்கும், வீடியோவிற்கும் தடை போட்டுவிட்டார்களாம்.

இப்போது லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உலகத் தலைவர்களுக்கு ராணி விருந்தளித்தார். அந்த விருந்தில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் தற்செயலாக ராணியின் தோளில் கை போட்டு 'வாடி மாமியாரே' என்பதைப் போல் போஸ் கொடுக்க.. இது அடுத்த நொடியே அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் வழக்கம்போல பிளாஷ் நியூஸாகிவிட்டது.

கடந்த 2 நாட்களாக யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக இதுதான் இருக்கிறதாம். தன் தோளில் மிஷெலின் கை பட்டவுடன் ராணி அதிர்ச்சியாகித் திரும்பிப் பார்ப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. என்ன இருந்தாலும் 80 வருஷமா யாரும் செய்யாததாச்சே..

ஆனாலும் என்ன.. வேறு வழியில்லாமல் ராணியும் மிஷெனில் இடுப்பில் கை வைத்து ஏதோ 'என்ன மருமகளே' என்பதைப் போல் போஸ் கொடுத்து தனது டென்ஷனை குறைத்துக் கொண்டார்.

மனிதர்களால் உருவாக்கப்பட்டவை மனிதர்களாலேயே உடைக்கப்படும்.. இது உலக நியதி..!

அதுக்குள்ள அம்மாவா..?


வருஷக்கணக்கா கதாநாயகியா நடிச்ச நடிகை கல்யாணம் பண்ணி புள்ளை பெத்துட்டா சடாரென்று அவருடைய வயதில் 30-ஐக் கூட்டி அவரை அம்மா, அக்கா கேரக்டருக்கு மட்டுமே பயன்படுத்துவது தமிழ்ச் சினிமாவின் மட்டமான ரசனையாக எனக்குப் படுகிறது.

"அதுக்கு மேல அவங்களும் முன்ன மாதிரி நடிக்க மாட்டாங்க.. பசங்களும் ரசிக்க மாட்டானுக.. அவ்ளோதான்.." என்கிறார் ஒரு விநியோகஸ்தர். குஷ்பூ, ரோஜா, சுகன்யா, ரேவதி, ரேகா, பானுப்பிரியா, அர்ச்சனா, ரோகிணி என்று இந்தப் பட்டியல் நீண்டு இப்போது நீலாம்பரி ரம்யாகிருஷ்ணன் வரையிலும் வந்துவிட்டது.

சினிமா ரசிகர்களின் இந்த கொடுஞ்செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்..

நேற்று தேஜா டிவியில் பார்த்த ஒரு திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு மாமியாராக வரும் ரம்யா கிருஷ்ணனை பார்த்து என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா..? கொதித்துப் போய்விட்டேன்.

3 வருஷத்துக்கு முன்னாடி இதே ஜூனியர் என்.டி.ஆருக்கு சூடேற்றும்விதமா ஒரு தெலுங்குப் படத்தில், வயிற்றில் 3 மாத கர்ப்பமாக இருந்தபோதே ஒரு சூப்பர் குத்தாட்டம் போட்டுக் குவித்திருந்தார் ரம்யா. இன்றைக்கு கண்ணை மூடினாலும் அந்த ஆட்டம் மனதில் அப்படியே நின்று, நின்று ஆடுகிறது.

ஏதோ கல்யாணம் பண்ணி புள்ளை, குட்டியைப் பெத்துட்டா உடனேயே ஆட்டமும், நடிப்பும் போயிருமா என்ன..? அந்த மாதிரி டான்ஸையெல்லாம் இனிமே யார் வந்து ஆடுவாங்களாம்..?

கட்சிகளின் ஜாதகம்..!

எந்தப் புண்ணியவான்னு தெரியலை.. பேர் தெரியல.. ஏதோ ஒரு பிளாக்குலதான் இதனைப் பார்த்தேன். அப்பவே பதிவிறக்கும் செஞ்சு வைச்சிருந்தேன்.. இப்போ இருக்குற அரசியல் நிலைமைல இது பொருத்தமா இருக்கும்போலத் தெரியுது.. பார்த்து படிச்சுக்குங்க.. படத்தின் உரிமையாளர் கோபித்துக் கொள்ள வேண்டாம்.. முழு உரிமை உங்களுக்குத்தான்..
கமெண்ட்டு ப்ளீஸ்..?


இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..

லேட்டாகப் புரிபவர்களுக்கு 35 வயதிருக்கலாம். புரியாதவர்கள் குழந்தைகள் என்று அர்த்தம்..

புகைப்படத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நகைச்சுவையாக பின்னூட்டமிடுபவர்களின் பதிவில் எனதருமைத் தம்பி, பெல்லி டான்ஸ் புகழ் குசும்பனார் ஓடோடி வந்து மானாவாரியாக பின்னூட்டங்களை வாரி வழங்குவான் என்பதை அவன் சார்பாக நான் சொல்லிக் கொள்கிறேன்..

நன்றி

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

54 comments:

இராகவன் நைஜிரியா said...

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ..

//விஜய் டிவி இப்படிச் செய்யலாமா..? //

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லைப் போலிருக்கு.

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..

லேட்டாகப் புரிபவர்களுக்கு 35 வயதிருக்கலாம். புரியாதவர்கள் குழந்தைகள் என்று அர்த்தம்..//

என்ன கொடுமை சரவணா இது.. ஓன்னுமே புரியல உலகத்தில.. அப்படின்னா நான் சின்ன குழந்தையா.. அவ்...அவ்...அவ்...

கடைசியா ஒரு கேள்வி?

மீ த பர்ஸ்ட்?

வெட்டிப்பயல் said...

எங்களுக்கு 27 தான். அதனால என்ன பேசிருப்பாங்கனு எங்க ரேஞ்சுக்கு யோசிக்கறோம்.

பிரபு: கொஞ்சம் பார்த்து பொறுமையா பேசுங்கப்பா. பின்னாடி தான் உட்கார்ந்திருக்கான். அப்பறம் ”சைலன்ஸ்... பேசிட்டு இருக்காங்கல்ல.” அப்படினு சொல்லிடப்போறான்

ஹாலிவுட் பாலா said...

விஸ்வனாத்: என்ன அஷோக், வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருந்த! இப்ப கட்சி ஆரம்பிச்சிட்டியாமே?

அஷோக்: யு நோ? நானே மறந்துட்டேன். யெஸ்..யெஸ்..! கட்சில விஜய்’ எனக்கு ரைட் ஹாண்ட், வடிவேல் எனக்கு லெஃப்ட் ஹேண்ட். உங்களுக்கு பதவி வேணும்னாலும், எல்லாம் ஃப்ரீயா இருக்கு. வேணும்னா.. ‘அந்த வீட்டு’ பையனையும் சேர்த்துக்கலாம்.

கௌதம்: என்ன கொடுமை சரவணன் இது? இவனை அஸிஸ்டண்ட் கமிஷ்னரா இருந்தப்பவே, என்கவுண்டர்ல போட்டுத்தள்ளியிருந்திருக்கனும். இந்த போட்டோவை பப்ளிஷ் பண்ணுனதுக்கு உன்னையும் சேர்த்து!

(எனக்கு 31-தாங்கன்னா ஆவுது. :))

கிரி said...

நல்லா இருக்குங்கோ (எல்லாமே)

benzaloy said...

[[[ புதுச்சேரியில் சிறைப்பட்டுக் கிடக்கும் திரைப்பட இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரி நெல்லையில் இருந்து சென்னைவரையிலும் கல்லூரி மாணவர்கள் ரயில் பயண பிரச்சாரம் செய்கிறார்கள். ]]]

அண்ணே இந்த இலங்கை தமிழருக்காக இந்திய தமிழ் நாட்டில் ''தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்'' போர்வையில்
நடாத்தப்படும் அனைத்து செயல்களும் --- அப்பாவி தமிழ் பொது மக்கள் போர் சூழலில் மாட்டுபட்டு செய்வதறியாது
திண்டாடும் நிலைக்குள் தள்ளபடுவதற்கு சமன் ---

இதனை சற்று பாருங்கள்
http://www.youtube.com/watch?v=wtuHgSon9AI&eurl=http%3A%2F%2Fmeenagam%2Enet%2Fme%2F%3Fp%3D3152&feature=player_embedded

Melbourne, நகரில் இங்கு Australia வில் புலி கொடி தாங்கி சென்ற காறை (சிங்கள) ஆட்கள் தாக்குவதை ---

புலி கொடிக்கு இன்று இருக்கும் மரியாதைக்கு புலியின் கொடூரமான போக்கே காரணம் --- PLOTE போன்ற பிற இயக்கங்கள் சிங்கள பொது மக்களிடையே தமிழருக்கு
அனுதாபம் தேடியபோது புலிகள் அவர்களை ''துரோகிகள்''என்று கொன்றார்கள் ---

புலிகளின் அரசியல் அவ்வாறானது ---

சிங்கள பொது மகனின் ஆதரவு இல்லாது போனாலும் அனுதாபம் எமக்கு தேவையே ---

பிரபாகரனுக்கு ''போர்'' மற்றும் ''தனி நாடு'' ஆகிய இரண்டுமே தேவை --- அவர் தனியாக ஆட்சி செலுத்த ---

இதற்கு தன் மானம் உள்ள எந்த தமிழனோ மனிதனோ இணங்கமாட்டான் --- புலியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது !!!

benzaloy said...

[[[ அவர் செய்த தவறு, அக்ரிமெண்ட் எதுவும் போடாமலேயே பணியாற்ற ஒத்துக் கொண்டதுதான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த பிராஜெக்ட்டிற்காக உழைத்தது வீணாகிப் போனது அவருக்கு..

இரண்டு நாட்கள் ராத்திரியில் கண் விழித்து எப்படியும் காசு வந்திரும் என்ற நினைப்பில் அதன் திரைக்கதையை தட்டச்சு செய்து கொடுத்துவிட்டு காசு இப்போ வரும்.. அப்போ வரும் என்று காத்திருக்கும் என் நிலையும் கொஞ்சம் கொடுமைதான்.. ]]]

கடைசி நான்கு சொற்களையும் பார்த்ததும் அப்பிடியே அடித்து கொல்லோனும் போல இருக்குதையா ---

டிவி கரனை அல்ல உம்மையும் உமது சோனகிரி கதாசிரியரையும் ---

வேற என்னய்யா ? --- எழுதி நாலு பேருக்கு தெரியப்படுத்தி எப்பேர்பட்ட மோசடிகாரங்கள் என்று தெரியப்படுத்தி ---

அவனுவளை நாக்கை பிடுங்கி சாக பண்ணனுமே !

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///இராகவன் நைஜிரியா said...

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ..//

நன்றிங்கோ இராகவன்..

//விஜய் டிவி இப்படிச் செய்யலாமா..? //

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லைப் போலிருக்கு.///

இவர்தான் முதல் 20 எபிஸோடுகளுக்கான திரைக்கதையை எழுதிக் கொடுத்து, அதில் முதல் 10 எபிஸோடுகளுக்கான பகுதிகளை ஷூட்டும் செய்து கொடுத்துவிட்டார். அந்த வேலைக்கான ஊதியம்கூட இன்னமும் அவருக்குத் தரப்படவில்லை. பாதியிலேயே அவரைக் கழட்டிவிட்டு வேறொரு கதாசிரியர் மற்றும் இயக்குநரை வைத்து இப்போது ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்.. லேட்டாகப் புரிபவர்களுக்கு 35 வயதிருக்கலாம். புரியாதவர்கள் குழந்தைகள் என்று அர்த்தம்..//

என்ன கொடுமை சரவணா இது.. ஓன்னுமே புரியல உலகத்தில.. அப்படின்னா நான் சின்ன குழந்தையா.. அவ்...அவ்...அவ்...///

சந்தேகமேயில்லை.. குழந்தைதான் இராகவன்ஜி..

//கடைசியா ஒரு கேள்வி?
மீ த பர்ஸ்ட்?///

சத்தியமாக நீங்கதான் பர்ஸ்ட்டு..!

நன்றிங்கோ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வெட்டிப்பயல் said...

எங்களுக்கு 27-தான். அதனால என்ன பேசிருப்பாங்கனு எங்க ரேஞ்சுக்கு யோசிக்கறோம்.

பிரபு: கொஞ்சம் பார்த்து பொறுமையா பேசுங்கப்பா. பின்னாடிதான் உட்கார்ந்திருக்கான். அப்பறம் ”சைலன்ஸ்... பேசிட்டு இருக்காங்கல்ல.” அப்படினு சொல்லிடப்போறான்.//

சப்ஜெக்ட்டை தொடலியே வெட்டி ஸார்..!

ஹி..ஹி..ஹி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஹாலிவுட் பாலா said...

விஸ்வனாத்: என்ன அஷோக், வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருந்த! இப்ப கட்சி ஆரம்பிச்சிட்டியாமே?

அஷோக்: யு நோ? நானே மறந்துட்டேன். யெஸ்..யெஸ்..! கட்சில விஜய்’ எனக்கு ரைட் ஹாண்ட், வடிவேல் எனக்கு லெஃப்ட் ஹேண்ட். உங்களுக்கு பதவி வேணும்னாலும், எல்லாம் ஃப்ரீயா இருக்கு. வேணும்னா.. ‘அந்த வீட்டு’ பையனையும் சேர்த்துக்கலாம்.

கௌதம்: என்ன கொடுமை சரவணன் இது? இவனை அஸிஸ்டண்ட் கமிஷ்னரா இருந்தப்பவே, என்கவுண்டர்ல போட்டுத் தள்ளியிருந்திருக்கனும். இந்த போட்டோவை பப்ளிஷ் பண்ணுனதுக்கு உன்னையும் சேர்த்து!
(எனக்கு 31-தாங்கன்னா ஆவுது:))///

ஹா.. ஹா.. ஹா..

சினிமா கதையோட ஒன்றிப் போகுது உங்க கமெண்ட்டு..?

ஆனா நிஜக் கதைக்கு இன்னும் வரலியே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//கிரி said...

நல்லா இருக்குங்கோ (எல்லாமே)//

மிக்க நன்றி கிரியாரே..!

dondu(#11168674346665545885) said...

//இரண்டு நாட்கள் ராத்திரியில் கண் விழித்து எப்படியும் காசு வந்திரும் என்ற நினைப்பில் அதன் திரைக்கதையை தட்டச்சு செய்து கொடுத்துவிட்டு காசு இப்போ வரும்.. அப்போ வரும் என்று காத்திருக்கும் என் நிலையும் கொஞ்சம் கொடுமைதான்..//
ஒரேயடியாக ஏமாற இருக்கிறீர்கள். உங்கள் ஒப்பந்தத்துக்கும் கதாசிரியர் தனது வாடிக்கையாளருடனும் போட்டு கொண்ட ஒப்பந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

அவர் தனது வாடிக்கையாளரிடம் ஏமாந்ததற்காக உங்களுக்கு காசுதராமல் ஏமாற்றவியலாது. அடுத்தமுறை எச்சரிக்கையாக இருங்கள். கதாசிரியர் தனக்கு பணமே வரவில்லை என்பது ரீலாகக் கூட இருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

[[[புதுச்சேரியில் சிறைப்பட்டுக் கிடக்கும் திரைப்பட இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரி நெல்லையில் இருந்து சென்னைவரையிலும் கல்லூரி மாணவர்கள் ரயில் பயண பிரச்சாரம் செய்கிறார்கள். ]]]

அண்ணே இந்த இலங்கை தமிழருக்காக இந்திய தமிழ் நாட்டில் ''தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்'' போர்வையில் நடாத்தப்படும் அனைத்து செயல்களும் --- அப்பாவி தமிழ் பொது மக்கள் போர் சூழலில் மாட்டுபட்டு செய்வதறியாது
திண்டாடும் நிலைக்குள் தள்ளபடுவதற்கு சமன் ---
இதனை சற்று பாருங்கள்
http://www.youtube.com/watch?v=wtuHgSon9AI&eurl=http%3A%2F%2Fmeenagam%2Enet%2Fme%2F%3Fp%3D3152&feature=player_embedded
Melbourne, நகரில் இங்கு Australia வில் புலி கொடி தாங்கி சென்ற காறை (சிங்கள) ஆட்கள் தாக்குவதை --- புலி கொடிக்கு இன்று இருக்கும் மரியாதைக்கு புலியின் கொடூரமான போக்கே காரணம் --- PLOTE போன்ற பிற இயக்கங்கள் சிங்கள பொது மக்களிடையே தமிழருக்கு
அனுதாபம் தேடியபோது புலிகள் அவர்களை ''துரோகிகள்''என்று கொன்றார்கள் --- புலிகளின் அரசியல் அவ்வாறானது ---
சிங்கள பொது மகனின் ஆதரவு இல்லாது போனாலும் அனுதாபம் எமக்கு தேவையே ---
பிரபாகரனுக்கு ''போர்'' மற்றும் ''தனி நாடு'' ஆகிய இரண்டுமே தேவை --- அவர் தனியாக ஆட்சி செலுத்த --- இதற்கு தன்மானம் உள்ள எந்த தமிழனோ மனிதனோ இணங்கமாட்டான் --- புலியை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது!!!///

ஆஸ்திரேலிய போலீஸார் நடவடிக்கை எடுத்தார்களா இல்லையா..?

அவரவர்க்கு தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கும், வெளிப்படுத்துவதற்கும் முழு உரிமை உண்டு. இதனைத் தடுப்பதே குற்றமாச்சே..!

புலி ஆதரவு, புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறது அப்பாவி பொதுமக்களின் நிலைமை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

[[[அவர் செய்த தவறு, அக்ரிமெண்ட் எதுவும் போடாமலேயே பணியாற்ற ஒத்துக் கொண்டதுதான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த பிராஜெக்ட்டிற்காக உழைத்தது வீணாகிப் போனது அவருக்கு..
இரண்டு நாட்கள் ராத்திரியில் கண் விழித்து எப்படியும் காசு வந்திரும் என்ற நினைப்பில் அதன் திரைக்கதையை தட்டச்சு செய்து கொடுத்துவிட்டு காசு இப்போ வரும்.. அப்போ வரும் என்று காத்திருக்கும் என் நிலையும் கொஞ்சம் கொடுமைதான்.. ]]]

கடைசி நான்கு சொற்களையும் பார்த்ததும் அப்பிடியே அடித்து கொல்லோனும் போல இருக்குதையா--- டிவி கரனை அல்ல உம்மையும் உமது சோனகிரி கதாசிரியரையும் --- வேற என்னய்யா ? --- எழுதி நாலு பேருக்கு தெரியப்படுத்தி எப்பேர்பட்ட மோசடிகாரங்கள் என்று தெரியப்படுத்தி --- அவனுவளை நாக்கை பிடுங்கி சாக பண்ணனுமே!///

இதுக்கெல்லாம் இங்க யாரும் நாக்கைப் பிடுங்குக்கிட்டு சாக மாட்டாங்க ஸார்..

பணத்தை வசூல் செய்வதற்கு முறையான சினிமா அமைப்புகள் உள்ளன. அவர்கள் மூலம்தான் செய்ய வேண்டும்.. அந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் தாமதமாகும் போல் தெரிகிறது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///dondu(#11168674346665545885) said...

//இரண்டு நாட்கள் ராத்திரியில் கண் விழித்து எப்படியும் காசு வந்திரும் என்ற நினைப்பில் அதன் திரைக்கதையை தட்டச்சு செய்து கொடுத்துவிட்டு காசு இப்போ வரும்.. அப்போ வரும் என்று காத்திருக்கும் என் நிலையும் கொஞ்சம் கொடுமைதான்..//

ஒரேயடியாக ஏமாற இருக்கிறீர்கள். உங்கள் ஒப்பந்தத்துக்கும் கதாசிரியர் தனது வாடிக்கையாளருடனும் போட்டு கொண்ட ஒப்பந்தத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் தனது வாடிக்கையாளரிடம் ஏமாந்ததற்காக உங்களுக்கு காசு தராமல் ஏமாற்றவியலாது. அடுத்த முறை எச்சரிக்கையாக இருங்கள். கதாசிரியர் தனக்கு பணமே வரவில்லை என்பது ரீலாகக் கூட இருக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்///

இல்லை ராகவன் ஸார்..

கதாசிரியர் என்னுடைய நீண்ட கால நண்பர். நன்கு தெரிந்தவர்.. அவருடைய நிலைமை இன்றைக்கு என்னதைவிடவும் மோசம். நான்தான் அவருக்கு அவ்வப்போது உதவி செய்து கொண்டிருக்கிறேன் இது போன்று..!

சினிமா அமைப்புகளில் புகார் செய்திருக்கிறார்.. இன்னமும் சரியான பதில் வரவில்லை.. காத்திருக்கிறோம் இருவரும்..

benzaloy said...

[[[ சந்தோஷமான ஒரு விஷயம்..!
என்னைப் போன்ற கோடிக்கணக்கான அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்திருக்கும் போர்னோ படத் தயாரிப்பு நிறுவனமான பிரைவேட் அடல்ட் வீடியோ கம்பெனிக்கு ஸ்வீடன் கோர்ட் 100 மில்லியன் டாலருக்கும் அதிமான தொகையை வரியாகக் கட்டச் சொல்லியிருக்கிறதாம்.. ]]]

கதோலிக்க சமயமும் --- ''கற்பு'' என்று எம்மை வாழ்கையை அனுபவிக்க விடாது ''Sex'' கு திரை கட்டிய எனது தமிழ்
சமுதாயத்தையும் நோகணும் ---

Porno காரன் என்னா பண்ணினான் ? ஒரு முக்கிய தேவையை பூர்த்தி பண்றான் ---

நாம என்ன பண்ணறோம் ? சிலுக் மாதிரி உடம்பை பாத்து குலுக்குறோம் !

கொஞ்சம் யதார்த்தமா sex சம்பந்தமா சிந்திச்சா இந்த அவலம் வந்திருக்குமா ?

அட நம்ம உடம்பில ஊறுது இந்திரியம் --- ஊறியது வெளியே செல்லும் வரை எமது மூளை அந்த லெக்கில் தான்
சிந்திக்கும்படி இயற்கை சட்டம் இயற்றியிருகின்றது ---

இதற்கு மாறாக மனதை கட்டுப்படுத்தும் உன்னத தன்மை எம்மில் பலருக்கு இல்லையே அய்யா !

அதுக்கு தான் ஒருத்தன் சொன்னான் :

''என்ன கொடுமை அய்யா இது --- கடலில
போற கப்பல் என்ன மார்கா (அடையாளம்)
வேய்சுட்டு போவுது ?''

benzaloy said...

[[[ இந்தப் பாடல் இன்றைக்கு அகில இந்திய லட்சியத் திராவிடர் கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தருக்கே பொருந்தும்.. ]]]

சீ ச்சி சீ --- இந்த கொள்கை அத்த மானம் இல்லாத வெட்கம் கெட்ட மனிதனும் --- இவனது போகிரி மகனும் சமுதாயத்துக்கே உதவாத பிண்டங்கள் !

இவங்களை எழுதி உமது தரத்தை இறக்காதிங்கோ உண்மை தமிழன் அவர்களே !

benzaloy said...

[[[ 'சூரியன் மறையாத தேசம்' என்ற பெருமையுடன் திகழும் தி கிரேட் பிரிட்டனின் ராணி எலிஸபெத்திடம் பேசுவதற்குக்கூட ஒரு வரைமுறைகளை அரண்மனை வட்டாரம் வகுத்து அதனையே இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடித்தும்ம் வருகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் தற்செயலாக ராணியின் தோளில் கை போட்டு 'வாடி மாமியாரே' என்பதைப் போல் போஸ் கொடுக்க..
இது அடுத்த நொடியே அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் வழக்கம்போல பிளாஷ் நியூஸாகிவிட்டது. ]]]

இரெண்டாவது எலிசபெத் மஹாராணி சில சம்பிரதாயங்களை மீறுவதில் வல்லவர் ---

அரண்மனை அகராதி காட்டுபாடில்
இல்லாத போது பள்ளி மாணவ மாணவி போன்று திடும் என ஏதாவது செய்யக்கூடியவர் ---

Formal Dinner போது டோஸ்ட் செய்த ப்ரெட் துண்டை சூப் ல் தோய்த்து சாப்பிடுவது கெட்ட பழக்கம் ---

ஆனால் பலரும் அவ்வாறு சாப்பிடுவதை விரும்புவார்கள் ---

மஹாராணி யாக முடி சூட்டிய தொடக்க காலத்தில் --- ஓர் Dinner ல் சகலரும் பார்க்கும்படி காத்திருந்து தனது டோஸ்ட் ப்ரெட் துண்டை சூப்பில் போட்டு --- எடுத்து ரசித்து சாபிட்டார் ---

அன்றில் இருந்து சம்பிரதாயம் உடைந்தது ---

மிஷேல் ஒபமா கு முன்னர் ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் மகாராணியை தொட்டு பேசியுள்ளார் என கதை உள்ளது ---

கொஞ்சம் தேடுங்களேன் ப்ளீஸ் -

Cable Sankar said...

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..

லேட்டாகப் புரிபவர்களுக்கு 35 வயதிருக்கலாம். புரியாதவர்கள் குழந்தைகள் என்று அர்த்தம்..//

எனக்கு ஒண்னுமே புரியல..

ஷண்முகப்ரியன் said...

முருகன் மயிலேறி உலகைச் சுற்றச் சென்ற மைலேஜைக் காட்டிலும் உங்கள் சுற்றுப் பெரிது சரவணன்.அடேங்கப்பா ஒரே பதிவில் எத்தனை விஷயங்கள்?

நானானி said...

இட்லி,வடை,பொங்கல்,சட்னி,சாம்பார்-ன்னு காலையில் தலைப்பைப் பாத்ததுமே..நல்ல பசியோடு வந்தேன்.
நல்ல தீனிதான்.

//விஜய் டிவி இப்படிச் செய்யலாமா..? //
பல கதாசிரியர்கள் நிலமை சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் இதேதான்.இது போன்ற அப்பாவிகளின் கருத்துக்களைத் திருடித் தின்பவர்கள்______ஐ விட கேவலமானவர்கள்


”சைலன்ஸ்... பேசிட்டு இருக்காங்கல்ல.”

//கௌதம்: என்ன கொடுமை சரவணன் இது? இவனை அஸிஸ்டண்ட் கமிஷ்னரா இருந்தப்பவே, என்கவுண்டர்ல போட்டுத்தள்ளியிருந்திருக்கனும். இந்த போட்டோவை பப்ளிஷ் பண்ணுனதுக்கு உன்னையும் சேர்த்து!//
இவைகள் ரெண்டும் எனக்குப் பிடித்த கமெண்டுகள்!!!

முருகன் இட்லிக்கடையில் உக்காந்து சாப்பிட்டது போலிருந்தது. என்ன...?மொளகாப்பொடி,எண்ணெய்தான் மிஸ்ஸிங்!!

தமிழ் பிரியன் said...

எனக்கும் ஒன்னும் புரியல..ஒருவேளை ஸ்ரீப்ரியா மூன்றாம் பிறை குத்தாட்டத்திற்கும், ரம்யா கிருஷ்ணன் பதிவுக்கும் தொடர்பு இருக்கோ?

தமிழ் பிரியன் said...

Sorry, அது வாழ்வே மாயம் தானே.. எனக்கு வயசு கம்மிங்க

T.V.Radhakrishnan said...

கார்த்திக்...ஸ்ரீப்ரியா,,? ஞாபகம் இருக்கா?

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

கார்த்திக் ஸ்ரீபிரியா விவகாரம் மற்றும் தற்கொலை முயற்சி நம்மை போன்ற நாற்பது வயதுக்காரர்களுக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கும் என்று நம்ம்புகிறீர்களா ?

VIKNESHWARAN said...

அந்த படத்தை பற்றி புரியவில்லை... :)

Venkatesh subramanian said...

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ..
---ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
மற்றபடி உங்கள் பதிவில் அனேக சமயங்களில் எதாவது வருத்தம் தரும் செய்தி இருப்பது வருத்தமளிக்கிறது.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...
[[[சந்தோஷமான ஒரு விஷயம்..!
என்னைப் போன்ற கோடிக்கணக்கான அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்திருக்கும் போர்னோ படத் தயாரிப்பு நிறுவனமான பிரைவேட் அடல்ட் வீடியோ கம்பெனிக்கு ஸ்வீடன் கோர்ட் 100 மில்லியன் டாலருக்கும் அதிமான தொகையை வரியாகக் கட்டச் சொல்லியிருக்கிறதாம்.. ]]]

கதோலிக்க சமயமும் --- ''கற்பு'' என்று எம்மை வாழ்கையை அனுபவிக்கவிடாது ''Sex'' குதிரை கட்டிய எனது தமிழ்
சமுதாயத்தையும் நோகணும் ---
Porno காரன் என்னா பண்ணினான் ? ஒரு முக்கிய தேவையை பூர்த்தி பண்றான் --- நாம என்ன பண்ணறோம்? சிலுக் மாதிரி உடம்பை பாத்து குலுக்குறோம்! கொஞ்சம் யதார்த்தமா sex சம்பந்தமா சிந்திச்சா இந்த அவலம் வந்திருக்குமா? அட நம்ம உடம்பில ஊறுது இந்திரியம் --- ஊறியது வெளியே செல்லும்வரை எமது மூளை அந்த லெக்கில்தான்
சிந்திக்கும்படி இயற்கை சட்டம் இயற்றியிருகின்றது --- இதற்கு மாறாக மனதை கட்டுப்படுத்தும் உன்னத தன்மை எம்மில் பலருக்கு இல்லையே அய்யா! அதுக்குதான் ஒருத்தன் சொன்னான் :
'என்ன கொடுமை அய்யா இது --- கடலில போற கப்பல் என்ன மார்கா (அடையாளம்) வேய்சுட்டு போவுது ?''//

பென்ஸ் ஸார்..

இந்த மனதைக் கட்டுப்படுத்துகின்ற வித்தையையும் ஒரு சிலருக்கே கொடுத்துத் தொலைத்திருக்கிறான் இறைவன்.. அனைவருக்குேம கொடுக்கவில்லை..

கொடுத்திருந்தால் உலகத்தில் முக்கால்வாசி பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும்..

thevanmayam said...

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ///
புதுச்சேரியில் சிறைப்பட்டுக் கிடக்கும் திரைப்பட இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரி நெல்லையில் இருந்து சென்னைவரையிலும் கல்லூரி மாணவர்கள் ரயில் பயண பிரச்சாரம் செய்கிறார்கள்.////

எல்லாத்தகவல்களும் அருமை நண்பரே!!

ராஜா said...

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..//

எனக்கு உடனே தோணுச்சு, ஆனா வயசு 31 தான் ஆகுது :-).

ஸ்ரீப்ரியா: (கார்த்திக்கிடம்) நல்லவேளை நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கல.

கார்த்திக்: ஏன் ஸ்ரீ?

ஸ்ரீ: பண்ணிருந்தா சரத் & ராதிகா மாதிரி நானும் நீயும் ஆளுக்கொரு தொகுதி எம்.பி தேர்தல்ல நிக்கலாம்ன்னு அடம் பிடிச்சிருப்பிங்க.

ராஜா said...

இதுவே பிரபு & கார்த்திக் பேசிக்கிற மாதிரி இருந்தா

பிரபு: நீ ஸ்ரீப்ரியாவை கல்யாணம் பண்ணிருக்கலாம்

கார்த்திக்: ஏன் பிரதர்?

பிரபு: சரத் ராதிகாவை கல்யாணம் பண்ணதால அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொகுதியிலேயாவது எலெக்ஷன்ல நிப்பாங்க. நீ ஸ்ரீய மிஸ் பண்ணிட்ட, அவங்கள கல்யாணம் பண்ணிருந்தா நீயும் ஸ்ரீயும் ஆளுக்கொரு தொகுதியிலே உன் கட்சி சார்பா நின்னுருக்கலாம், இப்போ தனி ஆளா நிக்க வேண்டிய நிலைமை. என்ன கொடும கார்த்திக் இது!!!!

அத்திரி said...

நான் குழந்தைதான்........... கமெண்டு எதுவும் போட முடியலையே.......

அத்திரி said...

என்ன அண்ணே நம்ம கட பக்கம் ஆளைக்காணோம்??

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

[[[ இந்தப் பாடல் இன்றைக்கு அகில இந்திய லட்சியத் திராவிடர் கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தருக்கே பொருந்தும்.. ]]]

சீ ச்சி சீ --- இந்த கொள்கை அத்த மானம் இல்லாத வெட்கம் கெட்ட மனிதனும் --- இவனது போகிரி மகனும் சமுதாயத்துக்கே உதவாத பிண்டங்கள்! இவங்களை எழுதி உமது தரத்தை இறக்காதிங்கோ உண்மை தமிழன் அவர்களே!///

ஐயையோ.. பென்ஸ் ஸார் என்னாச்சு..?

ஊர்ல இருக்குற எங்களுக்கே இம்புட்டு கோவம் வரல.. உங்களுக்கு பொங்குது..!

டென்ஷனாகாதீங்க ஸார்..

டி.ஆர். நல்ல, சிறந்த பாடலாசிரியர், கவிஞர், பேச்சாளர்.. ஒளிப்பதிவாளர், எடிட்டர், இயக்குநர்..

ஆனால் அதே போல் நல்ல அரசியல்வியாதியாகவும் இருக்க விரும்புகிறார். அது அவரால் முடியவில்லை. அதனால்தான் அவ்வப்போது அவர் கூடுவிட்டு கூடு பாய்வது..

அவர் மகனைப் பற்றி நோ கமெண்ட்ஸ்.. விட்டிருவோம்.. அனுபவமே கடவுள். அனுபவப்பட்டுட்டா எல்லாம் சரியாயிரும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///benzaloy said...

[[['சூரியன் மறையாத தேசம்' என்ற பெருமையுடன் திகழும் தி கிரேட் பிரிட்டனின் ராணி எலிஸபெத்திடம் பேசுவதற்குக்கூட ஒரு வரைமுறைகளை அரண்மனை வட்டாரம் வகுத்து அதனையே இன்றளவும் தொடர்ந்து கடைப் பிடித்தும்ம் வருகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் தற்செயலாக ராணியின் தோளில் கை போட்டு 'வாடி மாமியாரே' என்பதைப் போல் போஸ் கொடுக்க.. இது அடுத்த நொடியே அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் வழக்கம்போல பிளாஷ் நியூஸாகிவிட்டது. ]]]

இரெண்டாவது எலிசபெத் மஹாராணி சில சம்பிரதாயங்களை மீறுவதில் வல்லவர் --- அரண்மனை அகராதி காட்டுபாடில் இல்லாத போது பள்ளி மாணவ மாணவி போன்று திடும் என ஏதாவது செய்யக்கூடியவர் ---
Formal Dinner போது டோஸ்ட் செய்த ப்ரெட் துண்டை சூப் ல் தோய்த்து சாப்பிடுவது கெட்ட பழக்கம் --- ஆனால் பலரும் அவ்வாறு சாப்பிடுவதை விரும்புவார்கள் --- மஹாராணி யாக முடி சூட்டிய தொடக்க காலத்தில் --- ஓர் Dinner ல் சகலரும் பார்க்கும்படி காத்திருந்து தனது டோஸ்ட் ப்ரெட் துண்டை சூப்பில் போட்டு --- எடுத்து ரசித்து சாபிட்டார் --- அன்றில் இருந்து சம்பிரதாயம் உடைந்தது ---
மிஷேல் ஒபமாகு முன்னர் ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் மகாராணியை தொட்டு பேசியுள்ளார் என கதை உள்ளது --- கொஞ்சம் தேடுங்களேன் ப்ளீஸ் -///

ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்த ராணியிடம் தனது அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்து வைக்கின்றபோது தற்செயலாக ராணியின் இடுப்பில் கை வைத்துவிட்டார். இது அப்போதும் இதே போல் பரபரப்பானது.. ஞாபகமிருக்கிறது பென்ஸ் ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Cable Sankar said...

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..

லேட்டாகப் புரிபவர்களுக்கு 35 வயதிருக்கலாம். புரியாதவர்கள் குழந்தைகள் என்று அர்த்தம்..//

எனக்கு ஒண்னுமே புரியல..///

பச்சைக் குழந்தைதான்.. சந்தேகமேயில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஷண்முகப்ரியன் said...
முருகன் மயிலேறி உலகைச் சுற்றச் சென்ற மைலேஜைக் காட்டிலும் உங்கள் சுற்றுப் பெரிது சரவணன். அடேங்கப்பா ஒரே பதிவில் எத்தனை விஷயங்கள்?///

இதுக்குப் பேருதான் இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///நானானி said...
இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார்-ன்னு காலையில் தலைப்பைப் பாத்ததுமே.. நல்ல பசியோடு வந்தேன். நல்ல தீனிதான்.//

ஹெவி வெயிட்தான..?

//விஜய் டிவி இப்படிச் செய்யலாமா..? //
பல கதாசிரியர்கள் நிலமை சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித்திரையிலும் இதேதான்.இது போன்ற அப்பாவிகளின் கருத்துக்களைத் திருடித் தின்பவர்கள்______ஐ விட கேவலமானவர்கள்.//

என்ன செய்ய? புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே..?!

///”சைலன்ஸ்... பேசிட்டு இருக்காங்கல்ல.”

//கௌதம்: என்ன கொடுமை சரவணன் இது? இவனை அஸிஸ்டண்ட் கமிஷ்னரா இருந்தப்பவே, என்கவுண்டர்ல போட்டுத் தள்ளியிருந்திருக்கனும். இந்த போட்டோவை பப்ளிஷ் பண்ணுனதுக்கு உன்னையும் சேர்த்து!//

இவைகள் ரெண்டும் எனக்குப் பிடித்த கமெண்டுகள்!!!///

எனக்கும்தான் நானானி ஸார்..

//முருகன் இட்லிக்கடையில் உக்காந்து சாப்பிட்டது போலிருந்தது. என்ன...? மொளகாப்பொடி, எண்ணெய்தான் மிஸ்ஸிங்!!///

அடுத்தத் தடவை அதையும் சேர்த்து கொடுத்திடறேன்..!

வருகைக்கு மிக்க நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///தமிழ் பிரியன் said...
எனக்கும் ஒன்னும் புரியல.. ஒருவேளை ஸ்ரீப்ரியா மூன்றாம் பிறை குத்தாட்டத்திற்கும், ரம்யா கிருஷ்ணன் பதிவுக்கும் தொடர்பு இருக்கோ?///

ச்சின்னப்பையன்னு நல்லாத் தெரிஞ்சு போச்சு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தமிழ் பிரியன் said...
Sorry, அது வாழ்வே மாயம்தானே.. எனக்கு வயசு கம்மிங்க.//

படிச்சாலே தெரியுதுங்க தம்பி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///T.V.Radhakrishnan said...
கார்த்திக்... ஸ்ரீப்ரியா,,? ஞாபகம் இருக்கா?///

அப்பாடா.. ஐயா கண்டுபிடிச்சிட்டாரு..!

அப்ப நீங்க வயசானவருதான்.. ஒத்துக்குறேன் ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
கார்த்திக் ஸ்ரீபிரியா விவகாரம் மற்றும் தற்கொலை முயற்சி நம்மை போன்ற நாற்பது வயதுக்காரர்களுக்கு மட்டும்தான் தெரிந்து இருக்கும் என்று நம்ம்புகிறீர்களா?///

நிச்சயம் நம்புகிறேன்.. இதோ பாருங்கள்.. டி.வி.ஆர். ஐயா வந்துதானே சொன்னார்.. மற்றவர்கள்..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//VIKNESHWARAN said...

அந்த படத்தை பற்றி புரியவில்லை...:)//

மேலே டி.வி.ராதாகிருஷ்ணன் ஸாரும், அருப்புக்கோட்டை பாஸ்கர் ஸாரும் எழுதியிருக்கிறார்கள் விக்கி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Venkatesh subramanian said...
இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ..
---ரிப்பிட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
மற்றபடி உங்கள் பதிவில் அனேக சமயங்களில் எதாவது வருத்தம் தரும் செய்தி இருப்பது வருத்தமளிக்கிறது.///

வாழ்க்கையே அப்படித்தான் இருக்கிறது வெங்கடேஷ்..

சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்..?!

வருகைக்கு நன்றி ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///thevanmayam said...
இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் சூப்பருங்கோ///


//புதுச்சேரியில் சிறைப்பட்டுக் கிடக்கும் திரைப்பட இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரி நெல்லையில் இருந்து சென்னைவரையிலும் கல்லூரி மாணவர்கள் ரயில் பயண பிரச்சாரம் செய்கிறார்கள்.////

எல்லாத் தகவல்களும் அருமை நண்பரே!!///

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜா said...

//இந்தப் புகைப்படத்தைப் பார்க்கின்றவர்களுக்கு உடனேயே அவர்களுடைய உதட்டோரம் குறுநகை தோன்றியிருந்தால் அவர்கள் 40 வயதைத் தொடுபவர்கள் என்று அர்த்தம்..//

எனக்கு உடனே தோணுச்சு, ஆனா வயசு 31தான் ஆகுது :-).//

கில்லாடியான ஆளுதான் ராஜா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜா said...

இதுவே பிரபு & கார்த்திக் பேசிக்கிற மாதிரி இருந்தா

பிரபு: நீ ஸ்ரீப்ரியாவை கல்யாணம் பண்ணிருக்கலாம்

கார்த்திக்: ஏன் பிரதர்?

பிரபு: சரத் ராதிகாவை கல்யாணம் பண்ணதால அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொகுதியிலேயாவது எலெக்ஷன்ல நிப்பாங்க. நீ ஸ்ரீய மிஸ் பண்ணிட்ட, அவங்கள கல்யாணம் பண்ணிருந்தா நீயும் ஸ்ரீயும் ஆளுக்கொரு தொகுதியிலே உன் கட்சி சார்பா நின்னுருக்கலாம், இப்போ தனி ஆளா நிக்க வேண்டிய நிலைமை. என்ன கொடும கார்த்திக் இது!!!!///

- ))))))))))))))))))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அத்திரி said...
நான் குழந்தைதான்........... கமெண்டு எதுவும் போட முடியலையே.......///

தம்பீ.. நீ சொன்னாலும் சொல்லாட்டியும் குழந்தைதான் ராசா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அத்திரி said...
என்ன அண்ணே நம்ம கட பக்கம் ஆளைக் காணோம்??///

நேரமில்ல தம்பி..

புதுப் பதிவுகள் கண்ணுல படும்போதெல்லாம் பின்னூட்டம் போட்டுக்கிட்டுத்தான இருக்கேன்..

ராஜா said...

//நிச்சயம் நம்புகிறேன்.. இதோ பாருங்கள்.. டி.வி.ஆர். ஐயா வந்துதானே சொன்னார்.. மற்றவர்கள்..?!//

உண்மைத்தமிழரே, நம்புங்கள். நான் பின்னூட்டம் இடும்போது டிவிஆர், அருப்புக்கோட்டையார் பின்னூட்டங்களைப் பார்க்கவில்லை. நாங்க தலைமுறை தலைமுறையா குமுதம் வாசகர்கள். சின்ன வயசிலேயே குமுதம் படித்து இந்த மாதிரி பொது அறிவை வளர்த்துக்கிட்டேன் :-). ஆனாலும் 40 வயசுக்காரங்களுக்கு தான் தெரியும்ன்னு நினைக்கிறது ரொம்ப ஓவருங்க, கார்த்திக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜா said...
//நிச்சயம் நம்புகிறேன்.. இதோ பாருங்கள்.. டி.வி.ஆர். ஐயா வந்துதானே சொன்னார்.. மற்றவர்கள்..?!//

உண்மைத்தமிழரே, நம்புங்கள். நான் பின்னூட்டம் இடும்போது டிவிஆர், அருப்புக்கோட்டையார் பின்னூட்டங்களைப் பார்க்கவில்லை. நாங்க தலைமுறை தலைமுறையா குமுதம் வாசகர்கள். சின்ன வயசிலேயே குமுதம் படித்து இந்த மாதிரி பொது அறிவை வளர்த்துக்கிட்டேன்:-). ஆனாலும் 40 வயசுக்காரங்களுக்குதான் தெரியும்ன்னு நினைக்கிறது ரொம்ப ஓவருங்க, கார்த்திக் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது?///

குமுதம் படிச்சு பொது அறிவை வளர்த்துக்கிட்டீங்களா..?

குட்.. வெரிகுட்..

கார்த்திக்கு கல்யாணமாகி 20 வருஷமாச்சு.. அப்ப உங்களுக்கு 10 வயசு இருக்குமா..?

அதுக்கப்புறம் பத்திரிகைகள் படிச்சு தெரிஞ்சுக்கிட்டீங்க.. கரெக்ட்டா..

வாழ்க வளமுடன்..

ராஜா said...

//அதுக்கப்புறம் பத்திரிகைகள் படிச்சு தெரிஞ்சுக்கிட்டீங்க.. கரெக்ட்டா..//

ம்ம் கார்த்திக் சோலைக்குயில் ஹீரோயினை காதலிக்கிறார்ன்னு தெரிஞ்சதும் ஸ்ரீப்ரியா தற்கொலை முயற்சி செய்தாங்கன்னு படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். ம்ம் 10 வயசு இருக்கும்...

வால்பையன் said...

இன்னைக்கு காரம் அதிகம்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ராஜா said...

//அதுக்கப்புறம் பத்திரிகைகள் படிச்சு தெரிஞ்சுக்கிட்டீங்க.. கரெக்ட்டா..//

ம்ம் கார்த்திக் சோலைக்குயில் ஹீரோயினை காதலிக்கிறார்ன்னு தெரிஞ்சதும் ஸ்ரீப்ரியா தற்கொலை முயற்சி செய்தாங்கன்னு படிச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன். ம்ம் 10 வயசு இருக்கும்...///

பத்து வயசுலேயே இம்புட்டு அறிவா..? ராஜா எந்த ஊரு..? நல்லாயிரும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...
இன்னைக்கு காரம் அதிகம்!///

நான் கம்மின்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்..!