பிளாஷ் நியூஸ்-தி.மு.க. கூட்டணி-தொகுதிகள் அறிவிப்பு

29-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியலை கலைஞர் இன்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. போட்டியிட உள்ள 21 தொகுதிகள்

தென்சென்னை
மத்திய சென்னை
வடசென்னை
பெரும்புதூர்
திருவள்ளூர்(தனி)
அரக்கோணம்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாமக்கல்
கரூர்
பொள்ளாச்சி
நீலகிரி(தனி)
மதுரை
நாகை(தனி)
ராமநாதபுரம்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள 16 தொகுதிகள்

காஞ்சிபுரம்(தனி)
ஆரணி
கடலூர்
ஈரோடு
திருப்பூர்
சேலம்
கோவை
மயிலாடுதுறை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
திருச்சி
விருதுநகர்
தென்காசி(தனி)
நெல்லை
புதுச்சேரி

விடுதலைச்சிறுத்தைகள் போட்டியிட உள்ள 2 தொகுதிகள்

விழுப்புரம்(தனி)
சிதம்பரம்(தனி)

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதி

வேலூர்

38 comments:

pappu said...

அட! அடுத்த அப்டேட்டா? இந்த தடவ எங்க மதுரயில அண்ணன், மதுர டெரர், அஞ்சாநெஞ்சனே நிக்காலாம்னு பேசிக்கிறாங்களே? அப்படியா?

மாயவரத்தான்.... said...

காங்கிரசுக்கு ஒரு 'தனி' தொகுதி கூட கிடையாது. தி.மு.க.வுக்கு ஒண்ணே ஒண்ணு தான். வி.சிறுத்தைக்கு ரெண்டுமே தனித் தொகுதிகள் தான். இதில இருந்து என்ன தெரியுது?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//pappu said...
அட! அடுத்த அப்டேட்டா? இந்த தடவ எங்க மதுரயில அண்ணன், மதுர டெரர், அஞ்சாநெஞ்சனே நிக்காலாம்னு பேசிக்கிறாங்களே? அப்படியா?//

நிச்சயமா அவர்தான் நிக்கிறார் பாப்பு.. தைரியம் இருந்தா.. தில் இருந்தா.. நெஞ்சுல மாஞ்சா இருந்தா சுயேச்சையா நில்லுங்க பார்ப்போம்..

நான் வெளில இருந்து உங்களுக்கு ஆதரவு தர்றேன்.. ஓகேவா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மாயவரத்தான்.... said...
காங்கிரசுக்கு ஒரு 'தனி' தொகுதி கூட கிடையாது. தி.மு.க.வுக்கு ஒண்ணே ஒண்ணு தான். வி.சிறுத்தைக்கு ரெண்டுமே தனித் தொகுதிகள் தான். இதில இருந்து என்ன தெரியுது?//

மன்னிக்கணும் மாயவரத்தான் ஸார்..

நான்தான் அவசரமாக டைப்பிங் செய்ததில் தனித்தொகுதிகளை முழுமையாகக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

தி.மு.க.வுக்கு மொத்தம் 3 தனித் தொகுதிகள். திருவள்ளூர், நீலகிரி, நாகப்பட்டினம்.

காங்கிரஸிற்கு இரண்டு தனித் தொகுதிகள் - காஞ்சிபுரம், தென்காசி.

விடுதலைச்சிறுத்தைகளுக்கு இரண்டுமே தனித் தொகுதிகள்தான்..

அத்திரி said...

100 பாலோயர்ஸ்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

மாயூஸ்! நல்லா கவனிங்கப்பா, திமுக 4 தனிதொகுதி, காங்கிரச் 2 தனி தொகுதி, விசி 2 தனி தொகுதி. அது போகட்டும் நீங்க சொல்வதும் ஒரு விதத்திலே சரிதான்.உண்மையிலேயே தலித் முன்னேற்றத்துக்கு நம்ம அரசியல் கட்சிகள் பாடுபடுவது உண்மையா இருந்தா விடுதலை சிறுத்தைகளுக்கு பொது தொகுதியிலே இடம் கொடுத்து இருக்கணும். அப்பதான் 8 தலித் எம் பி என்பது 10 ஆக அதிகமாகும். அதை செஞ்சாங்கலா?

அது போல உள்ளாட்சியில் 33 சதம் தமிழ்நாட்டிலே இருக்கு. அதை தவிர பொது தொகுதியில் ஒரு மகளிரையாவது நிப்பாட்டினா அந்த 33 இன்னூம் கொஞ்சம் அதிகமாகும். செய்வாங்களா? மாட்டாங்க. அத்ஹு போல காலா காலத்துக்கும் மகளிர் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ ஜெயிச்சா அவங்களுக்குன்ன்னு ஒதுக்க ப்பட்ட துறை அந்த பாழா போன சமூக நலத்துறை தான்.

அது போல தலித் எம்மெல்யாவா இருந்தா பால் வளமோ, கால்நடை பராமரிப்பு துறையோ தான்.

எப்பதான் இதுக்கு எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறாங்களோ அப்ப தான் உண்மையான தலித் சுதந்திரம், மகளிர் சுதந்திரம் விடுதலை உரிமை எல்லாம்.

அதை எல்லாம் விடுத்து சரி என்னவோ போங்க!

புருனோ Bruno said...

உடனடியாக செய்திகளை விரைந்து தருவதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

தண்டோரா said...

பதிவுலக தேர்தலில் அண்ணன் உண்மை தமிழன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அத்திரி said...
100 பாலோயர்ஸ்கள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

நானே கவனிக்கலை தம்பி..

நன்றி நன்றி நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அபிஅப்பா said...

மாயூஸ்! நல்லா கவனிங்கப்பா, திமுக 3 தனி தொகுதி, காங்கிரச் 2 தனி தொகுதி, விசி 2 தனி தொகுதி. அது போகட்டும் நீங்க சொல்வதும் ஒரு விதத்திலே சரிதான். உண்மையிலேயே தலித் முன்னேற்றத்துக்கு நம்ம அரசியல் கட்சிகள் பாடுபடுவது உண்மையா இருந்தா விடுதலை சிறுத்தைகளுக்கு பொது தொகுதியிலே இடம் கொடுத்து இருக்கணும். அப்பதான் 8 தலித் எம் பி என்பது 10 ஆக அதிகமாகும். அதை செஞ்சாங்கலா?//

எப்படிச் செய்வாங்க..? அப்புறம் இவங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யலைன்னு நெஞ்சுக்கு நீதியில உண்மைய எழுதணுமே.. முடியுமா..?

//அது போல உள்ளாட்சியில் 33 சதம் தமிழ்நாட்டிலே இருக்கு. அதை தவிர பொது தொகுதியில் ஒரு மகளிரையாவது நிப்பாட்டினா அந்த 33 இன்னூம் கொஞ்சம் அதிகமாகும். செய்வாங்களா? மாட்டாங்க. அத்ஹு போல காலா காலத்துக்கும் மகளிர் சட்டமன்றத்துலயோ, பாராளுமன்றத்துலயோ ஜெயிச்சா அவங்களுக்குன்ன்னு ஒதுக்கப்பட்ட துறை அந்த பாழா போன சமூக நலத்துறைதான்.//

பொம்பளைங்க அதுக்குத்தான் லாயக்குன்னு நம்ம ஆண் அரசியல்வியாதி வர்க்கம் நினைக்குது. அதுதான் காரணம்..

//அது போல தலித் எம்மெல்யாவா இருந்தா பால் வளமோ, கால்நடை பராமரிப்பு துறையோதான். எப்பதான் இதுக்கு எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறாங்களோ அப்பதான் உண்மையான தலித் சுதந்திரம், மகளிர் சுதந்திரம் விடுதலை உரிமை எல்லாம். அதை எல்லாம் விடுத்து சரி என்னவோ போங்க!//

ஏன்.. உங்க ஸ்பெக்டரம் புகழ் ராசா எம்புட்டு அள்ளிட்டாரு.. நல்ல போஸ்ட்தான.. அப்புறமென்ன..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//புருனோ Bruno said...
உடனடியாக செய்திகளை விரைந்து தருவதற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.//

எதுக்கு ஸார் நன்றின்ற பெரிய, பெரிய வார்த்தையெல்லாம்.. நான் எழுதறது என் பிளாக் நிறைய இடத்துல படிக்கணும்.. படிக்க வைக்கணும்.. பலரால பார்க்கப்படணும்ன்றதாலதான்.. இதுல என்னோட சுயநலமும் சேர்ந்துதான் இருக்கு. அதுதான் உண்மை.

என்னை மாதிரி வசதியும், வாய்ப்பும் கிடைச்சா எல்லாரும் இது மாதிரி எழுதலாம் ஸார்..

வாய்ப்பில்லாமததால்தான் பல பேரால் எழுத முடியவில்லை. அதுதான் உண்மை.

இப்போது எனக்குக் கிடைப்பதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.. அவ்வளவுதான்.. விடுங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தண்டோரா said...
பதிவுலக தேர்தலில் அண்ணன் உண்மை தமிழன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.//

இதெல்லாம் நியாயமாண்ணேன். உண்மையா நீங்கதாண்ணே எனக்கு அண்ணன். நிஜமாலும்தான்..

இந்தப் பதிவுலகத் தேர்தல்ன்னா என்னங்கண்ணா.. என்னை விடுங்கண்ணா.. நான் ரொம்பச் சின்னப் பையன்னா.. இன்னும் கல்யாணம்கூட ஆகலை..

அபி அப்பா said...

\\எப்படிச் செய்வாங்க..? அப்புறம் இவங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யலைன்னு நெஞ்சுக்கு நீதியில உண்மைய எழுதணுமே.. முடியுமா..?
\\

நான் எல்லா அரசியல்வாதிகளையும் தான் சொல்றேன். ஆனா நீங்க கலைஞரை மட்டும் பிடிச்சு தொங்குறீங்க. பூனை குட்டி கீழே குதிச்சு ஓடுது பிடிங்க, நான் சொன்னது திருமா உட்பட தான். எங்களுக்கு பொது தொகுதி குடுங்கன்னு கேட்டு வாங்கியிருந்தா சரி அந்த 2 தொகுதியீல திமுக நிப்பாட்டினா கூட 2 தலித் எம் பி வந்திருப்பாங்களேன்னு தான் ஆதங்கப்பட்டேன்.

அபி அப்பா said...

\\ஏன்.. உங்க ஸ்பெக்டரம் புகழ் ராசா எம்புட்டு அள்ளிட்டாரு.. நல்ல போஸ்ட்தான.. அப்புறமென்ன..?\\

ஸ்பெட்ரம் ஊழல் அப்படின்னு சொல்லிகிட்டு இருப்ப்பது தற்போது இந்திய அளவில் நீங்க மட்டுமே. அது பத்தி வாயை பிலாஸ்திரி போட்டு ஒட்டிகிட்ட பாஜகவையும், செயலலிதாவையும் போய் ஏன் வாயை மூடிகிட்டீங்கன்னு கேளுங்க.

எங்க என்ன தப்பு நடந்துச்ச்சுன்னு யாருக்கும் தெரியலை. எங்க சரி நடந்துச்சுன்னு யாரும் தெரியலை. இல்லாட்டி 60 கோடி ஊழல்ன்னு கூப்பாடு போட்டு ராஜீவை போட்டு சத்து எடுத்து வி.பி.சிங் அவரை புரட்டி போட்டுட்டு வந்து அந்த சீட்டுல உட்காந்தாரே ஆனா செயலலிதாவும் பாசகவும் ஸ்பெட்ரம் ஊழல் மதிப்பு 60000 கோடி ரூவாய்ன்னு சொல்லிகிட்டு இந்நேரம் சும்மா இருந்துடுவாங்களா? சும்மா வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேச கூடாது.

அடுத்து விஷசம் ஆ.ராஜாவுக்கு கூட சுற்று சூழல் தான் கொடுக்கப்பட்டது. பின்ன வந்த அரசியல் சூழலால் தான் சுற்று சூழல் போய் இந்த துறை வந்துச்சு.

அபி அப்பா said...

அய்யோ ஏன் சரவணா ஒரே கமெண்ட் இத்தனை தடவை வந்திருக்கு நீக்கிடுங்க. 1 மாத்திரம் வச்சிட்டு நீக்கிடுங்க!

நமிதா...! said...

இன்னும் கல்யாணம்கூட ஆகலை..
//

ஏன் என்னைய கட்டிகிறது மச்சான்

:)

pappu said...

அட! உங்க ஆதரவு இருந்தா நான் ஜனாதிபதி தேர்தல்ல கூட நிக்கலாம். ஆனா M.P. எலக்சனுக்கே எனக்கு வயசு தகுதி இல்லைங்க! நான் பதிவுலகைலயே சின்ன பையன்னு தெரியாதா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அபி அப்பா said...

\\எப்படிச் செய்வாங்க..? அப்புறம் இவங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யலைன்னு நெஞ்சுக்கு நீதியில உண்மைய எழுதணுமே.. முடியுமா..?\\

நான் எல்லா அரசியல்வாதிகளையும் தான் சொல்றேன். ஆனா நீங்க கலைஞரை மட்டும் பிடிச்சு தொங்குறீங்க. பூனை குட்டி கீழே குதிச்சு ஓடுது பிடிங்க.///

நீங்க கலைஞரை மட்டுமே புடிச்சுத் தொங்கிட்டிருக்கிறதாலதான் நானும் கலைஞரை பத்தி மட்டுமே சொன்னேன்..

//நான் சொன்னது திருமா உட்படதான். எங்களுக்கு பொது தொகுதி குடுங்கன்னு கேட்டு வாங்கியிருந்தா சரி அந்த 2 தொகுதியீல திமுக நிப்பாட்டினா கூட 2 தலித் எம் பி வந்திருப்பாங்களேன்னு தான் ஆதங்கப்பட்டேன்.//

அப்படி செஞ்சா தலித் மக்களைத் தவிர மத்தவங்க ஓட்டுப் போடலைன்னு வைங்க.. பொழைப்புல மண்ணு விழுந்திரும்ல.. அதனாலதான்.. இந்த மாதிரி ஜனநாயக ரீதியிலான ரிஸ்க்கெல்லாம் ஐயாமாருக எடுக்க மாட்டாங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அபி அப்பா said...

\\ஏன்.. உங்க ஸ்பெக்டரம் புகழ் ராசா எம்புட்டு அள்ளிட்டாரு.. நல்ல போஸ்ட்தான.. அப்புறமென்ன..?\\

ஸ்பெட்ரம் ஊழல் அப்படின்னு சொல்லிகிட்டு இருப்ப்பது தற்போது இந்திய அளவில் நீங்க மட்டுமே. அது பத்தி வாயை பிலாஸ்திரி போட்டு ஒட்டிகிட்ட பாஜகவையும், செயலலிதாவையும் போய் ஏன் வாயை மூடிகிட்டீங்கன்னு கேளுங்க.///

மூடுன மாதிரி தெரியலையே.. ஜெயலலிதாகூட இது பத்தி அறிக்கை விட்டாங்களே 2 வாரத்துக்கு முன்னாடி..

//எங்க என்ன தப்பு நடந்துச்ச்சுன்னு யாருக்கும் தெரியலை. எங்க சரி நடந்துச்சுன்னு யாரும் தெரியலை. இல்லாட்டி 60 கோடி ஊழல்ன்னு கூப்பாடு போட்டு ராஜீவை போட்டு சத்து எடுத்து வி.பி.சிங் அவரை புரட்டி போட்டுட்டு வந்து அந்த சீட்டுல உட்காந்தாரே ஆனா செயலலிதாவும் பாசகவும் ஸ்பெட்ரம் ஊழல் மதிப்பு 60000 கோடி ரூவாய்ன்னு சொல்லிகிட்டு இந்நேரம் சும்மா இருந்துடுவாங்களா? சும்மா வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு பேச கூடாது.//

இப்ப என்ன சொல்ல வர்றீங்க.. இவுங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுத்துட்டாங்க. அதுனால அவங்க அமைதியாயிட்டாங்க. அப்படிங்கிறீங்க.

ஆக ஒட்டு மொத்தமா கூட்டுக் கொள்ளையடிச்சிருக்காங்கன்னு சொல்றீங்க.. ஓகே.. உங்க வாதப்படியே இவுக நல்ல அரசியல்வாதிகளாக இருந்து தொலையட்டும்..

//அடுத்து விஷசம் ஆ.ராஜாவுக்கு கூட சுற்று சூழல்தான் கொடுக்கப்பட்டது. பின்ன வந்த அரசியல் சூழலால்தான் சுற்று சூழல் போய் இந்த துறை வந்துச்சு.///

இன்னுமொரு முறை பேரன்-தாத்தா முட்டல், மோதல் வந்தால் இன்னொரு ஸ்பெக்டரம் நடக்கும்.. அவ்வளவுதான்..

நாயை குளிப்பாட்டி நடுவீட்ல வைச்சாலும் அது மோந்து பார்க்கத்தான் செய்யும். இது எல்லா நாய்களுக்கும் பொருந்தும்..!

வண்ணத்துபூச்சியார் said...

தங்கள் குறும்படம் பற்றி விகடனில் செய்தி வந்திருக்காம். யுவகிருஷ்ணா பதிவில் சொல்லியிருக்கார்.

என்ன தலை.. வர வர எதுவுமே சொல்ல மாட்டிரிங்க..

உடல் நலமா..? Take care ..

முத்து தமிழினி said...

/காங்கிரசுக்கு ஒரு 'தனி' தொகுதி கூட கிடையாது. தி.மு.க.வுக்கு ஒண்ணே ஒண்ணு தான். வி.சிறுத்தைக்கு ரெண்டுமே தனித் தொகுதிகள் தான். இதில இருந்து என்ன தெரியுது?//


வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தீங்கண்ணே..என்னாச்சு?

என்னவோ போங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அபி அப்பா said...
அய்யோ ஏன் சரவணா ஒரே கமெண்ட் இத்தனை தடவை வந்திருக்கு நீக்கிடுங்க. 1 மாத்திரம் வச்சிட்டு நீக்கிடுங்க!/

கொலை வெறில நீங்களே நாலு தடவை குத்திட்டு.. பிறகென்ன அய்யோ வேண்டிக்கிடக்கு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நமிதா...! said...
இன்னும் கல்யாணம்கூட ஆகலை..//

ஏன் என்னைய கட்டிகிறது மச்சான்:)///

அப்புறம், உன் சூரத் மச்சான் என்னை ஓட, ஓட விரட்ட மாட்டானா..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வண்ணத்துபூச்சியார் said...
தங்கள் குறும்படம் பற்றி விகடனில் செய்தி வந்திருக்காம். யுவகிருஷ்ணா பதிவில் சொல்லியிருக்கார். என்ன தலை.. வர வர எதுவுமே சொல்ல மாட்டிரிங்க.. உடல் நலமா..? Take care ..//

விசாரிப்புக்கு நன்றி..

நேர்ல பார்க்கும்போது சொல்லலாம்னு இருந்தேன்.. சின்ன விஷயம்தானே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///முத்து தமிழினி said...
//காங்கிரசுக்கு ஒரு 'தனி' தொகுதி கூட கிடையாது. தி.மு.க.வுக்கு ஒண்ணே ஒண்ணுதான். வி.சிறுத்தைக்கு ரெண்டுமே தனித் தொகுதிகள் தான். இதில இருந்து என்ன தெரியுது?//

வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தீங்கண்ணே..என்னாச்சு? என்னவோ போங்க..//

இந்தத் தவறில் என்னுடைய பங்கும் இருக்கிறது முத்து ஸார்..

ஒருவேளை அப்படி அமைந்திருந்தால் என்ன தெரியும் என்று மாயவரத்தான் கேட்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்..!

Bhuvanesh said...

எப்படியோ இந்த முறை பா.ம.கா விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளை மோத விட்டுவிட்டார்கள்!!

சிதம்பரம் தொகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்று நினைக்கிறன்!!

அப்புறம் திருவண்ணாமலை கொஞ்சம் பதட்டம் இருக்கும்.. அமைதிக்கு போராடும் குரு அல்லவா வேட்பாளர்.. இந்த தொகுதியில் செஞ்சி ராமச்சந்திரன் (தி.மு.க) போட்டியிடுவார் என்று நினைக்கிறன்.. பார்க்கலாம் இந்த தொகுதியில் கண்டிப்பாக தி.மு.க ஜெய்க்க வேண்டும் என்பது என் விருப்பம்!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Bhuvanesh said...

எப்படியோ இந்த முறை பா.ம.கா விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகளை மோத விட்டுவிட்டார்கள்!!
சிதம்பரம் தொகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் என்று நினைக்கிறன்!!
அப்புறம் திருவண்ணாமலை கொஞ்சம் பதட்டம் இருக்கும்.. அமைதிக்கு போராடும் குரு அல்லவா வேட்பாளர்.. இந்த தொகுதியில் செஞ்சி ராமச்சந்திரன் (தி.மு.க) போட்டியிடுவார் என்று நினைக்கிறன்.. பார்க்கலாம் இந்த தொகுதியில் கண்டிப்பாக தி.மு.க ஜெய்க்க வேண்டும் என்பது என் விருப்பம்!!//

போச்சுடா..!

தி.மு.க. கூட்டணியே காலியாகணும்னு நான் நினைக்கிறேன்..

நீங்க வேற தம்பி..!

Bhuvanesh said...

ஹி ஹி.. அண்ணே, உங்க மனசாட்சிக்கு துரோகம் செய்யாம சொல்லுங்க காடுவெட்டி குரு ஜெயிக்கணுமா ??

வால்பையன் said...

தனி என்பதற்கு என்ன அர்த்தம்
அந்த தொகுதி இந்தியாவில் சேராதா?

ஒன்னும் புரியலையே?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
ஹி ஹி.. அண்ணே, உங்க மனசாட்சிக்கு துரோகம் செய்யாம சொல்லுங்க காடுவெட்டி குரு ஜெயிக்கணுமா??///

வேற வழி..!

மொதல்ல நமக்கு பொதுவான எதிரியை வெளியேத்த பார்ப்போம்..

அப்புறமா நமக்குள்ள இருக்குற பிரச்சினையை பேசித் தீர்த்துக்க முயல்வோம்.. முடியாட்டி என்ன செய்யணுமோ அதைச் செய்வோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...
தனி என்பதற்கு என்ன அர்த்தம்
அந்த தொகுதி இந்தியாவில் சேராதா? ஒன்னும் புரியலையே?///

வாலு..

இந்தக் கிண்டல்தான வேணாங்குறது..? உங்களுக்குத் தெரியாததா..?

தனித்தொகுதின்னா அதுல தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டு்ம்தான் போட்டியிட முடியும்..

பொதுத் தொகுதின்னா தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்து யாராக இருந்தாலும் போட்டியிடலாம்..!

தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயமாக பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதற்காக இருக்கும் ஒரு சட்டம் இது..

ஓகே..

வால்பையன் said...

உணையிலேயே எனக்கு இப்போ தான் தெரியும்!
இதே போல் பெண்கள் மட்டும் தான் நிற்கவேண்டும் என எதாவது தொகுதி இருக்கா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வால்பையன் said...
உணையிலேயே எனக்கு இப்போ தான் தெரியும்!//

ஆச்சரியமாக உள்ளது வாலு..

//இதே போல் பெண்கள் மட்டும்தான் நிற்கவேண்டும் என எதாவது தொகுதி இருக்கா?///

இருக்குமா..? இருக்கத்தான் விடுவானுகளா ஆம்பளைங்க..

இல்லவே இல்லை..!

Bhuvanesh said...

//வேற வழி..!

மொதல்ல நமக்கு பொதுவான எதிரியை வெளியேத்த பார்ப்போம்..

அப்புறமா நமக்குள்ள இருக்குற பிரச்சினையை பேசித் தீர்த்துக்க முயல்வோம்.. முடியாட்டி என்ன செய்யணுமோ அதைச் செய்வோம்..!//


சரி அண்ணே, நீங்க சொல்லற மாதிரியே வெச்சுக்குவோம்.. தேர்தல் முடுஞ்சவுடனே இந்த கட்சி காங்கிரஸ் க்கு ஆதரவு தர ஒரு வாய்பிருக்கு.. ஒரு மந்திரி பதவி கொடுத்தால போதும் .. அதுக்காகவே இந்த கட்சி எல்லா இடத்திலையும் தோக்கனும்!! ஒரு தடவை அவர்கள் வாஷ் அவுட் ஆனா தான் அவர்கள் ஆட்டம் குறையும்!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
//வேற வழி..!

மொதல்ல நமக்கு பொதுவான எதிரியை வெளியேத்த பார்ப்போம்..

அப்புறமா நமக்குள்ள இருக்குற பிரச்சினையை பேசித் தீர்த்துக்க முயல்வோம்.. முடியாட்டி என்ன செய்யணுமோ அதைச் செய்வோம்..!//


சரி அண்ணே, நீங்க சொல்லற மாதிரியே வெச்சுக்குவோம்.. தேர்தல் முடுஞ்சவுடனே இந்த கட்சி காங்கிரஸ் க்கு ஆதரவு தர ஒரு வாய்பிருக்கு.. ஒரு மந்திரி பதவி கொடுத்தால போதும் .. அதுக்காகவே இந்த கட்சி எல்லா இடத்திலையும் தோக்கனும்!! ஒரு தடவை அவர்கள் வாஷ் அவுட் ஆனா தான் அவர்கள் ஆட்டம் குறையும்!!///

இதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்ல தம்பி..

நிச்சயம் பா.ம.க. தேர்தல் முடிந்தவுடன் காங்iகிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கத்தான் போகிறது.

தனியா நின்னா ஒரு சீட் கூட கிடைக்காது என்பது டாக்டருக்கே நல்லா தெரியும்.

அதனாலதான் தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணியில்லாம இறங்கறதா இல்லைங்குறார்..

எல்லாம் பயம்தான்..!

இதுக்காகவே தோக்கணும்கிற.. சரி.. தோக்கட்டும்..

எந்த வகையிலாவது இந்த காங்கிரஸ் ஜெயிக்காம இருக்கணும்ம்ப்பா..

அதான் ஈழத்து பிரச்சினைக்கு எதையாவது செய்ய உதவும்..

திரும்பவும் காங்கிரஸ்தான்னா நம்ம ஈழத்தையே மறந்திட்டுப் போயிர வேண்டியதுதான்..!

Bhuvanesh said...

//அதான் ஈழத்து பிரச்சினைக்கு எதையாவது செய்ய உதவும்..

திரும்பவும் காங்கிரஸ்தான்னா நம்ம ஈழத்தையே மறந்திட்டுப் போயிர வேண்டியதுதான்..!//

எனக்கும் இதே பயம் இருக்குன்னே.. அந்த அம்மா வரவங்கள அரவணைச்சு போக மாட்டாங்க.. அதனால மதிமுக அல்லது கம்யூனிஸ்ட் யாராவது மன சங்கடம் ஏற்படலாம் .. தேர்தல் வேலையை உற்சாகமா செய்யாமல் போகலாம்!! பாக்கலாம் ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
//அதான் ஈழத்து பிரச்சினைக்கு எதையாவது செய்ய உதவும்..
திரும்பவும் காங்கிரஸ்தான்னா நம்ம ஈழத்தையே மறந்திட்டுப் போயிர வேண்டியதுதான்..!//

எனக்கும் இதே பயம் இருக்குன்னே.. அந்த அம்மா வரவங்கள அரவணைச்சு போக மாட்டாங்க.. அதனால மதிமுக அல்லது கம்யூனிஸ்ட் யாராவது மன சங்கடம் ஏற்படலாம்.. தேர்தல் வேலையை உற்சாகமா செய்யாமல் போகலாம்!! பாக்கலாம்..///

பார்க்கலாம்..

abeer ahmed said...

See who owns oxfordjournals.org or any other website:
http://whois.domaintasks.com/oxfordjournals.org