'நல்லவனுக்கு நல்லவன்' சூப்பர்ஹிட்டுக்கான காரணம்..!

05-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தினை 'கே டிவியில்' பார்த்தேன்.

படம் வந்த புதிதில், "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என்ற பாடல் விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது..

பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் 'பிள்ளைகள்' கூட்டத்திற்கு நடுவே சைக்கிளை ஓட்டிச் சென்று, முன் ஹேண்ட்பாரில் அமர்ந்த நிலையில் "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள.." என்று வேண்டுமென்றே பாடிக் கொண்டு சென்ற கலர், கலர் நினைவுகளை உசுப்பிவிட்டது திரைப்படம்.

ஆனால் பெரியவர்களுக்குப் பிடித்தமானதாக ஒரு பாடலும் இந்தப் படத்தில் இருந்தது. அது "சிட்டுக்குச் சின்னச் சிட்டுக்குச் செல்லச் சிறகு முளைத்து.." என்ற பாடல்.

இந்தப் படம் வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் வீட்டை விட்டு ஓடிப் போகும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாகி, இதனால் மன அவஸ்தைக்குள்ளான தகப்பன், தாய்மார்களின் கூட்டமும் அதிகரித்திருந்த சூழல்..

"ரஜினி படத்துக்கு வயசான பார்ட்டிக வர மாட்டாங்களே மாப்ளை..! என்னடா இது இன்னிக்கு அதிசயமா இருக்கு?” என்று திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் வாசலில் நண்பர்களுடன் பிரமிப்பாக பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

ரஜினியையும், ராதிகாவையும் தங்களது பிரதிநிதியாக நினைத்து படம் பார்த்து நெகிழ்ந்த தம்பதியினர்தான் லட்சணக்கணக்கில். இந்தப் படத்தின் வெற்றிக்கு மூல காரணமே இதுதான்.. எனக்குத் தெரிந்து ரசிகர்களைத் தவிர்த்து பெருவாரியான பொதுமக்களால் அதிகம் விரும்பப்பட்ட ரஜினியின் திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்று 'படிக்காதவன்'..

இத்திரைப்படத்தின் மிக முக்கிய முடிச்சே திருநீர்மலையில் நடக்கும் கார்த்திக்கின் திருமணக் காட்சிதான்.

அந்தக் காட்சியில் மட்டும் ஒரு சண்டைக் காட்சியை வைத்திருந்தால் நிச்சயம் படம் பணாலாயிருக்கும்.. அந்த இடத்தில் ரஜினி அவமானத் தோற்றத்தில் ஒரு வார்த்தைகூட பேசாமல், ராதிகாவை அழைத்துக் கொண்டு மெதுவாக தலைகுனிந்து படியிறங்கி வருகின்ற காட்சிதான், படத்தை அப்படியொரு இறுக்கமான சூழலுக்குக் கொண்டு சென்றது.. "பாவி நல்லாயிருப்பானா?!” என்று எத்தனை பெற்றோர்கள் சபித்தார்களோ தெரியாது..! ஆனால் படம் சூப்பர் டூப்பர்..

ரொம்ப வருடங்கள் கழித்து ஏவி.எம். ஸ்டூடியோவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை சந்திக்க நேர்ந்தபோது இது பற்றி கேட்டேன்.. “அந்த இடத்துல சண்டைக் காட்சி வைத்தால் படம் கெட்டுப் போய், கதையே மாறிரும்னு ஏவி.எம்.சரவணன் ஸார் அபிப்ராயப்பட்டாரு.. எனக்கும் அதுதான் சரின்னு தோணுச்சு.. அப்படியே விட்டுட்டேன்..” என்றார்.

பொழுதைப் போக்க உதவியத் திரைப்படங்களை நினைவில் கொள்வது கடினம். ஆனால் இது போன்று காயங்களை ஆற்ற உதவியவைகள் ரசிகனின் நினைவில் என்றென்றைக்கும் நீங்காமல் இருக்கும்..

27 comments:

Bhuvanesh said...

//அந்த இடத்தில் ரஜினி அவமானத் தோற்றத்தில் ஒரு வார்த்தைகூட பேசாமல், ராதிகாவை அழைத்துக் கொண்டு மெதுவாக தலைகுனிந்து படியிறங்கி வருகின்ற காட்சிதான், படத்தை அப்படியொரு இறுக்கமான சூழலுக்குக் கொண்டு சென்றது.//

அவ எப்போ நம்மள விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க வந்தாலோ அப்போவே நாம தோத்துடோம்!! நம்ம தோல்விய ஒத்துகிட்டு அவங்கள வாழ்த்தறதுதான் தான் சரி!!

நல்ல வசனம்.. ரஜினியும் நல்ல Performnace!!

ஹாலிவுட் பாலா said...

ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்.... தலைவர் பத்தின பதிவுக்கு ஓட்டு போடுங்கறீங்களா... இல்ல......

ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்....
ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்....

கானா பிரபா said...

//பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் 'பிள்ளைகள்' கூட்டத்திற்கு நடுவே சைக்கிளை ஓட்டிச் சென்று, முன் ஹேண்ட்பாரில் அமர்ந்த நிலையில் "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள.." என்று வேண்டுமென்றே பாடிக் கொண்டு சென்ற கலர், கலர் நினைவுகளை உசுப்பிவிட்டது திரைப்படம்.//

அதுக்கப்புறம் போலீஸ் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டதை ஏன் சொல்லல அண்ணாச்சி :)

muru said...

//திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் வாசலில் நண்பர்களுடன் பிரமிப்பாக பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.//

அண்ணனுக்கு சொந்த ஊர் திண்டுக்கலா? நான் பக்கம் பத்து கிலோமீட்டர் தான்.

அடுத்து, இன்னைக்கு தான் இந்த படத்தை சன் டி. வி-யில் பாதியிலிருந்து பார்த்தேன். சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு பாட்டுக்காக காத்திருந்து பார்த்தேன். (ஆனால் நான் கொஞ்ச வயசுக்காரன் தான்.)

லேகா பக்க்ஷே said...

இந்த படத்தை சின்ன வயசில் பார்த்த ஞாபகம். "அன்புள்ள அப்பா" , (சிவாஜி சார் நடித்திருக்க வேணும்) கிட்டதட்ட "நல்லவனுக்கு நல்லவன்" ஸ்டோரி போல தானே?
இல்லை, நான் தான் குழம்பி போய் விட்டேனோ தெரியவில்லை.

நாஞ்சில் பிரதாப் said...

எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
வருக.. வருக...1984

மோகன்தாஸ் said...

//விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது.. //

நீங்கள்ல்லாம் விடலையா இருந்திருப்பீங்கங்கிற நினைப்பே கொஞ்சம் odd ஆ இருக்கு ! ;) ஹிஹி.

பிறக்கிறப்பவே இப்படி நடுவயதா பிறந்திருப்பாங்களோன்னு நான் நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவர்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Bhuvanesh said...
//அந்த இடத்தில் ரஜினி அவமானத் தோற்றத்தில் ஒரு வார்த்தைகூட பேசாமல், ராதிகாவை அழைத்துக் கொண்டு மெதுவாக தலைகுனிந்து படியிறங்கி வருகின்ற காட்சிதான், படத்தை அப்படியொரு இறுக்கமான சூழலுக்குக் கொண்டு சென்றது.//

அவ எப்போ நம்மள விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க வந்தாலோ அப்போவே நாம தோத்துடோம்!! நம்ம தோல்விய ஒத்துகிட்டு அவங்கள வாழ்த்தறதுதாதான் சரி!!
நல்ல வசனம்.. ரஜினியும் நல்ல Performnace!!///

புவனேஷ்..

ஆச்சரியம் போங்க..!

இத்தனை வருஷம் கழிச்சும் டயலாக்கை மறக்காம இருக்கீங்க..

ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.. நன்றி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஹாலிவுட் பாலா said...
ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்.... தலைவர் பத்தின பதிவுக்கு ஓட்டு போடுங்கறீங்களா... இல்ல......
ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்....
ய்யாயாயாய்... ய்யாயாயாயாய்....//

பாலா..

ஏனுங்க சாமி.. இப்படி பயமுறுத்துறீங்க..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கானா பிரபா said...

//பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் 'பிள்ளைகள்' கூட்டத்திற்கு நடுவே சைக்கிளை ஓட்டிச் சென்று, முன் ஹேண்ட்பாரில் அமர்ந்த நிலையில் "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள.." என்று வேண்டுமென்றே பாடிக் கொண்டு சென்ற கலர், கலர் நினைவுகளை உசுப்பிவிட்டது திரைப்படம்.//

அதுக்கப்புறம் போலீஸ் முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டதை ஏன் சொல்லல அண்ணாச்சி:)///

அடடா.. அடடா.. என்ன பாசம் கானா தம்பிக்கு..?!

ராசா.. அப்படியொரு பிரச்சினையும் நடக்கல தங்கம்..

புள்ளைக அருமையான பிள்ளைக.. சிரிச்சுக்கிட்டே போயிருச்சுக..! ரசிப்புதான்..

பிடிக்கலைன்னு முகத்துல தெரிஞ்சாலே பக்கத்துல போக மாட்டோம்ல.. அம்புட்டு வெவரமால்ல இருந்தோம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///muru said...
//திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் வாசலில் நண்பர்களுடன் பிரமிப்பாக பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.//
அண்ணனுக்கு சொந்த ஊர் திண்டுக்கலா? நான் பக்கம் பத்து கிலோமீட்டர்தான்.///

அப்படியா..? சந்தோஷம்தான்.. நான் பொறந்தது, வளர்ந்ததெல்லாம் திண்டுக்கல்தான் தம்பீ..

தம்பீ எந்த ஊரு..?

இப்ப இருக்குறது சிங்கப்பூர் போலிருக்கு..!

வாங்க பழகலாம்..!

//அடுத்து, இன்னைக்குதான் இந்த படத்தை சன் டி. வி-யில் பாதியிலிருந்து பார்த்தேன். சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு பாட்டுக்காக காத்திருந்து பார்த்தேன். (ஆனால் நான் கொஞ்ச வயசுக்காரன்தான்.)//

அருமையான பாடல்.. அற்புதமான காட்சியமைப்பு.. உருக்கமாக இருக்கும்.. அதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//லேகா பக்க்ஷே said...
இந்த படத்தை சின்ன வயசில் பார்த்த ஞாபகம். "அன்புள்ள அப்பா", (சிவாஜி சார் நடித்திருக்க வேணும்) கிட்டதட்ட "நல்லவனுக்கு நல்லவன்" ஸ்டோரி போலதானே? இல்லை, நான்தான் குழம்பி போய் விட்டேனோ தெரியவில்லை.//

லேகா மேடம்..

கதையின் அடித்தளம் ரெண்டும் ஒன்றுதான்..

மகள் மீதான பாசம் என்னானது என்பதுதான் அன்புள்ள அப்பாவின் மூலக் கதை..

இதில் வழக்கமான சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தில் இந்த முறை மகள் மூலமாக வந்த பிரச்சினைகளை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நாஞ்சில் பிரதாப் said...
எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... வருக.. வருக...1984//

ஆஹா.. பின்னூட்டம் ரொம்ப வித்தியாசமா இருக்கே..

நன்றி நாஞ்சில் பிரதாப்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மோகன்தாஸ் said...
//விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது//
நீங்கள்ல்லாம் விடலையா இருந்திருப்பீங்கங்கிற நினைப்பே கொஞ்சம் odd ஆ இருக்கு!;) ஹிஹி.
பிறக்கிறப்பவே இப்படி நடுவயதா பிறந்திருப்பாங்களோன்னு நான் நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவர்.//

தம்பீ மோகனு.. செளக்கியம்தானா..?

என் பேச்சையும், எழுத்தையும் பார்த்தா அப்பாவி மிடில் கிளாஸ் மாதிரியிருக்குன்ற..!

அது விடலைப் பருவம்தான.. அதான் அப்படிச் சொன்னேன்..!

நீ என்னப்பா பதிவெல்லாம் போடாம அப்படியே இருக்குற..! என்னாச்சு..?!

ஷண்முகப்ரியன் said...

உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48மணி நேரம் டயம் இருக்கிற்தே எப்படி தலைவா?

வெட்டிப்பயல் said...

// மோகன்தாஸ் said...
//விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது.. //

நீங்கள்ல்லாம் விடலையா இருந்திருப்பீங்கங்கிற நினைப்பே கொஞ்சம் odd ஆ இருக்கு ! ;) ஹிஹி.

பிறக்கிறப்பவே இப்படி நடுவயதா பிறந்திருப்பாங்களோன்னு நான் நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவர்.

//
Kalakal...
nijama naanum athe thaan feel pannen :)

UT anne,
No peelings :)

லேகா பக்க்ஷே said...

//ஷண்முகப்ரியன் said...
உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48மணி நேரம் டயம் இருக்கிற்தே எப்படி தலைவா? //

அடுத்த நாளில் ஒரு 24 மணி நேரத்தை கடன் வாங்கிக்குவார் போல தெரியுது.

அது சரி said...

//
படம் வந்த புதிதில், "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என்ற பாடல் விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது..
//

ஒரு அம்பது வருஷம் இருக்குமுங்களா? :0))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஷண்முகப்ரியன் said...
உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் டயம் இருக்கிற்தே எப்படி தலைவா?//

48 மணி நேரமா..? அவ்ளோ இருந்தா நான் ஏன் இப்படி கொஞ்சமா பதிவு போடுறேன் சாமி..

//எப்படி தலைவா?//

தலீவா இது உங்களுக்கே மெய்யாலுமே நியாயமா கீதா..? நான் ஒரு சுள்ளான்.. என்னைப் போயி இப்படி கூப்பிடலாமா..?! தப்பு தப்பு.. முருகன் என்னை மன்னிக்க மாட்டான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///வெட்டிப்பயல் said...

//மோகன்தாஸ் said...
/விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது/
நீங்கள்ல்லாம் விடலையா இருந்திருப்பீங்கங்கிற நினைப்பே கொஞ்சம் odd ஆ இருக்கு!;) ஹிஹி.

பிறக்கிறப்பவே இப்படி நடுவயதா பிறந்திருப்பாங்களோன்னு நான் நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவர்.

//Kalakal... nijama naanum athe thaan feel pannen :)
UT anne, No peelings :)//

ஏம்ப்பா.. நீங்க உங்க பீலிங்ஸையெல்லாம் சொல்லிட்டு என்னை பீல் பண்ண வேண்டாம்னு சொன்னா எப்படி?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///லேகா பக்க்ஷே said...
//ஷண்முகப்ரியன் said...
உங்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் டயம் இருக்கிற்தே எப்படி தலைவா? //
அடுத்த நாளில் ஒரு 24 மணி நேரத்தை கடன் வாங்கிக்குவார் போல தெரியுது.///

லேகா மேடம்.. 24 மணி நேரத்துலேயே எவ்ளோ டைமை நான் வேஸ்ட் பண்றேன்னு என்னை நானே திட்டிக்கிட்டிருக்கேன்..

நீங்க வேற..?!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அது சரி said...

//படம் வந்த புதிதில், "வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என்ற பாடல் விடலைப் பசங்களான என்னைப் போன்றவர்களை பாடாய்படுத்தியது//

ஒரு அம்பது வருஷம் இருக்குமுங்களா? :0))///

50-லாம் இல்லீங்க.. 25 வருஷம்தான் ஆச்சு..

1984 அக்டோபர் 22-ல படம் வந்துச்சு..

அத்திரி said...

அருமையான நினைவலைகள் அண்ணே...... இந்தப்படத்தில எனக்கு பிடித்த பாடல் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே".....

அறிவன்#11802717200764379909 said...

>>என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிக நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தினை 'கே டிவியில்' பார்த்தேன்.
>>

இந்தக் கண்றாவிப் படம்தான் வாரம் வாரம் சன் டிவி குரூப்ல மாத்தி மாத்தி போட்டு ராவடி பண்றாங்களே..நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாலே பாத்தேன்...போன வாரம் பாத்தேன்..இந்த வாரம் பாத்தேன்...அடுத்த வாரமும் போடுவாங்க..நீங்க ஒரு தபாதான் பாத்தீங்களா?????????

என்ன கொடும சரவணன்??????!!!!

>>இத்திரைப்படத்தின் மிக முக்கிய முடிச்சே திருநீர்மலையில் நடக்கும் கார்த்திக்கின் திருமணக் காட்சிதான். >>

அப்படியாயாஆஆஆஆஆஆஆ..நான் ரஜினி பல் விளக்குற சீன்'னுல நெனச்சேன்..ராதிகா என்ன அப்புராணியா சேலைய விட்டுட்டு நிப்பாங்க...ரொம்ப வெள்ளந்தியான பொன்னு புள்ள போங்க...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அத்திரி said...
அருமையான நினைவலைகள் அண்ணே...... இந்தப் படத்தில எனக்கு பிடித்த பாடல் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்த மானே".....//

ஓ.. அதுவும் அருமையான பாடல்தான்.. பாடலைவிட பாடல் காட்சியை படம் பிடித்திருக்கும்விதம் அருமையாக இருக்கும்.!

வருகைக்கு நன்றி அத்திரி ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அறிவன்#11802717200764379909 said...
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிக நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு 'நல்லவனுக்கு நல்லவன்' படத்தினை 'கே டிவியில்' பார்த்தேன்.//
இந்தக் கண்றாவிப் படம்தான் வாரம் வாரம் சன் டிவி குரூப்ல மாத்தி மாத்தி போட்டு ராவடி பண்றாங்களே..நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாலே பாத்தேன்... போன வாரம் பாத்தேன்.. இந்த வாரம் பாத்தேன்... அடுத்த வாரமும் போடுவாங்க.. நீங்க ஒரு தபாதான் பாத்தீங்களா?????????
என்ன கொடும சரவணன்??????!!!!//

அறிவன் ஸார்.. ரஜினி மேல என்ன கோபம்..?

இதுவா கண்றாவி படம்.. ம்.. நமக்குள்ள வயசு வித்தியாசம் அதிகம்னு நினைக்கிறேன்..

//இத்திரைப்படத்தின் மிக முக்கிய முடிச்சே திருநீர்மலையில் நடக்கும் கார்த்திக்கின் திருமணக் காட்சிதான்.//

அப்படியாயாஆஆஆஆஆஆஆ..நான் ரஜினி பல் விளக்குற சீன்'னுல நெனச்சேன்..ராதிகா என்ன அப்புராணியா சேலைய விட்டுட்டு நிப்பாங்க...ரொம்ப வெள்ளந்தியான பொன்னு புள்ள போங்க...///

ரொம்ப முக்கியமாத்தான் கவனிச்சிருக்கீங்க..!

Seenu said...

இந்த படத்திற்கு ரஜினி-க்கு விருது குடுத்தாங்களா ?