நினைத்தேன் எழுதுகிறேன்!-18-06-2008

18-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சில நாட்களுக்கு முன் தற்செயலாக ‘கலைஞர் டிவி’ பார்த்தேன். திரைப்பட காமெடி காட்சிகளின் தொகுப்பு.

நான் பார்த்தபோது கவுண்டமணி, தனது சகா செந்திலிடம் தனது மனைவி அனுஜாவை அப்போதைக்கு மறந்து தொலைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஷர்மிளியின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார். செந்திலின் வழக்கமான சதியால் அனுஜாவின் கையில் சிக்கி விளக்கமாத்தால் அடியும் வாங்குகிறார்.

இந்தக் காட்சி அனைத்து கல்யாணமான தமிழக ஆண்களுக்கும் ரொம்பவே பிடித்தமான பொழுது போக்கு. மனைவியிருக்க இன்னொரு பெண்ணை ரசிப்பது போல் ரசித்து மனைவியை வெறுப்பேற்றுவதாக வெளியில் சொல்லி மகிழ்வது பரம்பரை பழக்கமாகிவிட்டது.

அதே சமயம் திருமணமான பெண் வேறொரு ஆணை இதேபோல் ஜொள்ளுவிட்டு கணவனிடம் மாட்டிக் கொள்வதைப் போல் சினிமா காட்சிகளை நான் பார்க்கவில்லை.

ஒருவேளை கதை, வசனம் எழுதுபவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதாலேயே இந்தக் கூத்து தொடர்கிறதோ..?

நிற்க..

தொடர்ந்த விளம்பரத்திற்குப் பிறகு வந்த காட்சி ‘பசுபதி மே/பா ராசாக்காபாளையம்’ என்கிற திரைப்படத்தில் இருந்து ஒளிபரப்பானது. விவேக் இன்ஸ்பெக்டராக வந்து ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியனை காப்பியடித்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று வெறும் ஜாக்கெட்டும், பாவாடையும் மட்டுமே அணிந்திருந்த ஒரு பெண் கையில் காபியுடன் வந்து தரிசனம் தந்தார். விவேக்கின் பொறுப்பான பேச்சு அப்புறம் இளிப்பான பேச்சாகிப் போனது..

இந்தப் பெண் வருகின்ற காட்சிகளிலெல்லாம் சேலை அணியாமல்தான் காட்சி தந்தார். ஒருவேளை தயாரிப்பாளருக்கு பண முடையாகி, சேலை வாங்கக்கூட காசில்லாமல் போயிருக்குமோ என்னவோ.

சினிமாவில் பெண்களை அசிங்கமாகக் காட்டுகிறார்கள் என்று பலரும் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நிஜமாகவே போராட வேண்டுமெனில், முதலில் இது மாதிரி ‘துணிந்து’ நடிக்க வருகின்ற பெண்களுக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.

“எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா என்று தெரியவில்லை. சொன்னால்தான் ஒருத்தராவது திருந்துவார்கள்.

உடன் நடித்த சின்ன கலைவாணர் விவேக்கிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. செலக்டிவ் அம்னீஷியாவோ..?

---------------------------------------------------------------

மிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பது என் போன்ற வறுமைக்கோட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்கு தெரிகிறது.

மிகவும் கஷ்டப்பட்டு போராடி எனது கம்ப்யூட்டரை மீட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் பிரயோசனமில்லை. எப்போதும் அலுவலகம் முடிந்து இரவு வீடு திரும்பிதான் வலையுலகத்திற்குத் தேவையானதை டைப் செய்வேன்.

கடந்த 1 மாதமாகவே வீட்டில் பவர் வோல்ட்டேஜ் கம்மி.. எனது வீடு single phaseதான். வீட்டு ஓனர் தன்னுடைய வீட்டு கனெக்ஷனுக்கு மட்டும் ஜாக்கிரதையாக three phase போட்டு இரண்டு ஏஸி மெஷின்களை மாட்டியிருக்கிறார். தெருவில் வீட்டுக்கு வீடு டிவி போல், ஏஸி மெஷின்களும் அலங்கரிப்பதால் மின் சப்ளை குறைவு என் போன்ற single phase வீடுகளில் தலைவிரித்தாடுகிறது.

நேற்று கம்ப்யூட்டரை ஆன் செய்ததிலிருந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 40 முறை சிஸ்டம் தானாகவே ரீஸ்டார்ட் ஆனது.. “பதிவர் கூட்டத்தில் கசமுசா” என்று தலைப்பிட்டு ஒரு வரி எழுதியது மட்டும்தான் அந்த ஒரு மணி நேரத்தில் நான் செய்தது. எனக்கே வெறுப்பாகி ஹார்ட்டிஸ்க் கிராஷ் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் அப்படியே ஆ·ப் செய்துவிட்டேன்.

மின்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்கிறார். ஒரு வேளை அவர் வீட்டில் மட்டும் தங்குத் தடையின்றி கிடைப்பதால் மற்றவர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்னவோ..? என்ன செய்வது 40 வருஷமா அரசியல்வாதியாக இருப்பவர்களுக்கு மக்களின் நிலைமை பற்றி என்ன தெரியும்..?

---------------------------------------------------------------
'தசாவதார'த்தை கரும்பைப் பிழிந்து சாறு எடுத்த கதையாக பிழிந்து எடுத்துவிட்டார்கள் வலைப்பதிவர்கள். ‘சிவாஜி’க்கு கூட இந்த ‘கதி’ ஏற்படவில்லை.

தன்னுடைய இரண்டரை வருட உழைப்புக்கு நல்ல மரியாதை கிடைத்திருப்பதாக வலைப்பதிவுகளில் தனது படத்திற்குக் கிடைத்த ‘நல்ல’ - ‘நல்ல’ விமர்சனங்களைப் படித்த பிறகும், கமலஹாசன் அடக்கமாகப் பேசியிருக்கிறார். பாராட்டத்தான் வேண்டும்.

இடையில் நமது ‘தடாலடி’யாரும் உணர்ச்சிவசப்பட்டு இரண்டரை வருட உழைப்பை 3 மணி நேரம் மட்டும் பார்த்துவிட்டு வெறும் 5 நிமிடத்தில் திட்டுகிறார்களே என்று கோபப்பட்டு பொங்கிவிட்டார்.

இதில் 'பைத்தியக்காரனின்' பதிவு நான் எதிர்பார்த்தது போலவே படத்தின் அரசியலை ஆராய்ந்து சூட்டைக் கிளப்பியிருக்கிறது. 'பைத்தியக்காரன்' இதை எழுதாமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியம்.. அவரவர் பாடு அவரவருக்கு..

இனி அடுத்தது 'குசேலன்'தான்.. பாராட்டையோ அல்லது திட்டுதலையோ கொஞ்சம் மட்டுறுத்தி வையுங்கள்.. அடுத்த மாதம் நிச்சயம் தேவைப்படும்.


---------------------------------------------------------------

ஞ்சாயத்து பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரியவனல்ல. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. பேசுவதற்கு அல்ல. பார்வையாளனாக..

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகியிருந்த தம்பதிகளுக்குள் கருத்து-மோதல். தம்பதிகள் இருவரும் பிரிந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி பஞ்சாயத்துவரை இழுத்து வந்துவிட்டார்கள். ஒருவேளை வார்த்தைகள் முற்றி அடிதடிவரை போனால் உடன் அடி வாங்க ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காகவோ எனக்கு ஸ்பெஷல் அழைப்பு வந்திருந்தது.. சும்மா போவோமே என்றுதான் போனேன்..

சினிமாவில் ஆலமரத்தடி பஞ்சாயத்தையே பாரத்து பார்த்து சலித்துப் போயிருந்த எனக்கு இந்த வீட்டுப் பஞ்சாயத்து புது அனுபவம். வீட்டுப் பெண்களெல்லாம் சமையல்கட்டிலும், நடுவீட்டிலும் ஒண்டி கொண்டு நிற்க.. கணவனும், மனைவியும் ஆளுக்கொரு ஜன்னல் அருகே நின்று ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

“இருவருக்குள்ளும் என்ன பிரச்சினை?” என்று பெரியவர் ஒருவர் கேட்க சீறித் தள்ளிவிட்டார் அந்தப் பெண். “இதுக்கா உங்களைக் கூப்பிட்டோம்..? முதல்ல அத்து விட்டுட்டு மறுவேலை பாருங்க..” என்றார். “என்ன காரணம்னு சொல்லும்மா.. பேசித் தீர்த்துக்கலாம்..” என்று அழுகாத குறையாகக் கேட்டார் பெண்ணின் அம்மா. “அதெல்லாம் சொல்ல முடியாது.. எனக்கு இவர் வேணாம்..” -- இது பெண்ணின் தீர்மானமான முடிவு.

“பொம்பளைக்கே இவ்ளோ இருந்தா ஆம்பளை எனக்கு எவ்ளோ இருக்கும்? வேணாங்க.. அத்து விட்ருங்க.. பெரிய இவளா இவ..?” - இது மாப்பிள்ளை..
“என்ன இவ.. இந்த அவ, இவ பேச்செல்லாம் அன்னிக்கே முடிஞ்சு போச்சு.. மரியாதை கொடுக்கணும்..” சீறினார் பெண்.

இரு வீட்டுப் பெரிசுகளும் பிரச்சினை என்ன என்று தெரிந்தால் தீர்த்து வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். பிடியே கொடுக்கவில்லை இருவரும்.

“ச்சீ.. போ..”
“ச்சீ.. போ..”
“போன்னா போ..”
“எனக்கென்ன ஆயிரம் பேர் வருவாளுக..”
“போய் அவளையே கட்டிக்க.."
"அதுக்குத்தான போய்த் தொலைன்றேன்..”
“போறேன்.. உன்னை எவன் கட்டுவான்னு பாக்குறேன்..”
“அதை நான் பாத்துக்குறேன்.. முதல்ல நீ என் கண்ணு முன்னாடியே நிக்காத.. ஓடிப் போயிரு..”

இப்படியேதான் மாற்றி, மாற்றி பேசினார்களே ஒழிய, பிரச்சினை என்ன என்பதை சொல்லவேயில்லை..

இந்த சண்டை காரணமாக கடந்த ஒரு வருஷமாகவே இருவரும் அவரவர் பிறந்த வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். பரஸ்பரம் இருவரும் இணைந்தே விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போனால் வழக்கு ஈஸியாகிவிடும் என்ற வழக்கறிஞரின் ஆலோசனைப்படியே இந்த பஞ்சாயத்து கூட்டமாம்..

கூடவே, அந்தப் பெண் கொண்டு வந்த சீர், செனத்தியையெல்லாம் ஒன்றுவிடாமல் 40 பக்க நோட்டு ஒன்றில் எழுதி வைத்திருந்த மாப்பிள்ளை அதை படித்துக் காட்டி “அத்தனையையும் வீட்டில் தனியறையில் பூட்டி வைத்திருப்பதாகவும் வந்து பார்த்து அள்ளிக் கொள்ளலாம்” என்றார்.

காலையிலிருந்து மாலைவரை பேச்சுவார்த்தையை இழுத்தும் இரண்டு விஷயங்கள் மட்டும்தான் தம்பதிகளின் வாயில் இருந்து வெளியே வந்தது.

அந்தப் பெண் கருவுற்றிருந்தபோது சரியாகச் சாப்பிடாமல் போய் கரு கலைந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே அல்சர் நோய் இருந்ததால் சரியாகச் சாப்பிடும்படி ஆபீஸில் இருந்து தினமும் போன் மேல் போன் போட்டு சொல்வானாம் மாப்பிள்ளை. அப்படியிருந்தும் அந்தப் பெண் சாப்பிடாமல் போக கரு கலைந்துவிட்டதாம்.

தனது முதல் வாரிசை செத்துப் போகும்படி செய்தது தனது மனைவிதான் என்று கணவனுக்கு அடக்கமாட்டாத கோபம் போலிருக்கிறது.. மனைவியோ “நீ என்ன சொல்றது..? பிள்ளையை எப்படி பெத்துக்கறதுன்னு எனக்குத் தெரியாதா..? நீ யார்ரா?” என்றே கேட்டுவிட்டாள்.

முடிந்தது.. அத்துவிட்டார்கள்.. எதுக்கு கோர்ட், கேஸ்..? பத்து ரூபாய் பத்திரமொன்றில் இருவரும் ஒருமித்தக் கருத்துடன் பிரிவதாக நான்கு சாட்சிகள் கையெழுத்துடன் பத்திரத்தில் எழுதி இருவரும் கையொப்பமிட்டார்கள்.

மாப்பிள்ளை அதுதான் கடைசி முறை என்பதால் தனது மனைவியை மிக அருகில் போய் ஒரு முறை முறைத்துவிட்டு(நான்கூட அடிச்சுரப் போறானோ என்று பயந்திருந்தேன்) விருட்டென்று வெளியேறினான்..

பெண்ணோ மிக அலட்சியமாக பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்து சன் மியூஸிக் சேனலை பார்க்கத் துவங்கினார்.

கூட்டம் கலையத் தொடங்கி நான் வெளியே வந்தவுடன், அந்தப் பெண்ணின் தாயார் கண்ணீரோடு “கல்யாணத்துக்கே ஒண்ணே முக்கா லட்சம் ரூபா செலவாச்சு.. இருந்த வயக்காட்டையும் வித்துதான் செலவு செஞ்சேன்.. பாவி மக எதைப் பத்தியும் கவலைப்படாம ‘அத்து விடு’.. ‘அத்து விடு’ன்றாளே.. என்னத்த செய்றது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

ம்ஹ¥ம்.. நம்மிடையே எந்த அமைப்பில் தவறு என்று புரியவில்லை.

(தொடர்ந்தும் வருவேன்)

49 comments:

Anonymous said...

செவுட்டு மூதி உனக்கு பதிவு எழுதறதை விட்டுட்டு வேற வேலையே இல்லையாடா? நீயெல்லாம் பதிவு எழுதலைன்னு எவ அழுதா?

கிரி said...

//எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா //

உண்மையான வறுமையில் இருப்பவர்கள் வேறு வழி இல்லாமல் செய்கிறார்கள். பலர் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் என்று செய்கிறார்கள்.

//வீட்டு ஓனர் தன்னுடைய வீட்டு கனெக்ஷனுக்கு மட்டும் ஜாக்கிரதையாக three phase போட்டு இரண்டு ஏஸி மெஷின்களை மாட்டியிருக்கிறார்//

பல வீட்டுள் முதலாளிகள் செய்வது தான்.

//மின்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்கிறார். ஒரு வேளை அவர் வீட்டில் மட்டும் தங்குத் தடையின்றி கிடைப்பதால் மற்றவர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்னவோ..? //

:-)

//'தசாவதார'த்தை கரும்பைப் பிழிந்து சாறு எடுத்த கதையாக பிழிந்து எடுத்துவிட்டார்கள் வலைப்பதிவர்கள். ‘சிவாஜி’க்கு கூட இந்த ‘கதி’ ஏற்படவில்லை.//

அப்படியா! அப்போது நான் வலைப்பதிவில் இல்லை, எனவே எனக்கு தெரியவில்லை. தலைவர் படத்தை வாறுவதற்கு கமல் படத்தை விட அதிக வாய்ப்பாச்சே :-)) ஒரு வேளை பதிவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகம் ஆகி இருக்கலாம்

தொடர்ந்து எழுதுங்க :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
செவுட்டு மூதி உனக்கு பதிவு எழுதறதை விட்டுட்டு வேற வேலையே இல்லையாடா? நீயெல்லாம் பதிவு எழுதலைன்னு எவ அழுதா?//

முருகா.. என்னோட எல்லா பதிவுக்கும் முதல் கமெண்ட் நீதான் எழுதணும்னு இருக்கு பாரு.. விதி.. நல்லாயிரு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கிரி said...
//உண்மையான வறுமையில் இருப்பவர்கள் வேறு வழி இல்லாமல் செய்கிறார்கள். பலர் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் என்று செய்கிறார்கள்.//

வறுமையல்ல கிரி.. கண் இழந்தவர்களே ஏதேனும் ஒரு வேலை பார்த்து பிழைக்கும்போது இவர்களால் முடியாதா என்ன? காரணம் அதுவல்ல.. குறைந்த நேரத்தில் நிறைய பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். இன்னொரு காரணம் புகழ்..

//பல வீட்டு முதலாளிகள் செய்வதுதான்.//

பாவப்பட்டவர்கள் நாங்கள்தானா..?

//மின்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மின் தடையே இல்லை என்கிறார். ஒரு வேளை அவர் வீட்டில் மட்டும் தங்குத் தடையின்றி கிடைப்பதால் மற்றவர்களையும் அப்படி நினைத்துவிட்டாரோ என்னவோ..? //
:-)///

சிரிப்பான் போட்டுட்டா ஆமோதிக்கிறேன்னு அர்த்தமா அல்லாட்டி தெரியாதுன்னு அர்த்தமா?

//அப்படியா! அப்போது நான் வலைப்பதிவில் இல்லை, எனவே எனக்கு தெரியவில்லை. தலைவர் படத்தை வாறுவதற்கு கமல் படத்தை விட அதிக வாய்ப்பாச்சே :-)) ஒரு வேளை பதிவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகம் ஆகி இருக்கலாம்.//

அது காரணமில்லை. அப்போதைய முக்கிய விவாதம் கம்ப்யூட்டர் படித்தவர்கள் மிகக் குறைந்த வயதில், மிகக் குறைந்த காலத்தில் ரஜினி சம்பாதித்து வந்ததைப் போல கோடி, கோடியாக சம்பாதித்துவிட முடியுமா என்பது மட்டும்தான்.. இதில் டைட்டில் முதற்கொண்டு அனைத்துமே மாட்டிக் கொண்டது.

//தொடர்ந்து எழுதுங்க-)//

நன்றிங்க கிரி..

☆ சிந்தாநதி said...

//இனி அடுத்தது 'குசேலன்'தான்.. பாராட்டையோ அல்லது திட்டுதலையோ கொஞ்சம் மட்டுறுத்தி வையுங்கள்.. அடுத்த மாதம் நிச்சயம் தேவைப்படும்.//

குசேலனை அந்த அளவுக்கு விமர்சிக்க முடியாது. காரணம் அது ரீமேக் படம். நல்ல கதை.

பசுபதி-சீனிவாசன், மம்முட்டி-ரஜினி ஒப்பிடலாம்.அவ்வளவுதான். ரஜினிக்காக கொஞ்சம் நீட்டல்கள் இருக்கலாம். சந்திரமுகி அளவுக்கு கூட ஒப்பீடு செய்ய முடியுமோ என்னவோ?

PPattian : புபட்டியன் said...

அந்த மணமுறிவு படிச்சதும் ரொம்ப கவலையா இருந்திச்சி.. நீங்க எழுதியிருப்பதை பாத்தா, அந்த பெண் மேலதான் தப்பு அதிகம் போல தெரியுது. ம்.. என்னத்த சொல்ல. பிடிவாதம்தான் இதில பெரிய பிரச்சினையா படுது.

அப்புறம் அந்த முதல் பின்னூட்டத்தை ஏன் வெளியிடனும். அதை ரிஜெக்ட் செய்து விட்டு வேலையை பாக்கலாமே.. உங்களுக்கு இது "மசோகிஸ்ட்" தோற்றத்தை கொடுக்குது.. ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சிந்தாநதி said...
குசேலனை அந்த அளவுக்கு விமர்சிக்க முடியாது. காரணம் அது ரீமேக் படம். நல்ல கதை. பசுபதி-சீனிவாசன், மம்முட்டி-ரஜினி ஒப்பிடலாம்.அவ்வளவுதான். ரஜினிக்காக கொஞ்சம் நீட்டல்கள் இருக்கலாம். சந்திரமுகி அளவுக்கு கூட ஒப்பீடு செய்ய முடியுமோ என்னவோ?//

நல்ல கதைதான். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், சந்திரமுகி மாதிரி ஒரிஜினாலில் இருந்த சினிமா என்கிற உணர்வை குழி தோண்டி புதைத்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//PPattian : புபட்டியன் said...
அந்த மணமுறிவு படிச்சதும் ரொம்ப கவலையா இருந்திச்சி.. நீங்க எழுதியிருப்பதை பாத்தா, அந்த பெண் மேலதான் தப்பு அதிகம் போல தெரியுது. ம்.. என்னத்த சொல்ல. பிடிவாதம்தான் இதில பெரிய பிரச்சினையா படுது.//

எனக்கும் அப்படித்தான் தெரிந்தது ஸார்.. அந்தப் பெண் வாழ்க்கை பற்றி தெரியாமலேயே தனது வாழ்க்கையைத் தொலைத்துவிட்டது என்று நினைக்கிறேன்.

//அப்புறம் அந்த முதல் பின்னூட்டத்தை ஏன் வெளியிடனும். அதை ரிஜெக்ட் செய்து விட்டு வேலையை பாக்கலாமே.. உங்களுக்கு இது "மசோகிஸ்ட்" தோற்றத்தை கொடுக்குது.. ஏதோ எனக்கு பட்டதை சொன்னேன்..//

ஆலோசனைக்கு நன்றி ஸார்.. எனக்கும் பிடிக்கவில்லைதான். ஆனால் வேறு வழியில்லை.. ஒரு காரணமாகத்தான் நான் அதை அனுமதித்து வருகிறேன்.. சீக்கிரமே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வரும்..

அதிஷா said...

அண்ணே இந்த பதிவ 10 பதிவா பிச்சு பிச்சு போடலாம்ல

படிச்சி முடிக்கிறதுக்குள்ள

ஸ்ஸஸ்ஸஸ்ஸஸப்பா

19.06.2080

வந்துரும் .....

அண்ணே கொஞ்சம் கம்மிய நினைங்கண்ணே

கிரி said...

//:-)///

சிரிப்பான் போட்டுட்டா ஆமோதிக்கிறேன்னு அர்த்தமா அல்லாட்டி தெரியாதுன்னு அர்த்தமா?//

பொது மக்களை அரசியல் வாதிகள் எல்லோரும் எப்படி கேவலமாக கருதுகிறார்கள் என்று நினைத்து சிரிப்பாக இருக்கிறது. நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் நான் ஒரு பதிவே போட்டு இருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள். நீங்கள் கூறிய அதே கருத்தை கூறி இருக்கிறேன்.

http://girirajnet.blogspot.com/2008/05/30.html

Vetrimagal said...

//எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா?//

பாவம் அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது! இந்த மாதிரியெல்லாம் காட்சிகள் தவிர்த்தால் வரிச்சலுகை உண்டு என்றால் , நிலமை சீராக வாய்ப்புண்டு!

'If wishes were horses beggers would ride them" :)

You have raised questions that requires answers to be found.

Enjoyed reading your blog . Thanks

செந்தழல் ரவி said...

அது அரேஞ்சுடு மாரெஜ் தானே ? அதான் அப்படி...:))))

SP.VR. SUBBIAH said...

////ம்ஹ¥ம்.. நம்மிடையே எந்த அமைப்பில் தவறு என்று புரியவில்லை.///

அதெல்லாம் கிரகக் கோளாறு வாங்கிவந்த வரம். அவ்வளவுதான்
வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை!

Anonymous said...

First of all there is not any problem with that couple. It is just that they could not live together and they are splitting. It is probable that both are a little bit more happy to be alone than together. And so, rather than hitting/hurting each other, they decide to split. And splitting is not always easy and so it is understandable that they are fighting silly.

And i really do not understand on how people decide that the girl is culprit after reading your blog. Might be that both are not to be blamed but only the people sorrounding them or the way they were brought up or the society that thinks that divorce is worse than a loveless marriage where you spend 30/40 years together.

ARUVAI BASKAR said...

இன்று பல குடும்பங்கள் கோர்ட்டுக்கு வருவதற்கு எனக்கு தெரிந்த காரணங்கள்
1) ஈகோ
2) விட்டு கொடுக்கும் தன்மை இல்லாதது
3) T.V. சீரியல்கள்
4)பெரியவர்கள் (அம்மா மற்றும் அப்பா ) சொல்வதை கேட்காதது .
5)பெண்ணின் அம்மாவும் கணவருக்கு அடங்காதவராக இருப்பார்
6)அல்லது பெண்ணின் அம்மா விவாகரத்து அல்லது அத்து விடு என்னும் சொல்லை அவர் கணவனுடன் தகராறு செய்யும் போது சொல்லி அது அந்த பெண்ணின் மனதில் ஆழ பதிந்து இருக்கும் .
இது நான் கூர் நோக்கி கண்டறிந்தவைகள் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

ARUVAI BASKAR said...

அந்த அனானி கமண்ட்டை தயவு செய்து reject செய்யுங்கள் .
இப்பொழுதாவது அழித்துவிடுங்கள் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

தமிழ் பொறுக்கி said...

வணக்கம் ... கவுண்டமணி காமெடியில் ஆண் ஆதிக்க்கம் இருப்பது உண்மை தான்
ஆனால் பெண்கள் எல்லோரும் இழுத்து போத்தியவர்கள் அல்ல.. ஆவரம் பூ கவுண்டமணி ஷர்மிலி காமெடியில் ஷர்மிலி இரண்டு ஆண்களை கவரவில்லையா...

கமல் பாராட்டு பத்தாது உண்மை தான்

தமிழ் பொறுக்கி said...

வணக்கம் ... கவுண்டமணி காமெடியில் ஆண் ஆதிக்க்கம் இருப்பது உண்மை தான்
ஆனால் பெண்கள் எல்லோரும் இழுத்து போத்தியவர்கள் அல்ல.. ஆவரம் பூ கவுண்டமணி ஷர்மிலி காமெடியில் ஷர்மிலி இரண்டு ஆண்களை கவரவில்லையா...

கமல் பாராட்டு பத்தாது உண்மை தான்

Boston Bala said...

நான் சென்னையில் இருந்த பத்து, பன்னிரெண்டு நாளில் மின்ரத்து பாதிக்கவில்லை! நீங்க சொல்லியிருப்பது போல் சிங்கிள் ஃபேஸ் எல்லாம் ஆராயணும்...

தமிழ் பொறுக்கி said...

வணக்கம் ... கவுண்டமணி காமெடியில் ஆண் ஆதிக்க்கம் இருப்பது உண்மை தான்
ஆனால் பெண்கள் எல்லோரும் இழுத்து போத்தியவர்கள் அல்ல.. ஆவரம் பூ கவுண்டமணி ஷர்மிலி காமெடியில் ஷர்மிலி இரண்டு ஆண்களை கவரவில்லையா...

கமல் பாராட்டு பத்தாது உண்மை தான்

John Peter Benedict said...

//எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா //

இதுதான் இப்போதைய தேவை!!!!

மோகன் கந்தசாமி said...

////அதே சமயம் திருமணமான பெண் வேறொரு ஆணை இதேபோல் ஜொள்ளுவிட்டு கணவனிடம் மாட்டிக் கொள்வதைப் போல் சினிமா காட்சிகளை நான் பார்க்கவில்லை.////
இருக்கின்றன, ஆனால் பெரும்பாலும் அவை காமெடிகளாக இருக்காது, மோசமானவர்கள் இவ்வாறு செய்வது போல் இருக்கும். ஆணாதிக்க சினிமா!

Arun said...

உண்மை தமிழன்...நல்லா எழுதுறிங்க...தொடர்ந்து எழுதுங்க...ஒரு சின்ன விஷயம் சொல்லுங்க எப்படி உங்களால இவ்வளவு நீலமா டைப் பண்ண முடியுது....எனக்கு இந்த கமெண்ட் டைப் பண்றது கூட கஷ்டமா இருக்கு...
---அருண்

Vijay said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

சரவணன் said...

//
செந்தழல் ரவி said...
அது அரேஞ்சுடு மாரெஜ் தானே ? அதான் அப்படி...:))))
//

ஒரு பழமொழி...

அரேஞ்சுடு மாரேஜ் கொலை
காதல் கல்யாணம் தற்கொலை

அதுக்கு மேல வித்தியாசம் கிடையாது. :-)

சரவணன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//அதிஷா said...
அண்ணே இந்த பதிவ 10 பதிவா பிச்சு பிச்சு போடலாம்ல.. படிச்சி முடிக்கிறதுக்குள்ள ஸ்ஸஸ்ஸஸ்ஸஸப்பா 19.06.2080 வந்துரும் ..... அண்ணே கொஞ்சம் கம்மிய நினைங்கண்ணே..//

தம்பி இதுவா அதிகம்.. ஒரு கதையை நாற்பது வரில முடிச்சது இதுதான் முதல் தடவை.. வேணுமின்னா பெரியவங்ககிட்ட கேட்டுக்க..

இதுக்கே இப்படி அலுத்துக்குறீங்களேப்பா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கிரி said...
//சிரிப்பான் போட்டுட்டா ஆமோதிக்கிறேன்னு அர்த்தமா அல்லாட்டி தெரியாதுன்னு அர்த்தமா?//
பொது மக்களை அரசியல் வாதிகள் எல்லோரும் எப்படி கேவலமாக கருதுகிறார்கள் என்று நினைத்து சிரிப்பாக இருக்கிறது. நீங்கள் எழுதிய உங்கள் கருத்தில் நான் ஒரு பதிவே போட்டு இருக்கிறேன். நேரம் இருந்தால் படித்து பாருங்கள். நீங்கள் கூறிய அதே கருத்தை கூறி இருக்கிறேன்.
http://girirajnet.blogspot.com/2008/05/30.html///

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி கிரி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///Vetrimagal said...
//எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா?//
பாவம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்கு எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது! இந்த மாதிரியெல்லாம் காட்சிகள் தவிர்த்தால் வரிச்சலுகை உண்டு என்றால் , நிலமை சீராக வாய்ப்புண்டு!
'If wishes were horses beggers would ride them" :) You have raised questions that requires answers to be found.
Enjoyed reading your blog . Thanks.///

வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியா இல்லை நாட்டில்.. அதெல்லாம் சும்மா கட்டுக்கதை.. சினிமா பற்றிய பிரமையை சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்களின் மனதில் திணித்து விடுவதுதான் இதன் காரணம்.. சினிமாவின் இன்னொரு முகம் கோரமானது.. அதில் இதுவும் ஒன்று..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
அது அரேஞ்சுடு மாரெஜ் தானே ? அதான் அப்படி...:))))//

தம்பி.. அப்படீன்னா காதல் திருமணம் செய்தவர்கள் மட்டும்தான் டைவர்ஸ் செய்ய மாட்டார்கள். பிரிய மாட்டார்கள் என்று நினைத்தாயா..?

சதவிகிதம் வேண்டுமானால் கூடுதல் அல்லது குறைவாக இருக்கலாம்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///SP.VR. SUBBIAH said...
//ம்ஹ¥ம்.. நம்மிடையே எந்த அமைப்பில் தவறு என்று புரியவில்லை.//
அதெல்லாம் கிரகக் கோளாறு வாங்கிவந்த வரம். அவ்வளவுதான் வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை!///

இப்போதைக்கு இதைச் சொல்லித்தான் பெண்ணின் அம்மாவை அனைவரும் சமாதானப்படுத்தி வருகிறார்கள் வாத்தியாரே.. கெரகம் ஒவ்வொருத்தனுக்கும் எப்படி எப்படியெல்லாம் விளையாட்டு காட்டுது பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
First of all there is not any problem with that couple. It is just that they could not live together and they are splitting. It is probable that both are a little bit more happy to be alone than together. And so, rather than hitting/hurting each other, they decide to split. And splitting is not always easy and so it is understandable that they are fighting silly.
And i really do not understand on how people decide that the girl is culprit after reading your blog. Might be that both are not to be blamed but only the people sorrounding them or the way they were brought up or the society that thinks that divorce is worse than a loveless marriage where you spend 30/40 years together.//

அன்பு அனானி இப்போதுதான் யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வதும் சரிதான் போலிருக்கிறது. அந்தப் பெண்ணின் மீதுதான் தவறு என்பதைப் போல் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அப்படி வந்துவிட்டது. ஸாரி..

உண்மையில் அவர்கள் இருவரின் மீதுமே தவறு இருக்கிறது.. புரிந்து கொள்ளவில்லையெனில் என்ன செய்ய முடியும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ARUVAI BASKAR said...
இன்று பல குடும்பங்கள் கோர்ட்டுக்கு வருவதற்கு எனக்கு தெரிந்த காரணங்கள்
1) ஈகோ
2) விட்டு கொடுக்கும் தன்மை இல்லாதது
3) T.V. சீரியல்கள்
4)பெரியவர்கள் (அம்மா மற்றும் அப்பா ) சொல்வதை கேட்காதது .
5)பெண்ணின் அம்மாவும் கணவருக்கு அடங்காதவராக இருப்பார்
6)அல்லது பெண்ணின் அம்மா விவாகரத்து அல்லது அத்து விடு என்னும் சொல்லை அவர் கணவனுடன் தகராறு செய்யும் போது சொல்லி அது அந்த பெண்ணின் மனதில் ஆழ பதிந்து இருக்கும் .
இது நான் கூர் நோக்கி கண்டறிந்தவைகள் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//

பாஸ்கர் நீங்கள் சொல்வதும் சரிதான்.. நிறைய அனுபவமோ..? தெளிவா இருக்கீங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ARUVAI BASKAR said...
அந்த அனானி கமண்ட்டை தயவு செய்து reject செய்யுங்கள் .
இப்பொழுதாவது அழித்துவிடுங்கள் .
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//

கொஞ்சம் பொறுங்கள்.. நேரம் வரும்.. உங்களை வருத்தப்பட வைப்பதற்காக நான் அதை விட்டுவைக்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக வலையுலகில் நடந்து வரும் பிரச்சினை.. உடனேயே மறந்தும் அழித்துவிட முடியாது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தமிழ் பொறுக்கி said...
வணக்கம் ... கவுண்டமணி காமெடியில் ஆண் ஆதிக்க்கம் இருப்பது உண்மைதான். ஆனால் பெண்கள் எல்லோரும் இழுத்து போத்தியவர்கள் அல்ல.. ஆவரம் பூ கவுண்டமணி ஷர்மிலி காமெடியில் ஷர்மிலி இரண்டு ஆண்களை கவரவில்லையா...//

ஆமாம்.. நானே மறந்துவிட்டேன்.. அது மட்டுமல்ல வேறு சில திரைப்படங்களிலும் அது போன்று காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது.. ஆனால் ஆண்களைப் போல் அதிகமில்லை என்று நினைக்கிறேன்.

//கமல் பாராட்டு பத்தாது உண்மைதான்//

நிஜம்தான்.. 'பாராட்டுக்கள்' கம்மி வலையுலகில்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///John Peter Benedict said...
//எவ்ளோ காசு கொடுத்தாலும் இது மாதிரி நடிப்பதற்கு முடியாது.. நான் மாட்டேன். மொதல்ல உன் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டி இவுங்களை கூட்டிட்டு வந்து இதே மாதிரி நடிக்க வை.. பாக்குறேன்.. அப்புறமா நான் நடிக்கிறேன்..” என்று எந்த துணை நடிகையாவது சொல்வார்களா //
இதுதான் இப்போதைய தேவை!!!!///

வாங்க பெனடிக்.. எங்க வருஷக்கணக்காச்சு பார்த்து..? செளக்கியந்தான..

வழி மொழிந்தமைக்கு நன்றிகள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Boston Bala said...
நான் சென்னையில் இருந்த பத்து, பன்னிரெண்டு நாளில் மின்ரத்து பாதிக்கவில்லை! நீங்க சொல்லியிருப்பது போல் சிங்கிள் ஃபேஸ் எல்லாம் ஆராயணும்...//

பாபா நிச்சயமாக உங்களது வீடு three phase-ஆகத்தான் இருக்கும். நீங்கள் வெளியில் சென்றிருந்த சமயமோ, உங்களது கவனத்திற்கு வராமல் போயிருக்கும். இப்போது சென்னையில் நேர முறை வைத்து கட் செய்கிறார்கள்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மோகன் கந்தசாமி said...
//அதே சமயம் திருமணமான பெண் வேறொரு ஆணை இதேபோல் ஜொள்ளுவிட்டு கணவனிடம் மாட்டிக் கொள்வதைப் போல் சினிமா காட்சிகளை நான் பார்க்கவில்லை.//
இருக்கின்றன, ஆனால் பெரும்பாலும் அவை காமெடிகளாக இருக்காது, மோசமானவர்கள் இவ்வாறு செய்வது போல் இருக்கும். ஆணாதிக்க சினிமா!///

கரெக்ட் மோகன்.. ஆணாதிக்க சினிமாதான்.. அதனால்தான் படத்திற்குப் படம் இது போன்ற காட்சிகளும், வலையுலகில் பதிவுக்குப் பதிவு எழுதுவதும் வருகிறது..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Arun said...
உண்மை தமிழன்...நல்லா எழுதுறிங்க...தொடர்ந்து எழுதுங்க...ஒரு சின்ன விஷயம் சொல்லுங்க எப்படி உங்களால இவ்வளவு நீலமா டைப் பண்ண முடியுது....எனக்கு இந்த கமெண்ட் டைப் பண்றது கூட கஷ்டமா இருக்கு...
---அருண்///

தம்பி எல்லாம் பயிற்சியும், முன் அனுபவமுதான்.. 8 வருட அனுபவம் என்றால் சும்மாவா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

விஜய்..

அழைப்பிதழ்தான் அத்தனை பேருக்கும் அனுப்பினீர்கள்.. நன்றியும் அதே போல் குறிப்பிடணுமா? தேவையில்லை.. இது தொடர்ந்தால் பதிவர்கள் எரிச்சலாகிவிடுவார்கள்..

நிறுத்திக் கொள்ளுங்கள்.. இனிமேல் உங்களுடைய பதிவின் சாரத்தைப் பொறுத்து கூட்டம் மொய்க்கும்..

வாழ்க வளமுடன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///சரவணன் said...
//செந்தழல் ரவி said...
அது அரேஞ்சுடு மாரெஜ் தானே ? அதான் அப்படி...:))))//
ஒரு பழமொழி...
அரேஞ்சுடு மாரேஜ் கொலை
காதல் கல்யாணம் தற்கொலை
அதுக்கு மேல வித்தியாசம் கிடையாது. :-)
சரவணன்///

இதை நானும் நினைச்சேன். சொல்லிட்டீங்க..

அதான் வருஷக்கணக்கா அத்தனை கல்யாணமான ஆம்பளைங்களும் இதைத்தான சொல்லிக்கிட்டிருக்காங்க..

இதெல்லாம் சோகத்தைக் குறைக்க ஊத்திக்குற டானிக்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கழகக் கண்மணிகளே..

அலுவலகத்தில் 'சி.ஐ.ஏ.' சதியால் பிளாக்கரை தொடவே கூடாது என்று தடா உத்தரவு போட்டுவிட்டார்கள். அதனால்தான் பதில் எழுத இவ்வளவு தாமதம்..

பொறுத்தருள வேண்டுகிறேன்.. மன்னிக்கவும்.

புதிதாக பதிவு எழுதவும் முடியுமா என்பதும் சந்தேகமே.. முருகன்தான் காப்பாற்றணும்..

முருகா.. எல்லாம் உன் செயல்..

அறிவன்#11802717200764379909 said...

\\\\\கழகக் கண்மணிகளே..

அலுவலகத்தில் 'சி.ஐ.ஏ.' சதியால் பிளாக்கரை தொடவே கூடாது என்று தடா உத்தரவு போட்டுவிட்டார்கள். அதனால்தான் பதில் எழுத இவ்வளவு தாமதம்..

பொறுத்தருள வேண்டுகிறேன்.. மன்னிக்கவும்.

புதிதாக பதிவு எழுதவும் முடியுமா என்பதும் சந்தேகமே.. முருகன்தான் காப்பாற்றணும்..

முருகா.. எல்லாம் உன் செயல்..

\\\\\\\\\\

அதனால் என்ன,வோர்ட்'ல் எழுதி வைத்துக் கொண்டு இணையம் கிடைக்கும் போது சட்டென்று பதிவை ஏற்ற வேண்டியதுதானே?

எல்லாத்துக்கும் முருகனைக் கூப்பிட்டால் அவர் என்ன பண்ணுவார்?நாமளே கொஞ்சம் யோசிக்க காரியம் செய்ய வேண்டாமா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///அறிவன்#11802717200764379909 said...
\\கழகக் கண்மணிகளே..அலுவலகத்தில் 'சி.ஐ.ஏ.' சதியால் பிளாக்கரை தொடவே கூடாது என்று தடா உத்தரவு போட்டுவிட்டார்கள். அதனால்தான் பதில் எழுத இவ்வளவு தாமதம்.. பொறுத்தருள வேண்டுகிறேன்.. மன்னிக்கவும். புதிதாக பதிவு எழுதவும் முடியுமா என்பதும் சந்தேகமே.. முருகன்தான் காப்பாற்றணும்..
முருகா.. எல்லாம் உன் செயல்..\\
அதனால் என்ன,வோர்ட்'ல் எழுதி வைத்துக் கொண்டு இணையம் கிடைக்கும் போது சட்டென்று பதிவை ஏற்ற வேண்டியதுதானே?//

அந்த டைப்பிங்கைகூட வீட்டில்தான் செய்ய வேண்டும்போல் உள்ளது. வீட்டில் இதில் கூறியுள்ளது போல் என்றைக்கு மின்தடை இல்லாமல் இருக்குமோ தெரியவில்லை..

//எல்லாத்துக்கும் முருகனைக் கூப்பிட்டால் அவர் என்ன பண்ணுவார்?நாமளே கொஞ்சம் யோசிக்க காரியம் செய்ய வேண்டாமா?//

இப்படியெல்லாம் கோல்மாலான சோதனைகள் யாருக்கு வருகின்றன அறிவன்..?

வேறு எவனைக் குற்றம் சொல்ல முடியும்..?

தமாம் பாலா said...

அன்பு உண்மை தமிழன்,

அரைகுறை ஆடை சினிமா பெண் அவசர கோபத்தில் 'அத்துவிட்ட' அந்த கணவன் மனைவி என சமுதாய பொறுப்போடு எழுதுகின்றீர்கள் நண்பரே, வாழ்த்துக்கள்!

one man's food is other man's poison என்று சொல்வார்கள்.. அது போல மாறுபட்ட கருத்துகளும் எண்ணங்களும், தண்ணீரும் எண்ணையும் போல சில சமயம் ஒட்டாத/பொருந்தாத மனங்களை ஜோடி சேர்த்து விடுகின்றன..
இருவரில் ஒருவருக்காவது சகிப்புத்தன்மை இருந்தால்,உறவு தொடர்கிறது, இல்லாவிட்டால் instant cut தான் :-((

வாத்தியார் உங்களை பற்றி சிலாகித்து எழுதுவதால்,உங்கள் பதிவுக்கு வந்தேன்..மெல்லிய சோகம் கலந்த நகைச்சுவையுடன் நன்றாக எழுதுகிறீர்கள்.. வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் போகும்,உங்கள் வாழ்வில் வசந்தம் வரும்,வாழ்வீர் வளமுடன் அன்பரே !!!!!

பரிசல்காரன் said...

//ஒருவேளை கதை, வசனம் எழுதுபவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதாலேயே இந்தக் கூத்து தொடர்கிறதோ//

ஆமாம்!

பி.கு. என் வலைப்பூவில் பதினாலாம் தேதி உங்களுக்கு ஒரு கேள்வியும், வேண்டுகோளும் வைத்திருந்தேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//one man's food is other man's poison என்று சொல்வார்கள்.. அது போல மாறுபட்ட கருத்துகளும் எண்ணங்களும், தண்ணீரும் எண்ணையும் போல சில சமயம் ஒட்டாத/பொருந்தாத மனங்களை ஜோடி சேர்த்து விடுகின்றன.. இருவரில் ஒருவருக்காவது சகிப்புத்தன்மை இருந்தால், உறவு தொடர்கிறது, இல்லாவிட்டால் instant cut தான்:-((//

உண்மைதான் தமாம்பாலா.. அந்த சகிப்புத்தன்மை தங்களுடைய பெற்றோருக்கு அதிகம் இருந்ததினால்தான் தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நல்ல வாழ்க்கையும் கிடைத்திருக்கிறது என்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர மறுக்கிறார்கள். அதனால்தான் விவாகரத்து வழக்குகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

//வாத்தியார் உங்களை பற்றி சிலாகித்து எழுதுவதால், உங்கள் பதிவுக்கு வந்தேன்.. மெல்லிய சோகம் கலந்த நகைச்சுவையுடன் நன்றாக எழுதுகிறீர்கள்.. வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் போகும், உங்கள் வாழ்வில் வசந்தம் வரும், வாழ்வீர் வளமுடன் அன்பரே !!!!!//

வாத்தியாரின் மானசீக மாணவன் நான். ஒரே ஒரு முறை சில நிமிட நேர சந்திப்பு.. அவ்வளவுதான். இந்தச் சந்திப்பிற்கு முன்பும், பின்புமாக அவருடைய எழுத்தாலேயே நான் கவரப்பட்டேன். ஏனெனில் எங்கள் இருவருக்குமே ஞானத் தந்தை கவியரசர் கண்ணதாசன்.. குலதெய்வம் அப்பன் முருகன்..

இணைப்பிற்கும், பிணைப்பிற்கும், பாசத்திற்கும், ஊடலுக்கும், கூடலுக்கும் சொல்லவா வேண்டும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///பரிசல்காரன் said :
//ஒருவேளை கதை, வசனம் எழுதுபவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதாலேயே இந்தக் கூத்து தொடர்கிறதோ//
ஆமாம்!
பி.கு. என் வலைப்பூவில் பதினாலாம் தேதி உங்களுக்கு ஒரு கேள்வியும், வேண்டுகோளும் வைத்திருந்தேன்..//

பார்த்தேன் ஸார்.. ஆனால் பதிலளிக்க நேரமில்லாமல் போய்விட்டது.. மன்னிக்கவும். விரைவில் வந்து எழுதுகிறேன்.. கோபித்துக் கொள்ளாதீர்கள்.

தற்போதைய வருகைக்கும் நன்றிகள்..

SurveySan said...

2000ரூவாய்க்கு ups கெடைக்குமே, வாங்கி மாட்டினா, கரெண்ட்டு கட்டு தொல்லை இருக்காது..

பி.கு: பெரீரீரீய திருப்புமுனை என்னான்னு சொல்லுங்க.
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_26.html

abeer ahmed said...

See who owns apexpacific.com or any other website:
http://whois.domaintasks.com/apexpacific.com