நான் யார்? நீ யார்?


எல்லா செயல்களுக்கும் ஒரு வினைச் செயல் நிச்சயம் உண்டு.

எல்லா வினைகளுக்கும் எதிர்வினை ஒன்று உண்டு.

எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.

ஒரு பக்கச் சார்புக்கு நிச்சயம் மறுபக்கம் இருக்கும்.

தோண்டித் துருவினால் அது கிடைக்கும்.

ஒருவரின் மகிழ்ச்சி, இன்னொருவருக்கு துக்கமாக இருக்கும்..

மற்றொருவரின் துக்கம், வேறொருவரின் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ, அது நிச்சயம் ஒரு நாள் நடந்தே தீரும்.

எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறாயோ, அதுவும் நிச்சயமாக நடந்தே தீரும்..

ஏனெனில் எதுவும் நம் கையில் இல்லை.

நடப்பதெல்லாம் கனவேயாகும்..

சிந்தியவையெல்லாம் நம்மை மீறியதே ஆகும்..

நாம் ஒரு கருவி.. அவ்வளவே..

கருவியாக்குபவன் எங்கோ இருக்கிறான்.

அவனை ‘இல்லை’ என்பவனும் இருக்கிறான்.. ‘உண்டு’ என்பவனும் இருக்கிறான்.

‘இல்லை’ என்பதாலோ, அவன் ‘இருந்து’ கொண்டே இருக்கப் போவதில்லை..

‘உண்டு’ என்பதாலேயே, அவன் நாளைக்கு ‘போகாமல்’ இருக்கப் போவதில்லை.

எது நடக்குமோ அது நடந்தே தீரும்..

எதையும் எதிர்பார்க்காதே..

கிடைக்கின்ற வழியில் போ..

மீதியை உன் ‘கர்மா’ பார்த்துக் கொள்ளும்.

‘கர்மா’ எங்கே என்று தேடாதே..

அது உனக்குள் இருக்கிறது..

சிரிக்காதே..

‘உயிர்’ இருக்கிறது என்று எதை வைத்துச் சொல்கிறாய்..?

மூச்சுக் காற்றுக்கு 'உயிர்' என்ற பெயரா..?

உயிருக்கு என்ன வடிவம்..?

புரிந்து கொண்டாயா..?

எதுவும் உன்னிடம் இல்லை..

நீ 'அவனை' நம்பாமல் இரு..

ஆனாலும், உன்னை அவன் கவனிக்காமல் விடப் போவதில்லை.

நீ 'அவனிடமிருந்து' ஒளிந்து கொள்..

இருந்தாலும், என்றென்றும் அவன் கண்விழிக்குள்தான் இருப்பாய்..

அவனைப் புரிந்து கொள்ள மறு..

இந்த மறுப்பிற்கான காரணத்தையும் அவனே கொடுப்பான்..

அதை ‘நானே கொண்டு வந்தேன்’ என்று சொல்..

‘எங்கேயிருந்து’ என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்காதே..

சிரித்துவிடு..

‘அப்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லாமல் சொல்..
‘எப்போது’ என்பார்கள்..

முடியவில்லை எனில் சொல்லிவிடு..

‘நீ வந்த இடத்திலிருந்துதான்’ என்று..

இப்போது யாவருக்கும் புரியும் நீயும், நானும் ஒன்றுதான் என்று..!

9 comments:

Anonymous said...

இன்னைக்கு பெயரிலி டவுசரை அவுத்துட்டாங்களே? அதுக்கு தான் இந்த பதிவா?

vijay said...

Unmaithamizhan,

First, the pix of Lord Krishna is wonderful. I have just saved it in my pc.
Kavidhai nandraaha irundhadhu. Aanmika vishayangalai melum ezhudhavum.
vaazhthukkal.

vijayasarathy. Havana(Cuba)

Anonymous said...

உ.த. அண்ணாச்சி!

பெயரிலி பதிலுக்கு உம்ம டவுசரை உருவிட்டாளே? கவனீச்சீகளா?

SP.VR. SUBBIAH said...

/////இப்போது யாவருக்கும் புரியும் நீயும், நானும் ஒன்றுதான் என்று..!////

யாவருக்கும் புரிந்தால் உலகில் ஏது இவ்வளவு ஆட்டங்கள் - பாட்டங்கள்?
ஆகவே, புரிந்தவனுக்கு மட்டுமே அது புரியும் - தெரியும்.
புரியாதவனுக்கு அல்லது விளங்காதவனுக்கு கடைசிவரை விளங்காமலேயே போய்விடும்
அதுதான் உண்மை!
உண்மைக்கு ஒரே வடிவம்தான்!
முருகன் கையில் இருக்கும் வேலைப்போல!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
இன்னைக்கு பெயரிலி டவுசரை அவுத்துட்டாங்களே? அதுக்குதான் இந்த பதிவா?//

யார் டவுசரை..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//vijay said...
Unmaithamizhan, First, the pix of Lord Krishna is wonderful. I have just saved it in my pc.
Kavidhai nandraaha irundhadhu. Aanmika vishayangalai melum ezhudhavum. vaazhthukkal.
vijayasarathy. Havana(Cuba)//

வாழ்க வளமுடன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Anonymous said...
உ.த. அண்ணாச்சி!
பெயரிலி பதிலுக்கு உம்ம டவுசரை உருவிட்டாரே? கவனீச்சீகளா?//

பதில் போட்டிருக்கிறேன்.. பார்த்தீர்களா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///SP.VR. SUBBIAH said...
//இப்போது யாவருக்கும் புரியும் நீயும், நானும் ஒன்றுதான் என்று..!//
யாவருக்கும் புரிந்தால் உலகில் ஏது இவ்வளவு ஆட்டங்கள் - பாட்டங்கள்?
ஆகவே, புரிந்தவனுக்கு மட்டுமே அது புரியும் - தெரியும். புரியாதவனுக்கு அல்லது விளங்காதவனுக்கு கடைசிவரை விளங்காமலேயே போய்விடும் அதுதான் உண்மை! உண்மைக்கு ஒரே வடிவம்தான்! முருகன் கையில் இருக்கும் வேலைப ்போல!///

வாத்தியாரே.. புரிஞ்சாலும் புரியாத மாதிரி நடிச்சு தங்கள் வாழ்க்கையும் வீணாக்கி அப்பாவி மக்களின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டல்லவா செல்கிறார்கள்..?

என்றைக்கு இவர்களுக்குப் புரியப் போகிறது மனிதர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான் என்று..

ரொம்ப வெறுப்பா இருக்கு வாத்தியாரே..

abeer ahmed said...

See who owns submission2000.com or any other website:
http://whois.domaintasks.com/submission2000.com