வாருங்கள் வலைத்தமிழர்களே ஓடி வாருங்கள்.. தங்கத் தலைவி அழைக்கிறார்!!

என் இனிய வலைத்தமிழ் மக்களே...


போதும் இந்தத் திராவிட விளையாட்டு. நீ அடிக்கிற மாதிரி அடி. நான் அழுவுற மாதிரி அழுவுறேன்.. என்று சட்டமன்றத்திலும், வெளியிலும் நம்மிடையே மேக்கப் போடாமல் நடிக்கும் நமது திராவிட அரசியல் நடிகர்களை அடித்து விரட்ட மேக்கப்போடு இதோ புறப்பட்டுவிட்டார் நமது தங்கத் தலைவி(வர்).

'இவர் போனால் அம்மா'; 'அம்மா போனால் அவர்' என்று நமக்கே சடுகுடு ஆட்டம் மரத்துப் போகும் அளவுக்கு இருவரும் ஆடிய ஆட்டத்தால் மனம் வெறுத்துப் போயிருக்கும் வாக்காளப் பெருமக்களே.. இதோ நீங்கள் எதிர்பார்த்த உங்களது ரட்சகர்(கை) வந்து விட்டார்.

எங்கு பார்த்தாலும் லஞ்சம், யாரிடம் போனாலும் கமிஷன்.. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவனும் லஞ்சம் வாங்கிக் கொண்ட பிறகுதான் இதையே சொல்கிறான் என்று நினைக்கும்போது நமது நெஞ்சு என்ன பாடுபடுகிறது? எவ்வளவு கொதிக்கிறது? இந்தக் கொதிப்பை நீர் ஊற்றி அணைக்க..

நொந்து போயிருக்கும் நம் மனதுக்கு இதமான தென்றலைப் போல் வீச வரும் நமது தமிழ்ச் சங்கம் போற்றும் தங்கத் தலைவர்(வி) அழைக்கிறார் நம்மை.. வாருங்கள்.. உடன்பிறப்புகளே.. வாருங்கள்..

இருவரும் என்றாவது ஒரு நாள் காணாமல் போனால் கிடைக்கிற கேப்பில் நாம் உள்ளே நுழையலாம் என்று இலவு காத்தக் கிளியாகக் காத்துக் கொண்டிருக்கிற தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறிவிடும் என்று முன் வருவதை இப்போதே சொல்லிவிடும் ஆற்றல் படைத்த நமது தமிழ்நாட்டின் பேரறிவுச் சுடர் பெருந்தகைச் செல்வன்(வி)அழைக்கிறார்.. வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே.. வாருங்கள்..

நமது இதய தெய்வம், காக்கும் கடவுள், கண்ணை மூடினாலே நம் கண் முன்னால் வந்து நிற்கும் தெய்வம், கூப்பிடாமலேயே ஓடோடி வந்து நமக்கு இதமாகச் சுகமளித்து நம்மை தூங்க வைக்கும் தென்றல்.. பகுத்தறிவு தந்த தமிழகத்தின் மாசற்ற மாணிக்கம், தங்கக் குடத்தில் தகதகவென்று மின்னும் மங்காத குல விளக்கு, கண்மணிகளுக்கெல்லாம் கண்மணியாய் நம்மைத் தாங்க இருக்கும் குடும்ப விளக்கு.. தேடி வந்தோரை இனிமேல் தேடவே விடாமல் செய்யும் அளவுக்கு வாரிக் கொடுக்கும் வம்சத்தில் பிறந்த இளவல்.. எக்கையில் கொடுக்கிறார் என்பதை யாருக்கும் சொல்லாமல் அள்ளி அள்ளிக் கொடுக்கும் கர்ணன்(னி).. அழைக்கிறார் மக்களே.. அழைக்கிறார். வாருங்கள்.. அவருடன் கரம் கோர்த்து தமிழகத்தை வளர்ப்போம்.. நாமும் வளர்வோம்..

தமிழகத்தின் தங்கத் தலைவி, சீர்த்திருத்தச் செல்வி, இளைய சமுதாயத்தினரின் ஒரே விடிவெள்ளி, இதோ இவர்தான்..


தமிழகத்தைக் காப்பாற்ற வந்திருக்கும் புதிய கடவுள். இந்தத் தெய்வத்தின் உருவாக்கத்தில் விளைந்ததுதான் அனைத்திந்திய த்ரீஷா தமிழக முன்னேற்றக் கழகம்.
என்றும் மங்கா புகழ் பெற்ற சங்கத் தலைவியின் பொற்பாதம் தொட்டு அவரது ஆசியுடன் அவரது கொள்கைகளை வழி நடத்திச் சொல்லவும், செல்லவும் அவருடைய முதல் ரசிகன், முத்தான வெறியன்.. பார்த்து வா என்றால் புகைப்படத்தை வெட்டி எடுத்து வரும், கட்டழகன், கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும்பு, அண்ணன் 'ஓசை செல்லா' அவர்களை பொதுச் செயலாளராகவும்..


அன்றும், இன்றும், என்றும் ஒரே கொள்கை, ஒரே லட்சியம், ஒரே பார்வை என்று அனைத்தையுமே ஒரே நோக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் லட்சியவாதி, கோன் என்றாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காத தடங்கோள் தவறா வீரன், எந்தக் கட்சிக்குச் சென்றாலும் 'பொருளாளர்' பதவியை விட்டுக் கொடுக்காத போர்வாள், உங்களது அருமைத் தம்பி 'உண்மைத்தமிழனை' பொருளாளராகவும் கொண்ட இந்த அனைத்திந்திய த்ரீஷா முன்னேற்றக் கழகத்தில் இணைய வாருங்கள்..
அன்னை த்ரீஷாவின் புகழ் பரப்புவதே இனி நமது முழு நேரப் பணி. அவர்தம் கொள்கைகளை பட்டித் தொட்டியெங்கும் பரப்பி, இருண்டு கிடக்கும் தமிழகத்தில் விளக்கேற்றி தமிழக மக்களைக் காக்கும் தெய்வமாக நமது அன்னை த்ரீஷாவை உயர்த்துவோம்..

வாருங்கள் தோழர்களே.. வாருங்கள்..
வீழ்வது நாமாக இருந்தாலும் சரி..
வாழ்வது நமது அன்னை த்ரீஷாவாக இருக்கட்டும்..!


வாழ்க அன்னை..!


வளர்க அவரது புகழ்..!!!

111 comments:

எதிர் கோஷ்டி ஏகாம்பரம் said...

//கொங்கு மண்டல தளபதி, கட்சியின் முதுகெலும்பு, அண்ணன் 'ஓசை செல்லா' அவர்களை பொதுச் செயலாளராகவும்..
//

என்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா? இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.

எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.

அவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.

உங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்!

ஓசை செல்லா ஆதரவாளர் said...

கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை!

முகாம் தலைவர் said...

யப்பா! எல்லாரும் ஓடியாங்கோவ்!

உண்மைத் தமிழன் நமக்காகவோ இன்னிக்கு ஒரு பதிவு போட்டிருகாரு!

வாழ்க உண்மைத் தமிழன்!

உண்மைத் தமிழன் said...

//என்ன கொங்கு மண்டல தளபதி ஓசை செல்லாவா? இந்த கருத்துக் கணிப்பு செல்லாது.

எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.

அவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.

உங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்!//

யப்பா.. கூட இருந்தே குழி தோண்டிட்டீங்களேப்பா.. உங்க சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்.. அதுக்குள்ள கொளுத்தவே கிளம்பிட்டீங்களா? சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்..

த்ரிஷா said...

என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

:(

குஷ்பூ said...

இந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்!

எங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)

அசின் said...

உண்மைத்தமிழன் பார்சியாலிட்டி பார்க்குது!

ஐ ஹேட் ஹிம்!

பேபி ஷாலினி said...

உங்கச்சி கா!

பேசமாத்தேன் போ!

பேபி ஷாமிலி said...

உம்மாச்சி ராத்திரி வந்து உண் கண்ணைக் குத்தும்!

பொய்த்தமிழன் said...

உண்மைத்தமிழா

செல்லா பொதுச்செயலாளரா இருந்திட்டுப் போகட்டும்.. சிபி கொ.ப.செ.யா இருந்திட்டுப் போகட்டும்.. நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு..

இந்தாப் பாருப்பு.. நீ இதுக்கு முன்னாடி எத்தனைக் கட்சில இருந்து கொள்ளையடிச்ச? லிட்டை எடுத்து விடு.. அதுல உன் சுருட்டுன திறமையைப் பார்த்துத்தான் நாங்க உன்னை வைச்சுக்கலாமா வேண்டாமான்னு யோசிப்போம்.. சொல்லிப்புட்டோம்..

காந்திமதி said...

ஏண்டா எடுபட்ட பயலே!

எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா?

ஜோதி லட்சுமி said...

//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா?//

அதானே! பிச்சிப்பிடுவேன் பிச்சி!

கோவை சரளா said...

பாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்!

முகாம் தலைவர் said...

//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //

ஏ! பருப்பு வந்தாச்சு! சாம்பார்க்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா!

முகாம் துணைத் தலைவர் said...

ஓகே பாஸ்!

ஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே!

:(

நாமக்கல் சிபி said...

//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.

அவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.

உங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்!
//

அடப் பாவிகளா!
என்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க?

நான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்!

ஜெயமாலினி said...

எங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்!

தேர்தல் கமிஷன் said...

கட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்!

ஜெமினி கணேசன் said...

//ஏ! பருப்பு வந்தாச்சு! சாம்பார்க்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா!
//

என்னை யாரு இங்கே கூப்பிட்டது?

கொள்கை விரும்பி said...

//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//

ஆமா!
உங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா?

அப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே!

எதிர் கோஷ்டி ஏகாம்பரம் said...

// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//

எங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன?

முரண்பாடுகளை வெறுப்பவன் said...

//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//

//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //

என்னங்க இது! ஒரே பாராவுல இப்படி முரண்பாடா?

முதல்ல கொ.ப.செ கொடுப்போங்கறீங்க!

அதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க!

நாமக்கல் சிபி said...

உண்மைத் தமிழரே!

எப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு!

வாழ்த்துக்கள்!

கேட் வின்ஸ்லெட் said...

என்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்!

நமீதா said...

நான் இந்த ஆட்டைக்கு வரலைப்பா!

நமீதா said...

நான்தான் 25 ஆ?

பத்மினி said...

மறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன?

உண்மைத் தமிழரே!

மறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன?

உண்மைத் தமிழன் said...

//த்ரிஷா said...
என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!//

கமெடியா? நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..

ஆன்லைன் ஆவிகள் said...

உண்மைத் தமிழரே!

ஆ.உ.மு.க வுக்கு வந்துடுங்க! தலைவர் பதவியே கொடுக்குறோம்!

ஆ.உ.மு.க - ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்!

த்ரிஷா said...

//கமெடியா? நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..
//

உங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது!

ஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!

:(

ஹெச்.ஆர் மேனேஜர் said...

இன்னிக்கு ஆளுங்க போதுமா?

இல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா?

அர்விந்த் சாமி said...

உங்கள் கட்சி விரைவில் அகில இந்திய அளவில் புகழ் பெறட்டும்!

உண்மைத் தமிழன் said...

//குஷ்பூ said...
இந்த வலைப்பூவை நாங்கள் புறக்கணிக்கிறோம்!

எங்களது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

(நாங்கள் என்பது நானும், சுந்தச்.சி யும் மட்டுமே)//

அம்மணி.. உங்க பேர்ல கட்சி ஆரம்பிச்சு அப்புறம் எவன் அடி வாங்குறது?

அதுலேயும் இப்பல்லாம் 'போவோமா ஊர்வோலம்' பாட்டைவிட.. 'கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப் போய்தான் கல்யாணந்தான் கட்டிக்கலாமா..' பாட்டுத்தான் வாக்காளர்களிடையே ஹிட்டாக்கும்..

சுப்பிரமணிய சாமி said...

யோவ்! அர்விந்த் சாமி!

சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா?

உண்மைத் தமிழரே! உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்!

அப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம்! என்ன சொல்றீங்க?

Anonymous said...

உணமைத் தமிழன் அய்யா,

கட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது?

பாலா

அர்விந்த் சாமி said...

//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா?
//

ஏன் வாழ்த்தினா என்னவாம்?
நான் அப்படித்தான் வாழ்த்துவேன்!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்!

இளவேனில் உன் வாசல் வந்தாடும்!
இளந்தென்றல் உன் மீது புண் பாடும்!

உண்மைத் தமிழன் said...

//அசின் said...
உண்மைத்தமிழன் பார்சியாலிட்டி பார்க்குது!

ஐ ஹேட் ஹிம்!//

பர்ஸனாலிட்டியா? அதையெல்லாம் பேசுறதுக்கே ஒரு தோரணை வேணுமாக்கும்.. அசின் பொண்ணு நீ போய் வீட்ல அம்மா, பாட்டிகூட உக்காந்து பல்லாங்குழி விளையாடு.. என்ன..

மைக் மோகன் said...

பாடு நிலாவே! தேன் கவிதே! பூ மலர!

உன் பாடலை நான் கேக்குறேன்!

பாமாலையை நான் கோர்க்கிறேன்!

பாடு நிலாவே! தேன் கவிதே! பூ மலர!

அர்விந்த் சாமி said...

யோவ் மைக் மோகா! உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா!

ஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே!

இப்பத்தான்யா கட்சியே ஆரம்பிக்குறாங்க! அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே!

ம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு!

உண்மைத் தமிழன் said...

//பேபி ஷாலினி said...
உங்கச்சி கா!

பேசமாத்தேன் போ!

பேபி ஷாமிலி said...
உம்மாச்சி ராத்திரி வந்து உண் கண்ணைக் குத்தும்!//

பேபி ஷாலினி, பேபி ஷாம்லி கண்ணுகளா.. உங்க பேரையெல்லாம் இப்ப சொன்னா "யாராக்கும் இவுக..? த்ரீஷாவுக்குச் சொந்தக்காரங்களா?"ன்னு பயபுள்ளைக கேக்குறானுக..

ஸோ.. ஒதுங்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது..

TANTEA said...

//உண்மைத் தமிழரே! உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்!
//

வழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்!

உண்மைத் தமிழன் said...

//காந்திமதி said...
ஏண்டா எடுபட்ட பயலே!

எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா?//

ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு? தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..

த்ரிஷா said...

உங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா?

யூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா!

:))

ஐ லைக் யூ வெரி மச்!

காந்திமதி said...

//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு? தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..
//

ஏன்! நாங்களெல்லாம் ஆட மாட்டோமாக்கும்! அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா!

ஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்!

ம்க்கும்!

உண்மைத் தமிழன் said...

//ஜோதி லட்சுமி said...
//எங்களையெல்லாம் பார்த்தா நடிகையாத் தெரியலையா?//

அதானே! பிச்சிப்பிடுவேன் பிச்சி!//

//ஜெயமாலினி said...
எங்க பேருலயும் கட்சி ஆரம்பிக்கலைனா ராத்திரி கனவுல வந்து தொல்லை பண்ணுவேன்!//

அம்மா ஜோதிலட்சுமியம்மா.. ஜெயமாலினியக்கா.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆடின ஆட்டத்தைப் பார்த்துப்புட்டு எங்க அப்பனுகளும், அண்ணன்களும் வூட்டுக்கு வந்து ஆடின ஆட்டத்தை நாங்க ஜென்மத்துக்கும் மறக்க மாட்டோமாக்கும்..

தப்பித் தவறி எங்காத்தாக்களுக்கும், அக்காக்களுக்கும், மதினிமார்களுக்கும் நீங்க உசிரோட இருக்கிறது தெரிஞ்சுச்சு.. அம்புட்டுத்தான்.. மரியாதையா அப்பீட்டு ஆயிருங்க.. சொல்லிப்புட்டேன்..

சச்சின் said...

இதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை!

வீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ்! அம்புட்டுதேன்!

உண்மைத் தமிழன் said...

//கோவை சரளா said...
பாப்பநாயக்கம்பாளையம் தொகுதி நமக்கு வந்தாகணும் சொல்லிட்டேன்!//

மொதல்ல கட்சில முறைப்படி சேர்ந்து த்ரீஷா மேடத்தோட குட்புக்ல இடம் பிடிக்குற வேலையைச் செய்யுங்க..

அப்பால எனக்கும், பொதுச்செயலாளர் திரு.ஓசை செல்லா அவர்களுக்கும் 'எம்புட்டு' வெட்டுவீங்கன்னு சொல்லுங்க.. அதுக்கப்புறம் நாங்க முடிவு பண்றோம் நீங்க நிக்கலாமா? வேண்டாமான்னு..

வினிதா said...

அப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல!

எங்களைச் சேர்த்துக்குறது!

ஜூஜூலிப்பா!

உண்மைத் தமிழன் said...

//முகாம் தலைவர் said...
//நீயென்ன பெரிய பொருளாளர் பருப்பு.. //

ஏ! பருப்பு வந்தாச்சு! சாம்பார்க்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா!//

//முகாம் துணைத் தலைவர் said...
ஓகே பாஸ்!

ஆனா சாம்பாருக்கு இன்னும் சின்ன வெங்காயம் வேணுமே!//

வெங்காயத்தைப் பேசுற பேச்செல்லாம் இங்கன வேண்டாம்.. எங்க கட்சித் தலைவிக்குப் பிடிக்காத வார்த்தை வெங்காயம்தான்.. சொல்லிப்புட்டேன்..

நயன்தாரா said...

நாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்!

நயன்தாரா said...

ஐய்யா!

நான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்!

உண்மைத் தமிழன் said...

///நாமக்கல் சிபி said...
//எங்கள் தளபதி சிபியார் இருக்கிறார்.

அவரைத்தான் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும்.

உங்கள் பிளாகைக் கொளுத்த இப்போதே புறப்படுகிறோம்!
//

அடப் பாவிகளா!
என்னைய ஏன்யா இதுல இழுக்குறீங்க?

நான் பாட்டுக்கு சிவனேன்னு கெடக்கேன்!///

இப்படி செவனேன்னு கிடந்தா நயன்தாரா, அசின், ப்ரியாமணியையெல்லாம் எப்படி கவர் பண்றது? சீனுக்கு வரணும்ங்க.. வாங்க.. கொ.ப.செ. பதவி உங்களுக்குத்தான்.. அதுல சந்தேகமேயில்லை..

///நாமக்கல் சிபி said...
உண்மைத் தமிழரே!

எப்படியோ உங்க பிளாக் பக்கம் நடிகைகளா வர வெச்சிட்டீங்க போலிருக்கு!

வாழ்த்துக்கள்!///

இந்த வேகாத வெயில்ல மண்டை காய்ஞ்சு போய் கிடந்துச்சா.. அதான்.. ஹி.. ஹி..

உண்மைத் தமிழன் said...

//தேர்தல் கமிஷன் said...
கட்சியைப் பதிவு செய்யணும்னா எங்களுக்கு முதல்ல கமிஷன் வந்தாகணும்!//

மொதல்ல நாங்க இங்கன கட்சிக்கு ஆபீஸைத் தேடி ஆளைப் போட்டுக்குறோம்.. அப்பால அந்தப் பக்கம் வர்றோம்.. அதுக்குள்ள பீஸ் கேட்டு அலைய ஆரம்பிச்சிட்டானுகப்பா..

முரளி said...

அழகோவியம்..உயிரானது..
புவி மீதிலே நடமாடுது!..

கவியாயிரம் பல பாடுது!
புதுக்காவியம் அரங்கேறுது!

லவ்லி லிசா! லவ்லி லிசா!

அர்விந்த் சாமி said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

வரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்!

டேய் முரளி என் மைக்கைக் குடுடா!

பாடல் மைக்கே! எங்கே நீ எங்கே!
கண்ணில் வழியுதடி கண்ணீர்!

கண்ணுக்குள் நீதான்! கண்ணீரில் நீதான்!
கண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்!
என்னான்னதோ ஏதானதோ சொல்!

மைக் : போடா வெண்ணெய்! அதான் முரளி பிடுங்கிகிட்டானே! அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு!

உண்மைத் தமிழன் No:2 said...

நானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா?

உண்மைத் தமிழன் No3 said...

அப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்!

ஒண்ணும் வெளங்காதவன் said...

என்ன நடக்குது இங்கே?

!?

உண்மைத் தமிழன் said...

நான் சாப்பிட்டுட்டு வந்து அல்லாருக்கும் மொத்தமா ஆன்ஸர் சொல்றேன்.. இப்ப அப்பீட்டு..

அர்விந்த் சாமி said...

அப்ப நானும் சாப்ட்டுட்டு வரேன்!

மைக்கையும் எடுத்துகிட்டு போறேன்!

இல்லேன்னா எவனாவது களவாண்டுட்டு போயிடுவான்!

உண்மைத் தமிழன் said...

//கொள்கை விரும்பி said...
//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//

ஆமா!
உங்க கட்சில கொள்கையெல்லாம் இருக்கா?

அப்போ உருப்படியா கட்சி நடத்த முடியாதே!//

கொள்கை விளம்பி ஸார்.. கொள்கையை வகுப்பதற்காக எமது கட்சியின் பெருந்தலைகள் அனைவரும் டுத்த மாதம் தாய்லாந்து செல்கிறோம். அங்கே நாங்கள் அனைவரும் இதே போல் கும்மியடித்து கும்மியடித்து எங்களது கொள்கைகளை வடிவமைத்து கொண்டு வந்து அன்னை த்ரீஷா அவர்களின் காலடியில் சமர்ப்பித்து..

அப்புறம் பாருங்க.. எங்க கட்சியோட வளர்ச்சியை..

உண்மைத் தமிழன் said...

//எதிர் கோஷ்டி ஏகாம்பரம் said...
// சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்//

எங்கள் தலைவர், அஞ்சா நெஞ்சன், தங்கத் தளபதி சிபியாரை அனுப்பிவிட்டு உங்களால் கட்சி நடத்தி விட முடியுமா என்ன?//

சிபிஐ என்று நான் சொன்னது, நீங்கள் எதையோ, யாரையோ கொளுத்தப் போவதாகச் சொன்னீர்களே.. அதற்குப் பின்னால் உங்களைக் கண்டுபிடிக்க சிபிஐ படையினரை அனுப்ப நேரிடும் என்று சொன்னேன்.. புரிந்ததா? சிபியாரின் தொண்டன் என்கிறீர்கள்.. இப்படி டியூப்லைட்டாக இருக்கிறீர்களே.. சிபியாரே.. இவரைக் கொஞ்சம் கவனியும்..

உண்மைத் தமிழன் said...

///முரண்பாடுகளை வெறுப்பவன் said...
//சிபியாருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கலாம்னு இருந்தோம்//

//சிபிஐயை அனுப்ப வேண்டி வரும் //

என்னங்க இது! ஒரே பாராவுல இப்படி முரண்பாடா?

முதல்ல கொ.ப.செ கொடுப்போங்கறீங்க!

அதே பாராவுல கடைசில சிபிஐ (கட்சிலேர்ந்து) அனுப்பிடுவோம்ங்கறீங்க!///

எதிர்கோஷ்டி ஏகாம்பரத்துக்கு முந்தைய பதிலில் சொன்னதுதான் உங்களுக்கும்..

உண்மைத் தமிழன் said...

//கேட் வின்ஸ்லெட் said...
என்னைய வெச்சி கட்சி ஆரம்பிச்சிருந்தா அகில உலக லெவல்ல போயிருக்கலாம்!//

கேட்வின்ஸ்லெட் மேடம்..

நீங்க கல்யாணம் பண்ணினது ரொம்பத் தப்பு. அப்பவே எங்க மனசுல இருந்து தானா வெளில போயிட்டீங்க.

அதோட இல்லாம ரெண்டு புள்ளைகளை வேற பெத்துட்டீங்க.. ஸோ.. நாங்க உங்களை தலைவியா ஏத்துக்க முடியாதுங்கோ.. எங்களுக்கு என்னிக்குமே இளமையா இருக்கிறவுகளைத்தான் பிடிக்குமாக்கும்..

உண்மைத் தமிழன் said...

//நமீதா said...
நான் இந்த ஆட்டைக்கு வரலைப்பா!

நமீதா said...
நான்தான் 25 ஆ?//

நாங்களும் இப்போ கூப்பிடலியே.. இந்தக் கட்சில இருந்து ஒரு எலெக்ஷன்ல நின்னு பார்க்குறோம். தோத்துட்டோம்னா படார்ன்னு உங்க பக்கம் வந்திரும்.. வாசல் கதவைத் திறந்து வைச்சுட்டு அப்படியே நில்லுங்க..

உண்மைத் தமிழன் said...

//பத்மினி said...
மறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன?

உண்மைத் தமிழரே!

மறைந்திருந்து கட்சி ஆரம்பிக்கும் மர்மம் என்ன?//

சும்மா எவ்ளோ நாளைக்குத்தான் வெளில நின்னு வேடிக்கை பார்க்குறது? சும்மா உள்ள பூந்து சுத்த வேண்டாம்.. அதான்..

உண்மைத் தமிழன் said...

//ஆன்லைன் ஆவிகள் said...
உண்மைத் தமிழரே!

ஆ.உ.மு.க வுக்கு வந்துடுங்க! தலைவர் பதவியே கொடுக்குறோம்!

ஆ.உ.மு.க - ஆவிகள் உலக முன்னேற்றக் கழகம்!//

ஐயையோ.. இப்பவே என்னைப் பார்க்குறவுக அல்லாரும் சொல்றது என்னடா ஆவி மாதிரி இருக்கேன்னுதான்.. ஆமா.. ஆவி இடுப்பொடிய, தொப்புள் தெரிய டான்ஸ் ஆடுமா? மொதல்ல அத்த சொல்லுங்க..

உண்மைத் தமிழன் said...

//த்ரிஷா said...
//கமெடியா? நிஜக்கதைங்கோ அம்மா.. இந்தப் பதிவை உங்கள் பொற்பாதங்களில் காணிக்கையாகச் செலுத்துகிறான் உண்மைத்தமிழன்..
//

உங்க பதிவைப் பார்த்தா ஏதோ சீரியஸா இருக்கற மாதிரிதான் தோணுது!

ஆனா பின்னூட்டங்களைப் பார்த்தா அப்படித் தெரியலையே!//

அப்படியா? ஐயோ.. என் சங்கத் தலைவி, தங்கத் தலைவியின் வாயார பாராட்டைப் பெற்றுவிட என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை.. தலைவியே.. இந்த ஏழைத் தொண்டனை மனதில் வைத்திருங்கள்..

ச்சும்மா.. இப்பவே அப்ளிகேஷன் போட்டு வைச்சு.. ஒரு வேளை உங்களுக்கு ஸ்பீடு வந்து இறங்கிட்டீங்கன்னா பின்னாடியே வந்து ஒட்டிக்கலாம்.. பாருங்க. அதுக்குத்தான்.

உண்மைத் தமிழன் said...

//ஹெச்.ஆர் மேனேஜர் said...
இன்னிக்கு ஆளுங்க போதுமா?

இல்லே இன்னும் கொஞ்சம் அனுப்பவா?//

பத்தாது ஸார்.. இன்னிக்கும் நூறைத் தாண்டனும்னு 'அம்மா' சொல்லிருக்காங்க..

உண்மைத் தமிழன் said...

//சுப்பிரமணிய சாமி said...
யோவ்! அர்விந்த் சாமி!

சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா?

உண்மைத் தமிழரே! உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்!

அப்படியே செண்ட்ரல்ல இருக்குற கூட்டணிய உடைச்சி பை எலக்சன் வெச்சி ஆச்சியைப் பிடிப்போம்! என்ன சொல்றீங்க?//

சுப்ரமணியம்.. சுப்ரமணியம்.. கோபம் வேண்டாம்.. நமக்கு இந்த நேரத்துல அல்லா சாமியும் வேணும். அப்பத்தான் அடிக்கிறதுக்கு ஒரு சாமி.. கடிக்கிறதுக்கு ஒரு சாமின்னு வைச்சுக்கலாம்.

டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணலாந்தான். நமது தங்கத் தலைவி இப்போது 'பீமா' படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றிருக்கிறார். வந்தவுடன் அவருடன் கலந்து பேசி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அப்புறம் சென்ட்ரல் கூட்டணியை உடைக்கிற வேலையெல்லாம் இப்ப வேண்டாமாம்.. தலைவி உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. ஏன்னா அவுங்க இன்னும் வருமான வரிக்கணக்கையெல்லாம் தாக்கல் பண்ணலையாம்.. எதுனாச்சும் கேள்வி கேப்பானுக டெல்லி கம்னாட்டிகன்னு திட்டுறாங்க.. இதையும் அப்புறமா வைச்சுக்கலாம்..

துளசி கோபால் said...

அட! இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா?:-))))

ஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா?

பிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்
கலைமாமணி மலிஞ்சுருச்சா?

உண்மைத் தமிழன் said...

//Anonymous said...
உணமைத் தமிழன் அய்யா,

கட்சி பேரை மாத்தினா கொஞ்சம் சக்ஸ்ஸ் எதிர்பார்க்கலாம்.அனைத்திந்திய திரிஷா திராவிட முன்னேற்ற கழகம்ன்னு பேரை மாத்தலாம்னு சிபாரிசு செய்கிறேன் அய்யா.கட்சி தலமை என்ன சொல்லுது?

பாலா//

பாலா அய்யா

திராவிடப் பருப்புகளுக்கு எதிராகத்தான் அம்மா த்ரீஷா தோள் தட்டி, தொடை தட்டி களமிறங்கியிருக்கிறார். எனவே எங்களது இரத்தத்தில்கூட நாங்கள் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம். இதற்கெதற்கு கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்டக்குழுவைக் கூட்ட வேண்டும்? நானே சொல்லி விடுகிறேன்.. பெயர் மாற்றம் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

உண்மைத் தமிழன் said...

//அர்விந்த் சாமி said...
//சாமின்னு பேர்ல இருந்தா உடனே வாழ்த்திடுறதா?
//

ஏன் வாழ்த்தினா என்னவாம்?
நான் அப்படித்தான் வாழ்த்துவேன்!

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்!

இளவேனில் உன் வாசல் வந்தாடும்!
இளந்தென்றல் உன் மீது புண் பாடும்!//

அர்விந்த்சாமி.. கோபம் வேண்டாம்.. அது நம்ம சுப்ரமணியம் சாமி.. அதுவும் சாமிதான்.. நமக்கு சொம்பு தூக்க உதவும். நீ கோச்சுக்காத.. நீ பாட்டுக்கு பாடிக்கின்னு இரு..

எல்லோரும் நலம் வாழ என் வாழ்த்துக்கள்..

உண்மைத் தமிழன் said...

//மைக் மோகன் said...
பாடு நிலாவே! தேன் கவிதே! பூ மலர!

உன் பாடலை நான் கேக்குறேன்!

பாமாலையை நான் கோர்க்கிறேன்!

பாடு நிலாவே! தேன் கவிதே! பூ மலர!//

மைக் மோகன் ஸார்.. மைக்கைப் பிடிச்சு பல வருஷமாச்சுன்றதால பாட்டு மறந்து போச்சா.. ஒழுங்கா பாடுங்க.. அப்பத்தான் கலைப் பிரிவுக்கு செயலாளராப் போடுவோம்..

உண்மைத் தமிழன் said...

//அர்விந்த் சாமி said...
யோவ் மைக் மோகா! உன் அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லையா!

ஏன்யா என்கிட்ட இருந்து மைக்கை பிடுங்கினே!

இப்பத்தான்யா கட்சியே ஆரம்பிக்குறாங்க! அதுக்குள்ளே நீ மைக்கைப் பிடுங்குறே!

ம். ஒரு எம்.எல்.ஏ சீட்டுக்கு அடி போடுறே போல இருக்கு!//

மைக் மோகன்.. குட்.. பாட்டுத்தான் சரியா வரலைன்னு நினைச்சேன். அரசியல் உடனே வந்திருச்சு. மைக்கைப் பிடுங்கிட்டியா அரவிந்த்சாமிகிட்ட இருந்து..

சரி.. சரி.. இதை உடனே உன்னோட பயோடேட்டால எழுதி அம்மாவுககு அனுப்பி வை.. ஒரு தறுதலைப் பய அம்மாவைப் பத்தி இல்லாததும், பொல்லாதததுமா எழுதிக்கிட்டிருக்கான். அவனை ஒரு போடு போடறதுக்கு ஆள் தேடுறாங்க அம்மா..

உண்மைத் தமிழன் said...

//TANTEA said...
//உண்மைத் தமிழரே! உடனடியா ஒரு டீ பார்ட்டி ஏற்பாடு பண்ணுவோம்!
//

வழக்கம் போல டீயை நாங்களே சப்ளை பண்ணுறோம்!//

அதெல்லாம் வேணாம்.. அதுக்கப்புறம் பத்து பேரு காசுக்கு நூறு பேர் சாப்பிட்ட மாதிரி பில் கொடுப்பீங்க.. தமிழ்நாட்டுக்காரங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன?

உண்மைத் தமிழன் said...

//த்ரிஷா said...
உங்க பதிவை காமெடின்னு லேபிள் போட்டு வெச்சிட்டு காமெடி இல்லைன்னு சொல்ரீங்களா?

யூ யூ வெரி நாட்டி உண்மைத் தமிழா!

:))

ஐ லைக் யூ வெரி மச்!//

ஹி..ஹி.. அம்மா.. சங்கத் தலைவியே.. தங்கத் தலைவியே.. இதெல்லாம் சும்மாதாம்மா.. கட்சியோட கொள்கையை வகுக்க, என்னை மட்டும் தனியா தாய்லாந்துக்கு அனுப்பிப் பாருங்க.. வரும்போது எம்புட்டு(!) கொள்கையோட வர்றேன்னு..

உண்மைத் தமிழன் said...

///காந்திமதி said...
//ஆத்தா.. நீ அப்பீட்டு.. ஒதுங்கிக்கோ.. குத்தாட்டம் ஆடத் தெரியுமா உனக்கு? தெரிஞ்சா சொல்லு.. மகளிர் அணில சேர்க்க டிரை பண்றேன்..
//

ஏன்! நாங்களெல்லாம் ஆட மாட்டோமாக்கும்! அந்த காலத்துல கரகத்தை எடுத்து தலை வெச்சி ஆடுனா பதினெட்டு பட்டியும் கிளுகிளுத்துப் போய்க்கெடக்கும் ஆமா!

ஏன் இப்பக் கூடத்தேன் ராஜ்கிரண் நடிச்ச மாணிக்கம் படத்துல கழுத்துல மாலையை போட்டுகிட்டு ஆடினதை மைனர் பாக்கலையாக்கும்!

ம்க்கும்!///

ஆத்தா.. அந்தப் படம் வந்தே பத்து வருஷமாச்சு ஆத்தா.. அதுக்கப்புறம் 'மாணிக்கம்' தன் சொத்து முழுசையும், அங்கனயும் ஒரு 'ஆத்தா, மகள்கள்'கிட்ட மொத்தமா அழுதுபுட்டு..

வெளில வந்து பிச்சையெடுத்து, கேவலப்பட்டு இப்பத்தான் ஏதோ நிமிர்ந்து உட்கார்ந்திருக்காரு.. உன் ராசி அப்படின்னு எங்க குடும்ப ஜோஸியரும், குடும்ப பூசாரியும் சொல்லிப்புட்டாக.. இத்தோட அந்த மேட்டரை விட்ரு..

உண்மைத் தமிழன் said...

//சச்சின் said...
இதைப் பத்தி இப்போ நான் எதுவும் கருத்து சொல்றதுக்கு இல்லை!

வீ ஹேவ் டூ வின் த பங்களாதேஷ் சீரியஸ்! அம்புட்டுதேன்!//

டேய்.. டேய்.. உன்கிட்ட இப்ப கேட்டனா? இல்ல.. ஏதாவது கேட்டனா? அதான் வூட்ல உக்காருடான்னு சொல்லி இங்க விட்டுட்டுப் போயிருக்காங்கள்லே.. பேசாம வாயை வைச்சுக்கிட்டு சும்மா உக்கார வேண்டியதுதான..

அப்பு.. இது ஒண்ணும் கிரிக்கெட் கிரவுண்ட் இல்ல.. அரசியல் களம்.. ரத்த பூமி.. அல்லாமே சிவப்பாத்தான் இருக்கும்.. நீ பேட்டைக் கீழ தட்டுத் தட்டுன்னுத் தட்டி நிமிர்றதுக்குள்ள இங்கன அரசியல்ல உன்னைக் குழி தோண்டிப் புதைச்சிருவானுக.. போ.. போய் வூட்டுக்காரம்மாவுக்கு அடுப்படில எதுனாச்சும் ஹெல்ப் பண்ணு.. பின்னாடி எப்பவாச்சும் உதவும்..

உண்மைத் தமிழன் said...

//வினிதா said...
அப்போ நாங்கள்ளாம் குத்தாட்டம் போடுவம்ல!

எங்களைச் சேர்த்துக்குறது!

ஜூஜூலிப்பா!//

வேணாம்மா.. நீ இப்ப இருக்குற லெவலுக்கு குத்தாட்டம் போட்டீன்னா அம்புட்டுத்தான் கார்ப்பரேஷன் ரோடு பணால் ஆயிரும்.. அதோட நீ கட்சிக்குள்ள வந்தன்னு வைச்சுக்க.. இங்கனேயே நாலு பேரு உன்னை கொ.ப.செ. ஆக்கணும்னு டாஸ்மாக் கடைக்குப் போகாமலேயே அலம்பல் பண்ணுவானுங்க.. அப்புறம் எங்க பொழைப்பு நாறிப் போயிடும்.. ஓடிப் போயிரு..

உண்மைத் தமிழன் said...

//நயன்தாரா said...
நாமக்கல்லார் இந்தக் கட்சில இல்லைனா நானும் இந்த கட்சிக்கு வர மாட்டேன்!

நயன்தாரா said...
ஐய்யா!

நான்தான் 50 ஆவது கமெண்ட் போட்டிருக்கேன்!//

ஐயையோ.. நாமக்கல்லார் இல்லாம நாங்க எப்படி வருகின்ற தொண்டர்களின் நெற்றியில் பூச நாமக்கட்டியைத் தயாரிப்பது. அவர்தான மொத்தத்துக்கு குத்தகைதாரர். ஸோ.. அவர் கண்டிப்பா இருப்பாராக்கும்.. ஆனா நீங்க வர்றதை பார்த்தாத்தான் எங்களுக்குப் பயமா இருக்கு.. சிம்புகிட்டேயும் அவன் அப்பன்கிட்டேயும் யார் அடி வாங்குறதுன்னு..

உண்மைத் தமிழன் said...

//முரளி said...
அழகோவியம்..உயிரானது..
புவி மீதிலே நடமாடுது!..

கவியாயிரம் பல பாடுது!
புதுக்காவியம் அரங்கேறுது!

லவ்லி லிசா! லவ்லி லிசா!//

பாட்டெல்லாம் சரிதான்.. நீ எப்ப தாத்தா வேஷம் கட்டுவ..? நான் கண்ணை மூடுறதுக்குள்ள திரும்பவும் சினிமா ஸ்கிரீன்ல வந்திருப்பு..

உண்மைத் தமிழன் said...

//அர்விந்த் சாமி said...
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..!

வரவன் போறவன் எல்லாம் என் மைக்கைப் பிடுங்குறான்!

டேய் முரளி என் மைக்கைக் குடுடா!

பாடல் மைக்கே! எங்கே நீ எங்கே!
கண்ணில் வழியுதடி கண்ணீர்!

கண்ணுக்குள் நீதான்! கண்ணீரில் நீதான்!
கண் மூடிப் பார்த்தான் நெஞ்சுக்குள் நீதான்!
என்னான்னதோ ஏதானதோ சொல்!

மைக் : போடா வெண்ணெய்! அதான் முரளி பிடுங்கிகிட்டானே! அப்புறம் என்ன என்னானதோ ஏனாதோன்னு!//

அரவிந்த்சாமி மைக்கே போடா வெண்ணை என்கிறதா? கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்.. உடனே கழகத்திற்குள் வந்து சேர்.. அன்னை த்ரீஷா அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.. கவலை வேண்டாம்.. அந்த மைக் போனா வேற மைக்.. நான் தரேன்.. வா.. உடன்பிறப்பே வா..

உண்மைத் தமிழன் said...

//உண்மைத் தமிழன் No:2 said...
நானும் இந்த வெளையாட்டுக்கு வர்ட்டா?

உண்மைத் தமிழன் No3 said...
அப்ப என்னையும் ஆட்டைல சேர்த்துக்கணும் சொல்லிட்டேன்!//

ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே..

வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன?

உண்மைத் தமிழன் said...

//ஒண்ணும் வெளங்காதவன் said...
என்ன நடக்குது இங்கே? !?//

ஏம்பா ஒண்ணும் வெளங்காதவனே.. அதான் பேரையே அப்படி வைச்சுக்கிட்டு விளங்கலைன்னு கேட்டா எப்படிச் சொல்றது? அரசியல்.. அரசியல் கட்சி, தேர்தல், வெற்றி, ஆட்சிப் பொறுப்பு, காசு அள்ளுதல்..

இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதச் செயல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது..

முகாம் தலைவர் said...

100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது!

போலி இங்கிலீஷ் காரன் said...

//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //

புளுகாதீர் உண்மைத் தமிழரே!

மேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத்தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்!

உண்மைத் தமிழன் said...

//துளசி கோபால் said...
அட! இன்னிக்கு இங்கே ஒரே கும்மியா?:-))))

ஆடி முடிச்ச எல்லோருக்கும் சுண்டல் விநியோகம் உண்டா?

பிள்ளையார் கோயில் சுண்டல் லெவலுக்கு இப்பக்
கலைமாமணி மலிஞ்சுருச்சா?//

மேடம் ஆடி முடிஞ்சவுடனே அவுங்கவுங்க சுண்டல் சாப்பிட்டுக்குவாங்க..

அப்புறம் இஇந்தக் கலைமாமணி பத்திக் கேட்டீங்கல்லே..

சீக்கிரமே பிளாக்கர்ஸ் வலையுலகத்துல இருக்கிறவகளுக்கும் கலைமாமணி கொடுக்கப் போறாங்களாம்.. எதுக்கும் உங்க பேரை இப்பவே பதிவு பண்ணி வைங்க.. கூடவே தானைத்தலைவரின் போட்டோ இருந்தா அதையும் எடுத்துப் போட்டுட்டு நான் பார்த்த ஒரே தலைவர் இவர்தான்னு ஒரு பதிவு போட்டிருங்க.. அடுத்த வருஷம் உங்ககளுக்கே கலைமாமணி கிடைச்சாலும் கிடைக்கும்..

வேளாண்மைப் பல்கலைக்கழகம் said...

//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//

கோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது!

விண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்!

மேலும் சேர்க்கைக் கட்டணமாம் செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்!

மைக் said...

என்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க!

:(

மத்திய மகளிர் நல வாரியம் said...

//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன?
//

மகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன?

உண்மைத் தமிழன் said...

//முகாம் தலைவர் said...
100 வது பின்னூட்டம் எனக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது!//

கண்டிப்பா உங்களுக்குத்தான் தலைவா.. தொண்டர் படைத் தலைவர் இல்லாம நாங்கள்லாம் இங்கன வாழ முடியுமா? அதான் எனக்கு நல்லாப் புரிஞ்சு போச்சே.. வாழ்க தொண்டரணித் தலைவர்..

உண்மைத் தமிழன் said...

//வேளாண்மைப் பல்கலைக்கழகம் said...
//கவலைப்படாதே.. தோல்வியடைந்தவன் நெஞ்சிலேதான் வெற்றிக்கான உரம் கிடைக்குமாம்//

கோவை வேளாண்மைப் பல்கொலைக் கழகம் தோல்வியடைந்தவர்களை வருக வருக வென வரவேற்கிறது!

விண்ணப் பாரம் ஒன்றிற்கு ரூ 500/- வழங்கப்படும்!

மேலும் சேர்க்கைக் கட்டணமாம் செமஸ்டருக்கு ரூ 6000/- வழங்கப்படும்!//

புரிந்து கொண்டேன் கண்ணா.. புரிந்து கொண்டேன்..

நாங்கள் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் படிக்க வருவோம். பல்கொலைக்கழகங்கள் பக்கமே தலைவைத்துக் கூட படுக்க மாட்டோமாக்கும்..

உண்மைத் தமிழன் said...

//மைக் said...
என்னைத்தான் களவாடுறாங்கன்னு பார்த்தா நான் போட்ட பின்னூட்டத்தையும் களவாண்டுட்டாங்க!//

மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்..

உண்மைத் தமிழன் said...

//மத்திய மகளிர் நல வாரியம் said...
//வேண்ணா பேரை மாத்திட்டு வேற பேர்ல வாங்க.. மகளிர் அணி பொறுப்பாளரா போடுறேன்.. புகுந்து விளையாடலாம்.. என்ன?
//

மகளிர்னா அவ்வளவு இளக்காரமா போயிடுச்சா என்ன?//

நாட்டுல, கட்சில நடக்குற விஷயத்தைத்தான் சொன்னேனுங்க. அதுக்குள்ள எதுக்குங்க மத்திய அரசு வரைக்கும் போயிட்டீங்க.. வாங்க.. வாங்க.. மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..

அடுப்பு வாயன் said...

//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //

கேஸ் எந்த கம்பெனி?

இண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா?

மைக் said...

//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//

:))

நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?

கட்டப் பஞ்சாயத்துத் தலைவர் said...

//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..
//

ம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி? பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா?
முதல்ல யாரு பிராது கொடுத்தது?

ஆஹா! இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே!

கங்குலி said...

தலைவா! சச்சினைத் திட்டாதீங்கப்பா!

பாவம் அவரே வாய கிழிஞ்சி போய் இருக்காரு!

இருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை!

நாமக்கல் சிபி said...

எப்படியோ!

இன்னிக்கும் 100 அடிச்சிட்டீங்க!

வாழ்த்துக்கள்!

எதிர்கோஷ்டி ஏகாம்பரம் said...

100வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க!

உண்மைத் தமிழன் said...

///போலி இங்கிலீஷ் காரன் said...
//ஏம்ப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா.. நான் எம்புட்டுக் கஷ்டப்பட்டு அம்புட்டு தமிழ் டிக்ஷனரியையும் புரட்டிப் பார்த்து ஒரு நல்ல பெயரைப் போட்டுக்கின்னு சும்மா பிலிம் காட்டுக்கின்னு இருக்கேன்.. நம்ம பொழைப்புலயே மண்ணை அள்ளிப் போடுறீங்களே.. //

புளுகாதீர் உண்மைத் தமிழரே!

மேற்கண்ட உங்கள் வாக்கியங்களிலேயே எத்தனை ஆங்கிலக் கலப்புச் சொற்கள் உள்ளன என்று எண்ணி(Count)ப் பாருங்கள்!///

அதான் இதுலேயே சொல்லியிருக்கேனே போலி.. "சும்மா பிலிம் காட்டிக்கின்னு இருக்கேன்"னு.. அப்புறமென்ன?

உண்மைத் தமிழன் said...

//அடுப்பு வாயன் said...
//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்.. //

கேஸ் எந்த கம்பெனி?

இண்டேனா அல்லது பாரத் பெட்ரோலியமா?//

ஐயையோ.. விட மாட்டீங்க போலிருக்கே..

உண்மைத் தமிழன் said...

//மைக் said...
//மைக்ல ஒழுங்கா பாடினாலும், போடுற பின்னூட்டத்தையும் ஒழுங்கா போட்டாலும்தான் கழகத்தின் பொருளாளர் பின்னூட்டத்தை அனுமதிப்பாராக்கும்//

:))

நீயும் நானுமா? கண்ணா நீயும் நானுமா?//

ம்.. இப்படி எப்படி பாட்டு ஒழுங்கா வந்துச்சு.. இனிமே இப்படித்தான் வரணும்.. புரிஞ்சதா?

உண்மைத் தமிழன் said...

கட்டப் பஞ்சாயத்துத் தலைவர் said...
//மொதல்ல நம்ம ஊர் நாட்டாமை பஞ்சாயத்துல இருந்து கேஸை ஆரம்பிக்கலாம்..
//

ம். எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஆளாளுக்குப் பேசிகிட்டே இருந்தா எப்படி? பதினெட்டுப் பட்டி சனமும் வந்தாச்சா?
முதல்ல யாரு பிராது கொடுத்தது?

ஆஹா! இங்கன வெச்சிருந்த சொம்பை எந்தப் பயலோ களவாண்டுட்டானே!

ஆஹா.. அட்டகாசமான ஜோக்.. வாய்விட்டுச் சிரித்தேன் தலைவரே.. சூப்பர்ப்.. தூள்..

உண்மைத் தமிழன் said...

//கங்குலி said...
தலைவா! சச்சினைத் திட்டாதீங்கப்பா!

பாவம் அவரே வாய கிழிஞ்சி போய் இருக்காரு!

இருந்தாலும் இந்தப் பதிவைப் பத்தி நான் எதுவும் கருத்து சொல்லலை!//

கருத்துச் சொல்லைலைன்னு சொல்லிப்புட்டு உள்குத்து குத்துறீகளே கங்குலி.. மார்க்சிஸ்ட் மாநிலமாச்சே.. அதான்.. பழக்க தோஷமாயிருச்சு.. நல்லாயிருங்க..

உண்மைத் தமிழன் said...

//நாமக்கல் சிபி said...
எப்படியோ!

இன்னிக்கும் 100 அடிச்சிட்டீங்க!

வாழ்த்துக்கள்!//

நாமக்கல்லாரே.. செய்ற அம்புட்டையும் செஞ்சுப்புட்டூ எதுவுமே தெரியாத மாதிரி வாழ்த்துறீக பாருங்க.. சத்தியமா நீங்கதான் எங்க கழகத்தின் கொ.ப.செ. இதில் எந்த மாற்றமும் இல்லை. எப்ப வந்து பதவியேத்துக்கப் போறீங்க?

உண்மைத் தமிழன் said...

//எதிர்கோஷ்டி ஏகாம்பரம் said...
100-வது பின்னூட்டம் எங்கள் தளபதி சிபியார் வாழ்க!//

ஏம்ப்பா உங்க தளபதி குத்துக் குத்துன்னு குத்துவாரு. நீங்க பின்னாடியே வந்து வாழ்த்துவீகளாக்கும்..

சரி.. சரி.. ஏதோ நல்லாயிருந்தா சரிதான்..

இது மாதிரி எதுனாச்சும் வந்தா உடனே வந்திருங்க.. சர்ரீங்களா?

அல்லாருக்கும் நானும் பதில் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்.. யாருக்காச்சும் போடலைன்னா உண்மைத்தமிழனை மன்னிச்சிருங்க.. இங்கன வந்து எட்டிப் பார்த்துட்டுப் போன அல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்கோ..

உண்மைத் தமிழன் பி.ஏ said...

இரண்டாவது சதம் அடித்த இளஞ்சிங்கம், அண்ணல், வெற்றி வேந்தன் உண்மைத் தமிழன் வாழ்க!

ஆடாதவன் said...

இன்னைக்கி ஆட்டம் அவ்வளவுதானா இன்னம் மிச்சம் இருக்கா

உண்மைத் தெண்டன் said...

வருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க

வருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க

வருங்கால முதல்வர் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க