தமிழனின் தத்துவங்கள்

மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?

சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?

சைக்கிள்ல போனா 'சைக்கிளி'ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?

டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது.

எவ்ளோ காசு கொடுத்து பிளேன்ல போனாலும் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்க முடியாது..

'கீபோர்ட்ல' 'கீ ' இருக்கும்.. ஆனால் மதர் போர்ட்ல 'மதர்' இருக்க முடியுமா?

பிரஷ்ஷை வைச்சு பல்லை கிளீன் பண்ணலாம்.. ஆனா பல்லை வைச்சு பிரஷ்ஷை கிளீன் பண்ண முடியுமா?

பேண்ட் போட்டு முட்டி போட முடியும். ஆனா முட்டி போட்டுட்டு பேண்ட் போட முடியுமா?

இன்பாக்ஸ்ல இலை பார்க்க முடியும். ஆனால் மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் பார்க்க முடியுமா?

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விட்டா குடிச்சாலும், செத்தப்புறம் எல்லாருக்கும் பால்தான்..

சவுத் இண்டியால நார்த்தாங்காய் கிடைக்கும்.. ஆனால் நார்த் இண்டியால சவுத்தாங்காய் கிடைக்குமா?

பச்சை மிளகாய்ல பச்சை இருக்கும்.. ஆனா கொடை மிளகாய்ல குடை இருக்குமா?

லன்ச் பேக்ஸ்ல லன்ச் எடுத்திட்டுப் போகலாம்.. ஆனால் ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்திட்டுப் போக முடியாது..

மெழுக வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம். ஆனால் கொசுவ வைச்சு கொசுவத்தி செய்ய முடியாது.

கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்.. ஆனால் கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.

மின்னலை பார்த்தா கண்ணு போயிரும்.. ஆனால் பாக்கலைன்னா மின்னலும் போயிரும்..

நீ எவ்ளோ பெரிய நீச்சல்காரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீந்த முடியாது.

நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும்.. பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா?

க்ரீம் பிஸ்கெட்ல கிரீம் இருக்கும்.. ஆனாநாய் பிஸ்கெட்ல நாய் இருக்குமா?

சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வைச்சு எடுத்திட்டுப் போகலாம்.. ஆனா டிபன் கேரியர்ல சைக்கிள வைச்சு எடுத்திட்டுப் போக முடியாது.

நீ எவ்ளோ பெரிய டான்ஸரா இருந்தாலும் உன்னோட சாவுக்கு உன்னால ஆட முடியுமா?

காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..

டிரெயினுக்கு டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம்ல உக்காரலாம்.. ஆனா பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்கார முடியாது.

சோடாவ பிரிட்ஜ்ல வைச்சா கூலிங் சோடா ஆகும்..அதையே வாஷிங் மெஷினுக்குள்ள வைச்சா வாஷிங் சோடா ஆகுமா?

அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸால பென்சில் பண்ண முடியாது.

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர். உள்ள போயி டிக்கெட் வாங்குறது ஆபரேஷன் தியேட்டர்.

சிற்பி கல்லை உளியால அடிச்சா அது கலை.. நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை..

நாம எவ்ளோதான் வேகமாக நடந்தாலும் ஒரு கால் முன்னாடி போனா ஒரு கால் பின்னாடிதான் இருக்கும்..

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்.. ஆனாகுப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது..

வாயால நாயுன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?

மண்டைய மண்டைய ஆட்டுறது டிஸ்கோ. மண்டைய போட்டா ஆடுறது டப்பாங்குத்து..

எத்தனால் குடிச்சா நாலு பேர் முன்னாடி ஆடலாம்.. மெத்தனால் குடிச்சா நாலு பேர் உன் முன்னாடி ஆடுவாங்க..

வேலை செஞ்சாத்தான் சோறு..வேலை ரொம்ப செஞ்சா போரு..

காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி.. அதுவே நம்ம மேல இருந்தா நாம சட்னி..

தூங்கப் போறதுக்கு முன்னால தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. எந்திரிக்கப் போறதுக்கு முன்னால எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

நீங்க பைக்ல எவ்ளோதான் பாஸ்ட்டா போனாலும் உங்களையே நீங்க ஓவர்டேக் பண்ண முடியாது..

கோல்டு செயினை அடகு வைச்சு சைக்கிள் வாங்கலாம்.. ஆனா சைக்கிள் செயினை அடகு வைச்சு கோல்டு வாங்க முடியாது..

ஆம்பளைங்க அடிபட்டா ஆம்புலன்ஸ் வருமாம்.. அப்போ பொம்பளைங்க அடிபட்டா பொம்புலன்ஸா வரும்..?

ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்.. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா?

பாய்ஸன் பத்து நாள் ஆனாலும் பாயாஸம் ஆக முடியாது. ஆனாபாயாஸம் பத்து நாள் ஆனா பாய்ஸன் ஆயிரும்..

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும்.. ஆனா ஆயிரம் யானைக நினைச்சாலும் ஒரு எறும்பைக்கூட கடிக்க முடியாது..

புயலால கரையைக் கடக்க முடியும்.. ஆனா கரையால புயலைக் கரைக்க முடியுமா?

செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஆனா மனுஷனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது..

நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வைச்சிருந்தாலும் அதுல எவ்ளோதான் ரீசார்ஜ் பண்ணினாலும் உன்னால உனக்கே கால் பண்ண முடியாது..

என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது..

இன்னிக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனா நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதால நன்றின்னு வாயால சொல்ல முடியாது..

என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும் அதால அவிச்ச முட்டை போட முடியுமா?

நாய்க்கு நால் கால் இருந்தாலும் அதால கால் மேல் கால் போட்டு உக்கார முடியாது.

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம். பால் கொட்டினா வேற பால் வாங்கலாம். ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமா?

Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..

நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது..

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்ல் பிட் அடிக்கலாம். ஆனா பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது..

ஆயிரம்தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு..

என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டுதான் சாப்பிடணும்..

நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது..

காசு இருந்தா கால் டாக்ஸி. காசு இல்லேன்னா கால்தான் டாக்ஸி..

பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்.. ஆனா கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?

இட்லிப் பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்க சாப்பிட முடியுமா?

என்னதான் உக்காந்து சாப்பிடற அளவுக்குச் சொத்து இருந்தாலும் பாஸ்ட்புட் கடைக்குப் போனா நின்னுதான் சாப்பிடணும்..

கொஞ்சம் பணம் கொடுத்து குடை வாங்கலாம்.. எவ்ளோ பணம் குடுத்தாலும் மழையை வாங்க முடியுமா?

தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னன்னா..?என்னால ஒரு புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தன்னம்பிக்கை.. என்னால மட்டும்தான் புல் அடிச்சிட்டா ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தலைக்கனம்..

19 comments:

சிறில் அலெக்ஸ் said...

இந்தப் பதிவும் இத்தன நீளமா..

எல்லாம் உங்களோட சொந்த ஐடியாக்களா?

நல்லாயிருந்துச்சு

முரளி கண்ணன் said...

nice nice

வவ்வால் said...

எல்லா பத்திரிக்கைல வந்த கடியையும் எடுத்து போட்டதுக்காக அந்த கடிகளை உருவாக்கியவங்க வந்து கடிக்கிறதுக்கு முன்னர் ஓடி போய்ருங்க!

நாங்கலாம் பரம்பரை கடி மன்னர்கள் ஆரம்பிச்சா நிறுத்த மாட்டோம்ல! உங்களுக்குள்ள முழிச்சுக்கிட்டு இருக்க "மிருகம்" எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு, வீம்பா அதை எழுப்ப வேண்டாம்!

ச்சின்னப் பையன் said...

கடி!! கடி!! நிறைய கேள்விப்படாத கடியா இருந்தது...:-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சிறில் அலெக்ஸ் said...
இந்தப் பதிவும் இத்தன நீளமா.. எல்லாம் உங்களோட சொந்த ஐடியாக்களா? நல்லாயிருந்துச்சு..//

நீளம் கொஞ்சந்தான் ஸார்..

எல்லாம் தொகுத்து அளித்ததுதான் ஸார்..

தேங்க்ஸ் ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//முரளி கண்ணன் said...
nice nice..//

மிக்க நன்றி முரளி..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வவ்வால் said...
எல்லா பத்திரிக்கைல வந்த கடியையும் எடுத்து போட்டதுக்காக அந்த கடிகளை உருவாக்கியவங்க வந்து கடிக்கிறதுக்கு முன்னர் ஓடி போய்ருங்க!//

வவ்ஸ்.. எல்லாம் இ-மெயில்ல வந்தது.. SMS-ஆ வந்ததுதான்.. மொத்தமா தொகுத்துப் போட்டேன்.. எங்க ஓடுறது.. எழுதி, பப்ளிஷ் பண்ணி எட்டு மாசம் கழிச்சுத்தான் மொத கமெண்ட்டே வந்திருக்கு..

//நாங்கலாம் பரம்பரை கடி மன்னர்கள் ஆரம்பிச்சா நிறுத்த மாட்டோம்ல! உங்களுக்குள்ள முழிச்சுக்கிட்டு இருக்க "மிருகம்" எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு, வீம்பா அதை எழுப்ப வேண்டாம்!//

அடேயப்பா.. அந்த மிருகத்தைத்தான் கொஞ்சம் எழுப்பி விடுங்களேன்.. உங்க மிருகத்தோட 'வல்லமை' என்னன்னு பாத்திருவோம்..

பத்து நாள் ஆப்ஸெண்ட் ஆனதுக்கு மொதல்ல ரீஸனை சொல்லிட்டு அப்புறமா பிலிம் காட்டு வவ்ஸ்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ச்சின்னப் பையன் said...
கடி!! கடி!! நிறைய கேள்விப்படாத கடியா இருந்தது...:-)//

ச்சின்னப்பையன்.. உங்களுக்கேத்த கடியாத்தானே இருந்தது.. அப்புறம் ஏன் முதல் தடவை பப்ளிஷ் பண்ணப்ப யாருமே கண்டுக்கல..?

சம்திங் ராங்..

அனுமதி கேட்டு இருக்கும் அனுமாரு said...

ஐயா,
நான் இங்கே கும்மி அடிக்கலாம் என்று இருக்கேன். தங்கள் அனுமதிக்கிடைக்குமா

தெலுங்குல தத்துவம் கேட்பவன் said...

மீரு டிரான்ஸ்லேட் செய்யண்டி

கும்ப நினைப்பவன் said...

ஆஸ்திரேலியா,அமெரிக்கா, அண்டார்டிகா எல்லோரும் இங்கே வாங்க

கும்பலோ கும்பல் said...

கும்ப வாங்க, கும்ம வாங்க... ஆறுவித்தியாசங்கள் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

சாபம் விடுபவன் said...

பின்னுட்டாங்கள் ரிலீஸ் பண்ணாத உண்மைத்தமிழன் சார், பிலாக்கர் வேலை செய்யாமால் போக என சாபம் விடுறேன்.

அரிசி மண்டி வைத்திருப்பவன் said...

அய்யாறு பதினொன்னு தானே... அய்யாறு எட்டு எப்படி ஆகும்

கருத்த மச்சான் பிரண்டு said...

அதர் அனானி ஆப்சன்களை திறந்து வைத்திருக்கும் கருத்து சுதந்திரக்காவன்
எங்க கருத்த மச்சான் உண்மைத்தமிழன் வாழ்க

பகல் காக்கா said...

பின்னூட்டங்களுக்குப் பதில் எங்கே? வவ்வாலுக்கு மட்டும் பதில் சொல்றீங்க...

வடிவேலு பிரண்டு முத்துக்காளை said...

வாங்க கடிச்சு கடிச்சு விளையாடலாம்

கடி வாங்கியவன் said...

கடி வாங்கியவன்

எத்தனை கடிதான்யா தாங்குறது.. மூக்கால அழுகறதுதான் 15 பக்கம்னா, கடிக்கிறதும் 10 பக்கமா? உ.தமிழா உனக்கே இது நியாயமா..?

abeer ahmed said...

See who owns chinaepulse.com or any other website:
http://whois.domaintasks.com/chinaepulse.com