சுதந்திர நாள் அல்ல; துக்க நாள்

என்னைப் பொறுத்தவரையில் நான் இதை சுதந்திரம் பெற்ற நாள் என்று சொல்ல மாட்டேன். அடிமையும், மடமையும், ஒழுக்கக் கேடும், நேர்மைக் கேடும் ஏற்பட ஏதுவான துக்க நாள் என்றுதான் சொல்வேன். இதை நான் இன்று மாத்திரம் சொல்லவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று என்றைக்கு வெளியிடப்பட்டதோ, அன்றே சொன்னவன் நான்.

காலித்தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம். அயோக்கித்தனத்துக்குப் பெயர் அஹிம்சை. சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரஹம். தான் பதவி பெற்றக் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு எதிர்க்கட்சி ஆளாவது முதலிய அயோக்கியத்தனங்கள் எப்படி யோக்கியமான சுதந்திரமாக இருக்க முடியும்? மற்றும் இன்றைய சுதந்திரம் என்பதில் எந்த அயோக்கியத்தனமான காரியம் விலக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியும்? இதை சுதந்திர ஆட்சி என்று வயிற்றுப் பிழைப்பு, பதவி வேட்டை தேசியவாதிகளும், மக்களும்தான் சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, நேர்மையான அறிவுள்ள ஜன சமுதாயத்தால் சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

- விடுதலை(15.8.1972)யில் பெரியார்