பலி


இந்தத் திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில், அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை இன்றைக்கும் மனிதன் எதற்காகக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோவிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ, அது போலவே ஆணுக்குப் பெண்ணைப் பலி கொடுக்கிற விழாதானே திருமணம்? இந்த நாட்டில் மக்கள் தொகையில் சரி பாதியான பெண்கள் இனத்தை எதற்காக இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? ஆண்களும், பெண்களும் இத்தகைய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களையெல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா?

- 'விடுதலை'(03.09.1973)யில் பெரியார்