தேர்தலுக்காக


காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி செய்து கொண்டவுடன் தி.முக., “நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டோம்” என்று சொல்லி தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று இன்று ஆட்சிக்கும் வந்துவிட்டார்கள். தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சினையாக ஆகிவிட்டதால் அவர்கள் அதைப் பற்றி பேச்சு மூச்சுவிடக்கூடாத நிலையில் இருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் காங்கிரஸார் கையில் இருப்பதால் அவர்களுக்குப் பயந்து கொண்டு அடிக்கடி தி.முக.வினர் காலாகாலம் பார்க்காமல், “நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை கைவிட்டுவிட்டோம்; விட்டு விட்டோம்; விட்டே விட்டோம்” என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்துவிட்டார்கள்.

- விடுதலை(30.3.1967)யில் பெரியார்